இந்த மழைக்காலத்தில் படையெடுக்கும் பூச்சிகள், வண்டுகள், மட்டுமல்ல கரப்பான்பூச்சி ,கொசு , என அனைத்திற்கும் குட்பை சொல்லலாம். இந்த ஒரு ஸ்பிரே மட்டும் உங்களிடம் இருந்தால் போதும். இது எதுவும் நீங்கள் இருக்கும் பக்கம் கூட வராது

- Advertisement -

மழைக்காலம் வந்து விட்டாலே இந்த குட்டி, குட்டி கொசுக்களும், வண்டுகளும், பூச்சிகளும் , என்னவென்றே சொல்ல தெரியாத சில பூச்சிகள் கூட இந்த நேரத்தில் வீட்டை நோக்கி படையெடுத்து வந்து விடும். இதை எப்படி விரட்டுவது என்று புரியாமல் விழி பிதுங்கி விடும். ஏனென்றால் எதைத் தொட்டாலும் அங்கே அந்த குட்டி குட்டி கொசுக்கள் இருக்கும். சமையலறை துணி வைக்கும் இடம் என ஒரு இடத்தையும் இந்த பூச்சிகள் மிச்சம் வைக்காது. இவற்றை எளிமையாக விரட்ட நம் வீட்டின் சமையல் அறையில் இருக்கும் இந்த பொருள் போதும் அதை வைத்து இந்த பூச்சிகளை எப்படி விரட்டுவது என்று பார்க்கலாம்.

மழைக்கால பிரச்சனைகள் பல இருந்தாலும் இந்த பூச்சிகளின் தொல்லையை தாங்கவே முடியாது. என்ன தான் நாம் பார்த்து பார்த்து சுத்தம் செய்து கொண்டே இருந்தாலும் கூட,பகல் வேளையில் இந்த குட்டி கொசுக்களின் தொல்லை என்றால், மாலை நேரம் வந்தால் பெரிய கொசு தொல்லை அதிகமாக இருக்கும். இதில் வீட்டை சுற்றி இருக்கும் ஈரவாடைக்கு கரப்பான் பூச்சி, எலி என்று வீட்டில் நம்மை தவிர மற்ற ஜீவராசிகள் அனைத்துமே வாசம் செய்ய ஆரம்பித்து விடும். இவற்றை விரட்ட இதோ இந்த எளிய முறையை பயன்படுத்தி பாருங்கள் இனி உங்கள் வீட்டில் நீங்கள் மட்டும் தான் இருப்பீர்கள் பூச்சிகள் இருக்காது.

- Advertisement -

அதற்கு முதலில் ஒரு பவுலில் சமையலுக்கு பயன்படுத்தும் பேக்கிங் சோடா இரண்டு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் இரண்டு ஸ்பூன் அளவிற்கு சமையலுக்கு பயன்படுத்தும் வினிகரையும் எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் கட்டி பூங்கற்பூரம் கொஞ்சம் பவுடர் செய்து இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதை மூன்றையும் நன்றாக கலந்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் பூச்சிகளை விரட்டும் மருந்து தயாராகி விட்டது.

இதை உங்கள் சமையலறையில் சிங், தண்ணீர் வெளியேறும் பைப், ஜன்னல் திரை, கதவு இடுக்கு இப்படி இந்த பூச்சியும் கொசுக்களும் வரும் வழி என்று உங்களுக்கு எதெல்லாம் தோன்றுகிறது அங்கெல்லாம் அடிக்கலாம்.

- Advertisement -

அது மட்டுமின்றி இதை சாதாரணமாக ரூம் ஸ்ப்ரே போலவும் அடித்து விடலாம். இதனால் மற்ற பொருள்களில் பட்டு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த ஒரு ஸ்ப்ரே தயார் செய்து வைத்து இந்த மழைக்கால பூச்சி கொசுக்களில் இருந்து உங்களை உங்கள் வீட்டையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:: பித்தளை விளக்குகள் புதுசு போல பளபளக்க சமையல் கட்டில் இருக்கும் இந்த மாவு போதுமா? இது தெரிஞ்சிருந்தா இவ்ளோ நாளா தேய்க்க கஷ்டப்பட்டிருக்க மாட்டேனே!

இந்த முறையுடன் மாலை நேரத்தில் நீங்கள் வீட்டில் விளக்கு ஏற்றும் போது அந்த விளக்கில் கொஞ்சம் கற்பூரம் நுணுக்கி போட்டு ஏற்றினால் அந்த வாடைக்கும் பூச்சிகள் வராது. இந்த குறிப்பு மிகவும் எளிமையாக செய்ய கூடிய ஒன்று தான் நீங்களும் எந்த முறையை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -