அக்கம்பக்கத்தினர் தொல்லை தீர வீட்டின் வாசலில் 1 எழுமிச்சையை இப்படி செய்து வையுங்கள்! யாருடைய திருஷ்டியும், கெடு எண்ணங்களும் நம்மை ஒன்றும் செய்யாது.

lemon-home
- Advertisement -

என்னதான் இரத்த உறவாக இருந்தாலும் நமக்கு முதலில் ஒரு பிரச்சனை என்றால் அக்கம் பக்கத்தினரின் ஆதரவு தான் தேவை. அருகில் இருப்பவர்கள் தான் ஓடோடி வந்து முதலில் உதவி செய்ய முடியும். அப்படி இருக்கும் பொழுது இந்த அக்கம்பக்கத்தினர் தொல்லைகளை எல்லாம் சற்று அனுசரித்து செல்வது நல்லது. யாரை வேண்டுமானாலும் நாம் பகைத்து கொள்ளலாம். ஆனால் பக்கத்து வீடு, எதிர் வீடு என்று இருக்கும் அக்கம்பக்கத்தினரை எப்பொழுதும் பகைத்துக் கொள்ளக்கூடாது. இவர்களின் தொல்லை உங்களுக்கு இருந்தால் அதிலிருந்து விடுபட இப்படி உங்கள் வீட்டு வாசலில் செய்து வைத்துக் கொள்ளலாம். அப்படி நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவுக்கு போகலாம்.

home

ரத்த உறவுகள் கூட உதவி செய்ய யோசிக்கும் இந்த காலகட்டத்தில் கூப்பிட்ட குரலுக்கு மனிதாபிமானத்தோடு ஓடி வருபவர்கள் அக்கம்பக்கத்தினர். நமக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று கண்ணையும், வாயையும் பொத்திக் கொண்டு அவர்கள் எப்பொழுதும் இருப்பதில்லை. சக மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஆபத்து நேரும் பொழுது அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்களைக் ஒரு பொழுதும் இறைவன் மன்னிப்பதில்லை.

- Advertisement -

அக்கம்பக்கத்தினர் ஆதரவு நமக்கு தேவை தான் என்றாலும் சில சமயங்களில் சிறு சிறு விஷயங்களுக்காக அவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டு பகையை வளர்த்துக் கொண்டு விடுகிறோம். அக்கம்பக்கத்தினர் பகை என்பது மிகவும் மோசமான ஒரு மனநிலையை நமக்கு கொடுத்து விடும். பிடிக்குதோ! பிடிக்கவில்லையோ! தினமும் அவர்களுடைய முகத்தை பார்த்துவிட்டு தான் நாம் வெளியில் செல்ல வேண்டியிருக்கும்.

எலுமிச்சை

பொல்லா கண்திருஷ்டியில் முதல் வகை அக்கம்பக்கத்தினர் கொடுக்கும் திருஷ்டி தான். உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் அதனைக் கண்டு முதலில் மனம் குளிர்பவர்கள் பகை கொண்ட இந்த அக்கம்பக்கத்தினர் தான். புதிதாக ஏதாவது ஒரு பொருளை வாங்கி விட்டால் அவர்களுக்கு மனம் பொறுப்பதில்லை. பொறாமைத் தீயில் வேகும் இத்தகைய அக்கம்பக்கத்தினரின் தொல்லை நீங்க நாம் செய்ய வேண்டியது என்ன?

- Advertisement -

நம்முடைய வளர்ச்சியை கண்டு வயிற்றெரிச்சல்படும் இந்த அக்கம் பக்கத்தினர் வீட்டை தாண்டி செல்லும் ஒவ்வொரு முறையும் வீட்டு வாசலைப் பார்த்துக் கொண்டு தான் செல்வார்கள். அவர்களுடைய பொறாமை கண்கள் நம்முடைய குடும்பத்தை பாதிக்காமலிருக்க அமாவாசை தினங்களில் வீட்டின் வாசலில் இருபுறமும் எலுமிச்சை பழத்தை இப்படி செய்ய வேண்டும். ஒரு முழு பெரிய எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை இரண்டாக வெட்டி மஞ்சள் தடவிக் கொள்ளுங்கள். பின்னர் மஞ்சளின் மீது பொட்டு வைப்பது போல குங்குமத்தால் பொட்டு வைக்க வேண்டும்.

elumichai lemon

இப்படி எலுமிச்சை பழங்கள் உடைய இரண்டு மூடிகளிலும் செய்து வீட்டின் வாசலில் இரண்டு புறமும் வைத்து விட வேண்டும். எலுமிச்சை என்பது தேவ கனியாக கூறப்படுகிறது எனவே இந்த எலுமிச்சை பழம் எத்தகைய தீய ஆற்றல்களையும் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும். நம் வீட்டை கடந்து செல்லும் நபர்களுடைய பொறாமை பார்வைகள் நம்மை தாக்காமல் அந்த எழுமிச்சை பழம் கிரகித்துக் கொள்ளும். இது போல் ஒவ்வொரு அமாவாசையும் செய்து பாருங்கள். எத்தகைய பகையும் நம்மை பாதிக்காது செய்துவிடும். எனவே அக்கம் பக்கத்தினரை முடிந்தவரை பகைத்துக் கொள்ளாமல், அவர்களுடைய தீய எண்ணங்கள் நம்மை பாதிக்காமல் செய்ய இது போல் எளிய பரிகாரத்தை செய்வது சிறப்பு.

- Advertisement -