நெஞ்சு சளி நீக்க உதவும் பாட்டி வைத்தியம்

sali-thollai

மழை காலம் அல்லது குளிர்காலம் என்றாலே பலரும் அவதிப்படுவது சளி தொல்லையால் தான். இதற்கு அறிவியல் ரீதியாக பல காரணங்கள் கூறப்படுகின்றன. கடைகளிலும் இதற்கு மருந்துகள் ஏராளம் உண்டு. ஆனால் இந்த நவீன கால மருந்துகள் பலதை சாப்பிடுவதால் எதிர் வினைகள் அதிகம் ஏற்படுகின்றன என்பது தான் மறுக்கமுடியாத உண்மை. நமது சித்தர்களும் ஞானிகளும் சிறு நோய்கள் முதல் பெரு நோய்கள் வரை பலவற்றிற்கு மிக எளிய மருந்தை கண்டுபிடுத்துள்ளனர். இதை தான் நாம் பாட்டி வைத்தியம் அல்லது கை வைத்தியம் அல்லது சித்த மருத்துவம் என்கிறோம். அந்த வகையில் நெஞ்சு சளி போக்க உதவும் மிக அருமையான கை வைத்திய முறையை பார்ப்போம் வாருங்கள்.

siddha vaithiyam

குறிப்பு 1
சிறிதளவு தேங்காய் என்னை எடுத்துக்கொண்டு அதில் கற்பூரத்தை போட்டு நன்கு சுடவைத்து பின் சிறிது நேரம் ஆற வைத்து அதை நெஞ்சில் தடவினால் சளி தொல்லை நீங்கும்.

குறிப்பு 2
பொதுவாக மஞ்சள் ஒரு மிக சிறந்த கிருமி நாசினி என்பது நாம் அறிந்ததே. பாலோடு மஞ்சள் சேர்கையில் அது மருந்தாக மாறுகிறது. பாலை நன்கு காய்ச்சி அதில் சிறிது மஞ்சளை சேர்த்து பருகுவதன் மூலம் சளி தொல்லை நீங்கும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகலாம்

milk and turmaric

குறிப்பு 3
தூய்மையான தேன் மூலமும் சளியை குணப்படுத்தலாம். 100 மி.லி தேனை எடுத்துக்கொண்டு அதை வாணலியில் ஊற்றி அதன் அடர்த்தி குறையும் வரை நன்கு சூடாக்கவும். பின்பு அதில் எலுமிச்சை சாறு மற்றும் லவங்கப்பட்டையை சேர்த்து பயன்படுத்திவர சளி தொல்லையில் இருந்து விடுபடலாம்.

- Advertisement -

குறிப்பு 4
பொதுவாக வெங்காயம் சளியை அதிகரிக்கும் என்று பலர் கருதுவதுண்டு. ஆனால் வெங்காயத்தின் மூலமும் சளியை சரி செய்யலாம். ஒரு வெங்காயத்தை எடுத்து கொண்டு அதை உரித்து பின் நன்கு நசுக்கிக்கொள்ளவேண்டும். அதோடு எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீரை சேர்த்து நன்கு கொதிக்கவைக்க வேண்டும். பின் அதோடு ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். பின் இதனை ஆறவைத்து பருகினால் சளி தொல்லை நீங்கும்.

Onion

மேலே கூறியது போல சளி தொல்லையில் இருந்து விடுபட மேலும் பல கை வைத்தியங்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி உடலுக்கு எந்த ஒரு தீங்கும் இல்லாமல் சளி தொல்லையில் இருந்து எளிதில் விடுபடலாம்.

English Overview:

Some people may suffer with cold for long time. In time it is called as Nenju sali. Here we have suggested some very good home remedies to get away from cold(sali neenga tips in tamil). we have given four nenju sali home remedy in tamil. So grownup people can use it and get away from cold.