பூ வைக்கும் போது பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

flower
- Advertisement -

பெண்களாகப் பிறந்த ஒவ்வொருவருமே கடைசிவரை தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்ற வேண்டுதலை தான் இறைவனிடம் வைப்பார்கள். தன்னுடைய கணவர் ஆயுளோடு இருக்கவும், ஆரோக்கியத்தோடு இருக்கவும், பெண்கள் தலையில் தினமும் பூக்களை சூடிக் கொள்ள வேண்டும் என்பது நம்முடைய இந்து மதத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு சாஸ்திரம். இந்த சாஸ்திரத்தின் அடிப்படையில் தான் ஒரு சில ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பெண்கள் ஒருபோதும் தலையில் வாடிய பூக்களை சூடக் கூடாது. இன்னும் ஒரு மணி நேரத்தில் இந்த பூவாடிவிடும் என்று ஒரு சூழ்நிலை இருந்தாலும் அந்த பூவை தலையில் சூடாதிங்க. நிறைய பேர் இப்போது பூவை வாங்கி உடனடியாக தலையில் சூட்டிக் கொள்வது இல்லை. அந்த பூவை ஃப்ரிட்ஜிக்கு தான் சூட்டிவிடுகிறார்கள். வாங்கிய பூவை கவரில் கட்டி டப்பாவில் போட்டு, ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு அது வாடும் தருவாயில் தான் தலையில் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள்.

- Advertisement -

இது ரொம்ப ரொம்ப தவறு. வாடிய பூக்களை பெண்கள் கட்டாயம் சூடிக்கொள்ளக்கூடாது. வாடியப்பூவை பெண்களே தலையில் சூட்ட கூடாது என்றால், அப்போ இறைவனுக்கு. கட்டாயம் லேசாக வாடிய பூக்களை கூட இறைவனுக்கு சூட்டக் கூடாது. நிறைய கோவில்களின் வாசலில் பூக்கட்டி விற்பனை செய்வார்கள். அந்தப் பூ சிறிது நேரத்தில் பாதி வாடி இருக்கும்.

ஆனாலும் அந்த பூ, அந்த கடைகளில் விற்பனைக்காக இருக்கும். நாமும் வேறு வழியில்லாமல் அந்த பூவை வாங்கிக் கொண்டு போய் இறைவனுக்கு கொடுப்போம். அந்த தவறை பண்ணாதீங்க. வாடிய பூவை விற்பதும் தவறு. வாடிய பூவை கொண்டு போய் சாமிக்கு சூட்டுவதும் தவறு.

- Advertisement -

இதற்கு பின்னால் இருக்கும் ஒரு வரலாற்று கதை சுருக்கமாக உங்களுக்காக. பூவில் வாசம் கொண்ட மதனமோகினி, பூக்களை சூடிக் கொள்பவர்களுக்கும், பூக்களை வாங்கிக் கொண்டு போய் இறைவனுக்கு சாத்துபவர்களுக்கும் நிறைய கஷ்டங்களை கொடுத்து வந்தால். அந்த மதன மோகினியை, முருகப் பெருமான் அழைத்து தண்டிக்கும் தருவாயில், மதனமோகினி முருகப்பெருமானிடம் மன்னிப்பு கேட்டு, சாப விமோசனத்தை பெறுகின்றாள்.

அந்த சமயம் மதன மோகினி, முருகப்பெருமானிடம் ஒரு வாக்கம் கொடுத்தால், இனி புத்தம் புது பூக்களை சுடக்கூடிய பெண்களுக்கு நான் எந்த கஷ்டத்தையும் கொடுக்க மாட்டேன். புதுசாக பூத்த பூவை இறைவனுக்கு கொண்டு போய் கொடுப்பவர்களுக்கும் எந்த சுமையையும் கொடுக்க மாட்டேன்.

- Advertisement -

ஆனால் வாடிய பூக்களை சூடும் பெண்களுக்கும், வாடிய பூக்களை இறைவனுக்கு கொடுக்கக்கூடிய பக்தர்களுக்கும் கஷ்டத்தை கொடுப்பேன் என்ற வாக்கை முருகப்பெருமானுக்கு கொடுத்து சாப விமோசனம் பெற்றால். இன்றும் மதினமோகினி பூக்களில் வாசம் செய்கின்றாள் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஆகவே அந்த மதனமோகினியின் சாபத்திற்கு நீங்க ஆளாகிடாதீங்க.

எங்களுக்கு பூ வைக்கும் பழக்கமே கிடையாது. நாங்க எப்போதும் தலைவிரி கோலம் என்று சொல்லப்படும் லூஸ் ஹேரில் தான் இருப்போம் என்று சொன்னால் அதுவும் தவறு. பூ வைக்காதவர்களுக்கும் மகன மோகினி சாபம் கிடைக்கும். பெண்களாக இருந்தால் ஒரு பூவையாவது தினமும் தலையில் சூடிக்கொள்ளுங்கள். அந்த பூ வாடிய பிறகு அதை எடுத்து போட்டு விட்டு, புது பூவை சூடிக் கொள்ளுங்கள். பெண்கள் பூவை சூடி கொள்ளும்போது இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.
பூ வைக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் திரிபுரா தேவியை
மங்கலம்பிகா ரட்சிப்பாய்

இதையும் படிக்கலாமே: திருப்பதிக்கு போகும் பாக்கியத்தை பெற பெருமாள் வழிபாடு

என்ற இந்த ஒரு மந்திரத்தை சொல்லிவிட்டு பெண்கள் தலையில் பூவை சூடிக் கொண்டால் உங்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -