தினம் தோறும் தலை சீவும் போது, பெண்கள் இந்த தவறை செய்யவே கூடாது. தீராத துன்பங்களுக்கு விடிவு காலம் பிறக்க, இதைக் கொஞ்சம் மாற்றி தான் பாருங்களேன்!

kungumam
- Advertisement -

தலை சீவும் போது பெண்கள் கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான விஷயத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த குறிப்பு பல பெண்களுக்கு தெரிந்திருக்கலாம். இருப்பினும், குறிப்பிட்ட சில பெரிய பெரிய பிரச்சினைகளுக்குக் கூட, இந்த சின்ன தவறு காரணமாக இருக்கும் என்பதை உணர்த்துவதற்காக, இதைப் பற்றி இன்னும் தெளிவாக, ஆழமாக, சாஸ்திரத்தைப் பற்றி தெரியாத சில பெண்கள், தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களை வலியுறுத்துவதற்காக சொல்ல கூடிய பதிவு என்றும் வைத்துக் கொள்ளலாம்.

kungumam

பொதுவாகவே வீட்டில் இருக்கும் பெண்கள் தான், அந்த வீட்டின் குலத்தை விருத்தி செய்யும் குலதெய்வங்கள். நம் குலத்தை விருத்தி செய்யக்கூடிய, குழந்தை பேறு கொடுக்கக் கூடிய, பெரிய பாக்கியம் அந்த வீட்டின் பெண்களிடத்தில் தான் உள்ளது. இப்படிப்பட்ட பெண்களை யாரும், ஒரு வீட்டில் இழிவாக நடத்தக்கூடாது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். முதலில் ஒரு வீட்டின் மகாலட்சுமி சொரூபமாக சொல்லப்படும் பெண்களிடத்தில், காசு பணம் நகை நட்டு இல்லாமல் இருக்கவே கூடாது.

- Advertisement -

வீட்டில் வசிக்கும் பெண்களது கையில், எப்போதுமே கொஞ்சம் பணத்தை, ஆண்கள் கொடுத்து வைக்க வேண்டும், என்ற விஷயத்தை மறந்து விடாதீர்கள். பெண்கள் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பட்சத்தில் கூட, ஆண்கள் கையில் இருக்கும் வருமானத்தில் ஒரு தொகையை பெண்களிடம் கொடுத்து அவர்களை நிறைவாக வைத்திருக்க வேண்டும். ஒருவருடைய வீட்டில் தீராத கஷ்டம் இருந்தாலும் கூட, அந்த பெண்ணின் இடத்தில் ஒரு பொட்டுத் தங்கமாவது இருக்க வேண்டும். ஒரு சிறிய மூக்குத்தியையாவது தங்கத்தில் அணிந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

women

சரி, அடுத்தபடியாக தலையை சீவும் முறைக்கு வருவோம். பெண்கள் பொதுவாகவே ஃபேஷன் என்ற பெயரில் இப்போதெல்லாம் நேர் வகுடை மாற்றிவிட்டு, கோணல் வகிடு எடுக்கும் பழக்கத்தை வைத்துள்ளார்கள். இது தவறு என்று சொல்லப்படவில்லை. இருப்பினும், பெண்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகளுக்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கு ஒரு உதாரணமாக, காஞ்சி மகா பெரியவா ஆசிரமத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம். ஒருமுறை மகா பெரியவாவை சந்திப்பதற்காக ஒரு தம்பதியினர் வருகை தந்திருந்தனர். அந்தத் தம்பதியினருக்கு ஒரு பிரச்சினை. அதாவது திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இதற்கு தீர்வு காண்பதற்காக மகா பெரியவரை சந்திப்பதற்கு அந்த தம்பதியர் வருகை தந்திருந்தனர்.

kanji-periyava

‘எல்லா முயற்சிகளும் செய்து பார்த்து விட்டோம். அதாவது, மருத்துவத்திலிருந்து ஆன்மீகம் வரை எல்லாம் எங்களை கைவிட்டு விட்டது. இறுதியாக என்ன செய்வதென்று தெரியாமல், மகா பெரியவரின் ஆசீர்வாதத்தை பெற்று செல்லவும், மன அமைதியைத் தேடியும் வந்திருப்பதாக’ அந்த தம்பதியர்கள் தங்களுடைய குறைகளை பெரியவரிடம் கூறிக் கொண்டார்கள்.

- Advertisement -

அப்போது கணவனுடன் வந்த அந்த பெண்ணை பார்த்த மகாபெரியவர், அவர்களுக்கு ஒரு தீர்வினை சொன்னார். உன்னுடைய மனைவி தலை சீவும் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். கோணை வகிடு எடுத்து தலை சீவும் பழக்கத்தை மாற்றிக் கொண்டு, நேர் வகுடு எடுத்து தலை சீவினால் சீமந்தம் நிச்சயம் என்ற வார்த்தையும் அவர் அந்த தம்பதியினருக்கு ஆசீர்வாதமாக வழங்கியுள்ளார்.

kanji-periyava

இவ்வாறாக ராகுவின் அம்சமாக சொல்லப்படும் நம்முடைய தலைமுடியின் காரணமாக கூட, பெண்களுக்கு இப்படிப்பட்ட பெரிய பெரிய பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்த பிரச்சனைகளை தவிர்க்க, நேர் வகிடு எடுத்து, திருமணமான பெண்கள், வகிட்டில் குங்குமம் வைப்பதன் மூலம் பல பெரிய பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

மகா பெரியவரின் வாக்கை ஏற்றுக் கொண்ட அந்தப்பெண், அன்றிலிருந்து நேர் வகிடு எடுத்து தன்னுடைய தலையை சீவ ஆரம்பித்தாள். அந்தத் தம்பதியினருக்கு அடுத்த வருடம் குழந்தை பாக்கியம் கிடைத்தது குறிப்பிடத்தக்க ஒன்று. மகா பெரியவரைப் பற்றி சொல்லப்படும் சம்பவங்கள் எதுவுமே கற்பனை அல்ல. எல்லா சம்பவங்களுமே உண்மையாக நிகழ்ந்தவை தான் என்பதை இந்த இடத்தில் நாம் நினைவு கூற வேண்டும்.

kungumam1

நமக்கு நேரம் நன்றாக இருக்கும் போது, நாம் செய்யும் தவறுகள் நமக்கு பெரியதாக பாதிப்பை ஏற்படுத்துவது கிடையாது. அதே நேரமானது சற்று தடுமாறும் பட்சத்தில், நம்முடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவது இயற்கைதான். ஆகவே, முடிந்த வரை சின்ன சின்ன தவறுகளை திருத்திக் கொண்டு நம்முடைய வாழ்க்கையை வாழ்வதன் மூலம் நாம் மட்டுமல்ல, நம்முடைய குடும்பமும் சுபிட்சம் அடையும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
மகான்கள் படங்களை பூஜை அறையில் வைக்கலாமா? வைக்கக்கூடாதா? வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -