காசு செலவு பண்ணாம நடிகை போல மேனி பளபளக்க ஈஸியான 10 புதிய டிப்ஸ் இதோ!

- Advertisement -

காசு செலவு செய்யாமல் நம்முடைய முகத்தை ஜொலிக்க வைப்பது என்பது கொஞ்சம் சிரமமான காரியம் தான் என்றாலும், இயற்கையாக கிடைக்கக்கூடிய நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே பல ரூபாய் நோட்டுகளை செலவழித்து செய்யக்கூடிய அற்புதத்தை எளிதாக புதுமையான முறையில் நிகழ்த்தி காட்டலாம். புதிய அழகு குறிப்பு டிப்ஸ் 10 இதோ உங்களுக்காக.

குறிப்பு 1:
ஒரு சிறிய பௌலில் இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன், ஒரு டேபிள்ஸ்பூன் பிரெஷ் ஆன கிரீம் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் அரை மூடி எலுமிச்சை பழத்தை பிழிந்து பேஸ்ட் போல செய்து முகம் முழுவதும் தடவி உலர விட்டு குளிர்ந்த நீரில் கழுவுங்கள். முகம் ஒரே முறையில் பளிச்சிடும்.

- Advertisement -

குறிப்பு 2:
ஒரு பௌலில் கற்றாழை மடலில் இருந்து கிடைக்கக்கூடிய ஜெல்லை எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் தினமும் பயன்படுத்தும் காபி பவுடர் சிறிதளவு சேர்த்து மசித்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை முகம் முழுக்க தடவி இரண்டு நிமிடம் உலர விட்டு கழுவினால், முகத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள் அனைத்தும் நீங்கி முகம் ஜொலிக்கும்.

குறிப்பு 3:
ஒரு பவுலில் ஆலுவேரா ஜெல் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்து அதனுடன் சிறிதளவு தயிர் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு டிஷ்யூ பேப்பர் எடுத்து இதில் முக்கி முகத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். எல்லா இடங்களிலும் ஒற்றி எடுத்த பின்பு அப்படியே உலர விட்டு விடுங்கள். பிறகு முகம் முழுக்க கழுவினால் பளிச் பளிச்!!

- Advertisement -

குறிப்பு 4:
முகம் மிருதுவாக இருக்க விட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஒன்றை உடைத்து ஒரு பவுலில் ஊற்றிக் கொள்ளுங்கள். அதனுடன் தேவையான அளவிற்கு பன்னீர் சேர்த்து முகத்தில் மசாஜ் செய்து அப்ளை செய்யுங்கள். பிறகு உலர விட்டு கழுவினால் முகம் மிருதுவாகும்.

குறிப்பு 5:
ஒரு பௌலில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு முல்தானி மெட்டி சேர்த்து அதனுடன் வெறும் தண்ணீரை கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள். இதை தினமும் நீங்கள் தடவி வந்தாலே, உங்களுக்கு எண்ணெய் பசை இல்லாமல் முகம் மிருதுவாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 6:
ஒரு பவுலில் கற்றாழை ஜெல்லை சிறிதளவு சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் சேர்த்து தேன் கலந்து மிக்ஸ் செய்து முகத்தில் பேக் போல போட்டு வந்தால் முகமானது ஸ்க்ரப் செய்வது போல இருக்கும். இதை மசாஜ் செய்து விட்டு உலர விட வேண்டாம். அப்படியே கழுவிக் கொள்ளலாம்.

குறிப்பு 7:
ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன், ஒரு டேபிள்ஸ்பூன் தயிர், அரை மூடி எலுமிச்சை சாறு, அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு முகம் முழுவதும் வாரம் இரண்டு முறை தடவி உலர விட்டு கழுவினால் முகப்பருக்கள் அண்டாது, முகமானது நைசாக மாறும்.

குறிப்பு 8:
ஒரு சிறிய பவுலில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கடலை மாவுடன், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் தேன் மற்றும் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வந்தால், கருப்பான முகமும் வெள்ளையாக மாறும்.

குறிப்பு 9:
ஒரு சிறிய அளவிலான பவுலில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு மைதா மாவு சேர்த்து அதனுடன் தேவையான அளவிற்கு பால் ஊற்றி, அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன், தக்காளி விதைகள் இல்லாமல் சாறு எடுத்து ஒரு ஸ்பூன் சேர்த்து, இதனுடன் கால் ஸ்பூன் கடலை மாவு போட்டு பேஸ்ட் போல கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதை வாரம் ஒரு முறை முகத்தில் தடவி குளிர்ந்த நீரினால் கழுவினால் முகம் மாசு, மருவில்லாமல் நடிகை போலவே ஜொலிப்பீர்கள்.

இதையும் படிக்கலாமே:
என்ன ஆனாலும் முகத்தில் முகப்பருக்கள் வரக்கூடாதா? முகத்தில் ஒரு பரு கூட இல்லாமல் எளிதாக விரட்டி அடிப்பது எப்படி?

குறிப்பு 10:
ஒரு மிக்ஸியில் நாலு துண்டு வெள்ளரிக்காயுடன், ஒரு துண்டு உருளைக்கிழங்கு சேர்த்து ஒரு ஸ்பூன் தேன், ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து அடித்துக் கொள்ளுங்கள். இதை முகம், கழுத்து என்ற எல்லா பகுதிகளிலும் தடவி நன்கு உலர விட்டு, பின் ஈரத் துணியால் துடைத்து எடுத்தால் முகம் பேஷியல் செய்தது போல செமையாக இருக்கும்.

- Advertisement -