தலைமுடி குட்டையாக இருக்கிறதா? நீண்டு வளர்வதற்கு 30 நாட்களுக்கு ஒரு முறை இதை கண்டிப்பாக செய்து பாருங்க!

short-and-long-hair
- Advertisement -

தலை முடி குட்டையாக இருக்கும் பொழுது நீளமான கூந்தல் வேண்டும் என்று அதிகம் விரும்புவது உண்டு. அதுவே நீளமான கூந்தல் இருப்பவர்கள் அதை வெட்டி அவர்களாகவே குட்டையாக்கி விடுவது உண்டு. எல்லோருக்கும் நீளமான கூந்தல் கிடைத்து விடுவதில்லை! எனவே இருக்கின்ற கூந்தலை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர நாமாகவே ஹேர் கட் செய்து குட்டையாக்கி கொண்டே இருந்தால் நாளடைவில் முடியின் வளர்ச்சி தடைபட்டு, மீண்டும் அந்த முடி வளர்வது தடுக்கப்படுகிறது. எனவே முடியை அடிக்கடி வெட்டுபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. மேலும் குட்டையான முடி உடையவர்கள் 30 நாட்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக இதை செய்ய வேண்டும். அப்போது தான் முடி நீண்டு வளரத் துவங்கும், அது என்ன? என்பதை இனி பார்ப்போம்.

அடிக்கடி ஹேர் கட் செய்வது தவறு என்றாலும், 30 நாட்களுக்கு ஒருமுறை இப்படி கண்டிப்பாக ஹேர் கட் செய்ய வேண்டும். உங்களுடைய முடி எப்படிப்பட்ட தன்மையுடன் இருந்தாலும் உங்களுக்கு நுனி முடி பிளவு என்கிற பிரச்சினை இருந்தால் நிச்சயம் நீங்கள் 30 நாட்களுக்கு ஒரு முறை முடியை வெட்டி விட வேண்டும். நுனி பகுதியில் முடி இரண்டாக பிளந்து காணப்படும். இது வறட்சி அடைந்த கூந்தலை குறிக்கிறது.

- Advertisement -

கூந்தல் எப்பொழுதும் வறட்சி இல்லாமல், அதே சமயத்தில் பிசுபிசுப்பு இல்லாமல் ஃப்ரஷ்ஷான எண்ணெய் தன்மையுடன் இருக்க வேண்டும். அப்போது தான் முடியின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கும். நுனி முடி பிளவு ஏற்பட்டால் கூந்தல் வளர்ச்சி தடைபடுகிறது. எனவே 30 நாட்களுக்கு ஒரு முறை அந்த நுனிப் பகுதியை மட்டும் ஒரு இன்ச் அளவிற்கு சரிசமமாக வெட்டிவிடுங்கள். அதற்கு மேல் வெட்ட வேண்டாம். இது போல் தொடர்ந்து செய்து வர நுனி முடி பிளவு என்கிற பிரச்சினை மறையும், இதனால் கூந்தல் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

தலைமுடிக்கு கண்டிப்பாக வாரம் 2 முறை சுத்தமான தேங்காய் எண்ணெயுடன், சிறிதளவு சிகைக்காய், அரை மூடி எலுமிச்சை சாறு மற்றும் அரை டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து குழைத்துக் கொள்ளுங்கள். இதை தலையில் தடவி நன்கு தலை முடியை அலசி வந்தால் தலை முடி தூசுகள், எண்ணெய் பிசுக்குகள் இல்லாமல் சுத்தமாக இருக்கும். அதே போல நல்ல பளபளப்புடனும் இருக்கும்.

- Advertisement -

தலை முடி அதிகமாக உதிரும் பொழுது தேங்காய் பாலுடன், தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு தலைமுடிக்கு மசாஜ் செய்து பின்னர் தலைக்கு அலசிப் பாருங்கள். நல்ல ஒரு மாற்றம் தெரிய ஆரம்பிக்கும். எப்பொழுதும் தலைமுடிக்கு செயற்கையான விஷயங்களை தவிர்க்க வேண்டும். இயற்கையான விஷயங்களை கையாளும் பொழுது, அது இயற்கையாகவே நல்ல வளர்ச்சியை எட்டுகிறது.

இறந்த திசுக்களை அகற்ற உச்சந்தலை பகுதியில் நன்கு எண்ணெய் தடவிய பிறகு நெருக்கமான பற்களை உடைய சீப்பை கொண்டு நான்கு முறை நன்கு வாரி விடுங்கள். இதனால் தேவையற்ற முடிகள் அகன்று புதிய முடி வளரத் துவங்கும். எண்ணெய் சுரப்பிகள் தூண்டப்பட்டு முடி வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க செய்யும். இது போல செய்யும் பொழுது குட்டையான முடி கண்டிப்பாக நல்ல அடர்த்தியுடன் நீளமாக வளரத் துவங்கும். நீங்களும் ட்ரை பண்ணி பயனடையுங்கள்.

- Advertisement -