வெள்ளிக்கிழமையில் நிலைவாசல் பூஜை செய்யும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரம் என்ன? நிலைவாசலை இப்படி செய்தால் மகாலட்சுமி நிச்சயம் அடி எடுத்து வைத்து உள்ளே வருவாள்.

lakshmi-door-vasal
- Advertisement -

ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் மகாலட்சுமியை நம் வீட்டிற்குள் அழைத்தால் நம்மிடம் இருக்கும் செல்வ வளம் பன்மடங்கு பெருகும் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. செல்வம் மட்டுமல்ல ஒரு குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் எப்போதும் நிறைந்திருக்க வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி பூஜை செய்வது அவசியமாகும். அப்படி வெள்ளிக்கிழமையில் நாம் பூஜை செய்யும் பொழுது நில வாசல் படியில் இருந்து தான் மகாலட்சுமி நம் வீட்டிற்குள் வருகிறாள். அந்த நிலை வாசலுக்கு நாம் செய்ய வேண்டிய பூஜை முறை என்ன? பூஜை செய்யும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரம் தான் என்ன? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

வெள்ளிக்கிழமையில் பூஜை அறையை எப்படி சுத்தம் செய்து வைத்திருக்கிறோமோ, அதே போல நிலைவாசல் படியையும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். நிலை வாசலில் மகாலட்சுமி இருப்பதாக ஐதீகம் உண்டு. நிலைவாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு எனவே இவர்களை முறையாக வரவேற்க நாம் நிலைவாசல் பூஜை செய்வது அளப்பரிய நன்மைகளை கொடுக்கும். நிலைவாசலுக்கு மஞ்சள், குங்குமம் இடுவது, விளக்கு ஏற்றி வைப்பதும் கூட பூஜை முறையின் ஒரு அம்சமாகும். நிலை பூஜை செய்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகளில் தீய சக்திகள் நம் வீட்டை விட்டு செல்வதும், திருஷ்டிகள் கழிவதும் அடங்கியுள்ளன. இத்தகைய நன்மைகளை அளிக்கக் கூடிய நிலைவாசல் பூஜையை முறையாக செய்வது எப்படி?

- Advertisement -

நிலை வாசலை சுத்தம் செய்த பின்பு நீங்கள் பொட்டு வைக்கும் இடம் முதல் பாதம் வைக்கும் படி வரை பா வடிவில் அனைத்து இடங்களிலும் சந்தனத்தை பன்னீரில் அல்லது தண்ணீரில் குழைத்து பூசிக்கொள்ள வேண்டும். நிலை வாசலுக்கு மஞ்சள் பூசும் பொழுது பொட்டு வைக்கும் பொழுதும் உச்சரிக்க வேண்டிய மந்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மந்திரத்தில் மகாலட்சுமியை வரவேற்கும் அற்புத சக்தி உண்டு. பொட்டு வைத்ததும் கோலம் இட வேண்டும்.

mahalakshmi

மந்திரம் 18:
ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே
தவல தமாம்சுக கந்த மால்ய சோபே
பகவதி ஹரிவல்லபே மநோஜ்ஞே
த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம்!!

- Advertisement -

இந்த மந்திரம் கனகதாரா ஸ்தோத்திரத்தின் 18 ஆவது பாடலாக இருக்கின்றது. இப்பாடலின் பொருள் என்ன? தாமரை மலரில் அமர்ந்திருக்கும் மகாலக்ஷ்மியை போற்றிப் புகழப்படுகிறது. மகாலட்சுமியின் கரங்கள் தாமரை மலரை போல இருக்கின்றன. அவள் ஜோதியாக சந்தன மாலையை அணிந்து வீற்றிருக்கிறாள். அனைத்து உலகங்களுக்கும் செல்வங்களை வாரி வழங்கும் மகாலக்ஷ்மி ஸ்ரீமந்நாராயணனின் அன்புக்குரிய மனைவியாக இருக்கின்றாள். இவளை அடிபணிந்து வணங்குகிறேன் என்பது இப்பாடலின் உள்ளர்த்தமாக இருக்கின்றது.

epsam-salt

மூன்று அல்லது ஐந்து எண்ணிக்கையில் குங்குமத்தை வாசல் படியின் இரண்டு பக்கங்களிலும் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாசல்படிக்கு இரண்டு புறமும் விளக்கு ஏற்றி வழிபடலாம் அல்லது ஒரு மண் குவலயம் அல்லது கண்ணாடி குவலயத்தில் மஞ்சள் தடவி குங்குமம் வைத்து கல் உப்பை நிரப்பிக் கொள்ள வேண்டும். ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதில் குங்குமம் தடவி உப்பின் மீது வைக்க வேண்டும். பின்னர் வாசற்படியின் இரண்டு புறத்திலும் மலர்களை வைத்து அட்சதை தூவ வேண்டும். அரிசியும், மஞ்சளும் கலந்தது தான் அட்சதை. அட்சதையை தூவும் பொழுது, ‘ஓம் பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். கோவில்களில் இருபுறமும் துவார பாலகர்கள் காவல் காப்பது போல நம் வீட்டையும் காவல் காப்பதாக பொருள்படுகிறது. எனவே நம் வீட்டை தெய்வ சக்தி காவல் காக்கவும், தீயசக்திகள் தெறிக்க ஓட விடவும், திருஸ்டிகள் முற்றிலும் கழியவும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் இவ்வாறு நிலைவாசல் பூஜை செய்து பயனடையலாமே!

- Advertisement -