அட இந்த நியூஸ் பேப்பரை வைச்சு இத்தனை விஷயம் பண்ணலாமா? ஆமாங்க இப்படி நீங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு சூப்பர் டிப்ஸ் இருக்கு. வாங்க அது என்னன்னு தெரிஞ்சுக்கலாம்.

- Advertisement -

இதுவரைக்கும் நியூஸ் பேப்பரை படிக்கவும், அட்டை போடவும் வீட்டில் ஷெல்ப்புகளில் அழுக்கு படியாமல் இருக்கவும் தான் பயன்படுத்தி இருக்கிறோம். ஆனால் இந்த நியூஸ் பேப்பரை வைத்து இத்தனை விஷயங்களை செய்யலாம் என்பதை கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது. அப்படி என்னவெல்லம் செய்யலாம் என்பதை யெல்லாம் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

முதலில் நியூஸ் பேப்பரை வைத்து காய்கறிகளை எப்படி அதிக நாள் கெடாமல் பாதுகாக்க முடியும் என்பதை தெரிந்து கொள்வோம். கறிவேப்பிலை, கொத்தமல்லி புதினா இலைகளை எல்லாம் சுத்தம் செய்து ஒரு பாக்ஸில் போட்டு எடுத்து வைப்போம். அதை எப்படி வைத்தாலுமே அதிலிருந்து தண்ணீர் விட்டு இலைகள் அழுகி வீணாகி விடும். இனி நீங்கள் இவைகளை எடுத்து வைக்கும் போது பாக்சின் அடியில் நியூஸ் பேப்பர் வைத்து விட்டு அதன் மேல் இந்த பொருட்களை வைத்து மீண்டும் ஒரு பேப்பர் வைத்து மூடி பிரிட்ஜில் வைத்தால் எத்தனை நாள் ஆனாலும் இலைகள் அழுகி வீணாகாமல் இருக்கும்.

- Advertisement -

இதே போல் எலுமிச்சை பழங்களை விலை மலிவாக இருக்கும் போது நாம் அதிகமாக வாங்கி வைத்து விடுவோம். அதுவும் ஒரு வாரம் இருக்கும் அதற்கு மேல் அழுகத் தொடங்கி விடும் அல்லது காய்ந்து விடும். ஒரு மாதம் ஆனால் கூட நீங்கள் வாங்கி வந்தது போலவே புதிதாக இருக்க, ஒவ்வொரு எலுமிச்சை பழத்தையும் சின்ன, சின்ன நியூஸ் பேப்பரில் சுற்றிய பிறகு மொத்தமாக ஒரு பாக்ஸில் போட்டு மூடி வைத்து விடுங்கள். எப்போது எடுத்தாலும் புதிதாக வாங்கிய எலுமிச்சை பழம் போல் அவ்வளவு பிரஷ்ஷாக இருக்கும்.

இதே போல பூக்கள் பத்து நாள் ஆனாலும் வாடாமல் இருக்க, பூக்களை பிளாஸ்டிக் அல்லது சில்வர் என டப்பாவில் வைப்பதாக இருந்தாலும், முதலில் நியூஸ் பேப்பரை வைத்து விடுங்கள் அடுத்து பூக்களை வைத்த பிறகு இடையில் ஒரு நியூஸ் பேப்பர் அடுத்து பூ என இப்படி லேயர், லேயராக வைத்து ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்தால் போதும். பூக்கள் வாடாமல், வதங்காமல் அப்படியே இருக்கும். ஆனால் இதை மொட்டாக இருக்கும் போதே வைக்க வேண்டும்.

- Advertisement -

இதே போல் மளிகை பொருட்கள், மசாலா பொருட்கள் வைக்கும் டப்பாக்களில் கூட இந்த நியூஸ் பேப்பரை துண்டு, துண்டாக நறுக்கி போட்டு விட்டால் அதில் ஈரப் பசையினால் வரும் பூஞ்சான்கள் வராமல் ஈரத்தை முழுவதுமாக இந்த பேப்பர் இழுத்து விடும். இந்த நியூஸ் பேப்பரை மட்டும் அடிக்கடி மாற்றி விட வேண்டும்.

அதே போல் சில்வர் வாட்டர் பாட்டில்கள் எல்லாம் மூடி வைத்து ஒன்று, இரண்டு நாள் கழித்து திறந்தால் அதற்குள் ஒரு வித வாடை வீசும். இனி பாட்டிலை கழுவி எடுத்து வைக்கும் போது கொஞ்சம் நியூஸ் பேப்பரை சுருட்டி அதில் போட்டு மூடி வைத்து விடுங்கள். அடுத்த வருடம் எடுத்தால் கூட பாட்டிலில் கெட்ட வாடை எதுவும் வீசாது.

- Advertisement -

இவை அனைத்திலும் விட இந்த நியூஸ் பேப்பரை வைத்து உப்பு கறை படிந்த பாத்ரூம் டைல்ஸ்சை கூட சுலபமாக சுத்தம் செய்யலாம் என்பது தான் ஆச்சரியப்படக்கூடியது. அதற்கு ஒரு கப்பில் கொஞ்சம் வினிகர், சமையல் சோடா, கல் உப்பு மூன்றையும் நன்றாக தண்ணீரில் கலந்த பிறகு அதில் நியூஸ் பேப்பரை நான்கு, ஐந்தாக மடித்து கப்பில் வைத்து விடுங்கள். இப்போது கப்பில் இருக்கும் நீர் முழுவதையும் நியூஸ் பேப்பர் உறிந்து இருக்கும். இந்த நியூஸ் பேப்பரை உப்பு கறை படிந்த டைல்சில் ஒட்டி விடுங்கள். 10 நிமிடம் கழித்து நியூஸ் பேப்பரை எடுத்து விட்டு அந்த இடத்தில் ஸ்க்ரப்பர் வைத்து லேசாக தேய்த்து பாருங்கள். உப்பு கறை இருந்த இடம் தெரியாது.

இதையும் படிக்கலாமே: பூஜை பாத்திரங்களை கஷ்டப்பட்டு தேய்த்து சுத்தம் செய்யாமல் 10 நிமிடத்தில் அத்தனை பொருட்களையும் பளபளன்னு ஜொலிக்க செய்வது எப்படி?

வீட்டில் இனி நியூஸ் பேப்பர் இருந்தால் இது தேவையில்லாத குப்பை தானே என்று தூக்கிப் போடாமல், அதை இத்தனை விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் டிரை பண்ணி பாருங்க.

- Advertisement -