இந்த நெயில் பாலிஷ் வைத்து இதையெல்லாம் செய்யலாம்னு தெரிஞ்சிச்சு இருந்தா எவ்ளோ காசு மிச்ச படுத்தி இருக்கலாம். இப்ப மட்டும் என்னங்க இதை தெரிஞ்சிக்கிட்டு இனி மிச்ச படுத்த வேண்டியது தானே.

- Advertisement -

அழகுக்காக பயன்படுத்தும் பொருள்களில் ஒன்றான இந்த நெயில் பாலிஷ் வைத்து வீட்டில் மற்ற உபயோகங்களுக்கு எப்படி பயன்படுத்துவது என்பதோடு அல்லாமல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு பொருட்களை கூட இந்த நெயில் பாலிஷை வைத்து அழகாக பராமரித்து கொள்வதோடு, பணத்தையும் மிச்ச படுத்தலாம் என்ற தகவலை தான் இந்த பதிவில் நாம் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். வாங்க அது என்னென்னவென்று பார்க்கலாம்.

பெண்கள் காலில் அணியும் கொலுசு, மெட்டி போன்றவை அணிந்த சிறிது நாட்களுக்கெல்லாம் கறுத்து போய் விடும். கொலுசை கூட சுத்தம் கொள்ளலாம் மெட்டியை அப்படி கழற்றி எல்லாம் சுத்தம் செய்ய முடியாது. இனி எது போன்ற வெள்ளி நகை கருக்காமல் இருக்க வெள்ளை நிற நெயில் பாலிஷை இதன் மேல் தேய்த்து விட்டு பிறகு பயன்படுத்தினால் இந்த நகைகள் சீக்கிரத்தில் கருக்கவே செய்யாது.

- Advertisement -

நாம் அணியும் கவரிங் வளையல்கள் அடிக்கடி கருத்து போய் மாற்ற வேண்டிய சூழ்நிலை வரும், இனி அப்படி மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. கவரிங் வளையல்களில் மீது இந்த வெள்ளை நிற நெயில் பாலிஷை போட்டு விடுங்கள். அதன் பிறகு இந்த நகைகள் அவ்வளவு சீக்கிரத்தில் கருக்காது. இந்த நெயில் பாலிஷை போட்ட பிறகு நீங்கள் தினமுமே இந்த வளையலை பயன்படுத்தினால் கூட குறைந்தது ஆறு மாதமாவது கருக்காமல் இருக்கும். அடிக்கடி இந்த நகைகளை மாற்ற வேண்டிய செலவும் இருக்காது பணமும் மிச்சமாகும்.

அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி வைத்தால் நீங்கள் எப்படி வைத்தாலும் எண்ணெய் ஒழுகி அதை வைக்கும் இடங்களில் எண்ணெய் கறை படிந்து விடும். அதற்கு நீங்கள் அகல்விளக்கில் உள் புறம் நெயில் பாலிஷ் தடவி காய வைத்த பிறகு எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றினால் ஒழுகாது.

- Advertisement -

சேலை சுடிதார் போன்றவை கட்டும் பொழுது விலகாமல் இருக்க பின்னை பயன்படுத்தும் போது அந்த பின்னின் நிறம் தனியாக தெரியாமல் இருக்க, நீங்கள் உடுத்தும் ஆடையின் நிறத்திற்கு ஏற்ப பின்னில் நெயில் பாலிஷ் போட்டு பிறகு பயன்படுத்தினால் பின் குத்தியிருக்கும் இடமே தெரியாது. அது மட்டும் இன்றி பின் துருப் பிடித்து அந்த கறை துணியில் ஒட்டி கொண்டு துணியும் வீணாகாமல் இருக்கும்.

குக்கர் மூடியில் உள்ள கைப்பிடி ஸ்க்ரூ அடிக்கடி லூசாகி விடும். இது போன்ற சமயங்களில் அந்த ஸ்க்ரூக்களில் கொஞ்சம் நெயில் பாலிஷ் தடவிய பிறகு போட்டு விட்டால், ஸ்குரு மறுபடியும் கழண்டு வராது இதற்கு எந்த கலர் நெயில் பாலிஷ் வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: இந்த மழைக்காலத்தில் படையெடுக்கும் பூச்சிகள், வண்டுகள், மட்டுமல்ல கரப்பான்பூச்சி ,கொசு , என அனைத்திற்கும் குட்பை சொல்லலாம். இந்த ஒரு ஸ்பிரே மட்டும் உங்களிடம் இருந்தால் போதும். இது எதுவும் நீங்கள் இருக்கும் பக்கம் கூட வராது

இதில் உள்ள குறிப்புகள் ஒவ்வொன்றும் உங்களின் தினசரி வீட்டு வேலைகளை எளிதாக செய்யவும் அதே போல உங்களின் பணத்தையும் மிச்சமாக்க பல குறிப்புகள் உள்ளது. இதை நீங்களும் பயன்படுத்தி பயன் அடையுங்கள்.

- Advertisement -