- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்க தீப வழிபாடு

வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்க தீப வழிபாடு

- Advertisement -

நமக்கு நடக்கக்கூடிய ஒவ்வொரு செயல்களுக்கும் அடிப்படையாக திகழ்வது நம்மிடமும் நம்மை சுற்றியும் இருக்க கூடிய ஆற்றலும் தான். நம்மிடம் நேர்மறை ஆற்றல்கள் அதிகமாக இருந்தால் தீமையே நடந்தாலும் அதில் நமக்கு நன்மை கிடைக்கும். அதே போல் நம் வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகமாக இருந்தால் தீய சக்திகள் எதுவும் உள்ளே வராது என்று கூறப்படுகிறது. இதேபோல் எதிர்மறை ஆற்றல்கள் நம்மிடமும் நம் வீட்டிலும் இருந்தால்

நமக்கு எந்தவித நன்மையும் நடக்காது. எந்த ஒரு வேலையை செய்வதாக இருந்தாலும் அதில் தடைகள் ஏற்படும். தாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் கெடும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படாது. சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். அப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றல்களை நம் வீட்டில் இருந்து நீக்கி நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்க தீபம் ஏற்றும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

எந்த ஒரு வீட்டில் காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்படுகிறதோ அந்த வீட்டில் தெய்வ சக்தியின் நடமாட்டம் இருக்கும் என்று கூறப்படுகிறது. சாதாரணமாக பூஜை அறையில் ஏற்றக்கூடிய தீபத்தில் சிறிது மாற்றம் செய்து நாம் ஏற்றினோம் என்றால் கண்டிப்பான முறையில் எதிர்மறை ஆற்றல்களை நம் வீட்டில் இருந்து விரட்டி அடிக்க முடியும்.

இந்த வழிபாட்டை தொடர்ந்து ஏழு நாட்கள் செய்ய வேண்டும். இதற்கு மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கு தேவைப்படும். அடுத்ததாக பிரவுன் கலரில் இருக்கக்கூடிய சோலி வேண்டும். இது அனைத்து விதமான நாட்டு மருந்து கடைகளிலும், பூஜை பொருட்கள் விற்கும் கடைகளிலும், ஆன்லையனிலும் கிடைக்கும். உடையாத நல்ல சோலியாக பார்த்து ஐந்து சோலிகளை வாங்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நல்ல நாளாக பார்த்து ஆரம்பித்து கொள்ள வேண்டும். புதிதாக வாங்கிய மண் விளக்கை தண்ணீரில் போட்டு நன்றாக ஊற வைத்து விட்டு, அந்த அகல் விளக்கை எடுத்து அதற்கு மஞ்சள் சந்தனம் குங்குமம் என்ற மூன்றையும் வைக்க வேண்டும். அதாவது அகல் விளக்கில் மஞ்சளை முழுவதுமாக தடவி சந்தனம் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த அகல் விளக்கை வைப்பதற்கு ஒரு சிறிய தாம்பாளம் ஒன்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். தாம்பாளத்தையும் சுத்தம் செய்த அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இந்த விளக்கை வீட்டு பூஜை அறையில் தான் ஏற்ற வேண்டும். இந்த விளக்கை ஏற்றும் நேரமானது பிரம்ம முகூர்த்த நேரம் ஆக இருக்க வேண்டும்.

- Advertisement -

அதாவது காலை 5 மணிக்குள் இந்த தீபத்தை ஏற்றி விட வேண்டும். அந்த மஞ்சள் குங்குமம் வைத்த தாமாளத்தை வீட்டு பூஜை அறையில் வைத்து அதற்கு மேல் நாம் தயார் செய்து வைத்திருக்கும் அகல் விளக்கை வைக்க வேண்டும். அந்த அகல் விளக்கில் கடுகு எண்ணெயை ஊற்ற வேண்டும். வேறு எந்த எண்ணையும் பயன்படுத்தக் கூடாது.

பிறகு நாம் வாங்கி வைத்திருக்கும் இந்த ஐந்து சோலிகளை அதில் போட வேண்டும். அடுத்ததாக சிவப்பு நிற திரியை இரண்டு திரிகளாக சேர்த்து அந்த விளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றிய பிறகு நம் வாழ்வில் நடக்க வேண்டிய நல்ல விஷயங்களை பற்றி மட்டுமே நினைக்க வேண்டும். இந்த தீபமானது தொடர்ந்து 24 மணி நேரமும் 7 நாட்கள் அணியாமல் அகண்ட தீபமாக எரிய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பூ வைக்கும் போது பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

இப்படி எரிவதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கும். நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். நன்மைகள் உண்டாகும்.

சற்று முன்