நிலை வாசலில் தினமும் இந்த தண்ணீரை தெளித்து வந்தால் வீட்டில் ஐஸ்வரியம் பெருகும். வீட்டிற்குள் எந்த ஒரு கெட்ட சக்தியும் கண் திருஷ்டியும் நுழையவே நுழையாது.

Nilai vazhal mahalashmi
- Advertisement -

நிலைவாசல், நிலை வாசல் கதவு, இது இரண்டுமே ஒரு வீட்டிற்கு ரொம்ப ரொம்ப முக்கியமானவை. ஆனால் நம்மில் பல பேர் இது இரண்டுக்கும் பெரியதாக முக்கியத்துவம் கொடுப்பதே கிடையாது. ஒரே ஒரு நாள் நிலை வாசல் கதவு இல்லை என்றால் யோசித்துப் பாருங்கள். வீட்டிற்குள் நம்மால் நிம்மதியாக இருக்க முடியுமா. ஒரு நாள் இரவு நிம்மதியாக தூங்க முடியுமா. நம்முடைய குலதெய்வமும் இந்த நிலை வாசல் கதவும் ஒன்று. நம்மை பாதுகாக்க கூடியவை. ஆகவே குலதெய்வத்துக்கு கொடுக்கக் கூடிய மரியாதையை நிலை வாசலுக்கு கொடுக்க வேண்டும். நம்முடைய வீட்டிற்குள் ஒரு நல்லது வரவேண்டும் என்றாலும் சரி, நிலைவாசல் வழியாகத்தான் வீட்டிற்குள் நுழையும். அப்படிப்பட்ட நிலை வாசல் கதவையும், நிலை வாசலையும் நாம் எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றிய பயனுள்ள ஆன்மீகம் சார்ந்த பதிவுதான் இது.

ஐஸ்வர்யம் பெருக நிலை வாசலில் தெளிக்க வேண்டிய தீர்த்தம்:
உங்களுக்கு எந்த புனித தீர்த்தம் கிடைத்தாலும் சரி, அதை கொஞ்சமாக வாங்கி வந்து ஒரு வாட்டர் கேனில் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு உங்கள் வீட்டின் அருகில் கோவிலில் கிடைக்கக்கூடிய அபிஷேக தண்ணீர், புனித நதி தீர்த்தம், இவைகளை வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளலாம். தினமும் வாசல் தெளிக்கும்போது இந்த தீர்த்தத்தில் இருந்து சிறிதளவு எடுத்து வாசல் தெளிக்கும் தண்ணீரில் கலந்து அந்த நீரை வாசலில் தெளித்தால் ரொம்ப ரொம்ப நல்லது. வீட்டிற்குள் துர்சக்தி நுழையாது. நம் வீட்டை பிடித்த பீடை நீங்கும்.

- Advertisement -

எந்த நேரமும் இப்படிப்பட்ட தீர்த்தம் வீட்டில் இருக்கும் என சொல்லிவிட முடியாது. சமயத்தில் இல்லாத சமயத்தில், வாசல் தெளிக்கும் தண்ணீரில் சிறிதளவு மஞ்சள், கொஞ்சம் பச்சை கற்பூரம் பொடி கலந்து நிலை வாசலில் தெளிக்கலாம். வியாழக்கிழமை இரவு ஒரு சிறிய செம்பு சொம்பில் நல்ல தண்ணீரை ஊற்றி அதில் 2 துளசி இலைகள், 2 ஏலக்காய், 2 கிராம்பு, 2 சிட்டிகை மஞ்சள் தூள், கொஞ்சம் பச்சை கற்பூரம் போட்டு உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். இந்த சொம்பு திறந்தபடியே இருக்கட்டும்.

மறுநாள் காலை இந்த தண்ணீரை வடிகட்டி எடுத்து வாசல் தெளிக்கும் தண்ணீரில் கலந்து வாசல் தெளிக்க வேண்டும். இந்த தண்ணீரை நிலை வாசலில் தெளித்தால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். மகாலட்சுமி இந்த வாசத்திற்கு உங்களுடைய வீட்டிற்குள் விரும்பி வருவாள்.

- Advertisement -

அடுத்து நிலை வாசல் கதவு. நிலை வாசல்க்கால் என்று சொல்லுவார்கள் அல்லவா, அதை வாரத்தில் ஒரு நாளாவது சுத்தமாக துடைத்து புதுசாக மஞ்சள் பூசி புதுசாக மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். நிலை வாசல் கதவில் தூசி இல்லாமல் துடைக்க வேண்டும். ஏனென்றால் வீதியில் இருக்கக்கூடிய பாதி தூசு நிலைவாசல் கதவின் மேல்தான் இருக்கும். நிலைவாசல் கதவில் ஏதாவது பழுதடைந்து இருந்தால் அதனை உடனே சரி செய்து விட வேண்டும். வெள்ளிக்கிழமை பூஜை செய்யும் போது நிலை வாசல் படியில் இரண்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு வாசலில் தங்கி இருக்கும் வாஸ்து தேவதைகளையும், கதவில் தங்கி இருக்கும் நம் குலதெய்வத்தையும் மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்‌.

இதையும் படிக்கலாமே: பெரிய பெரிய பதவி, பணம், அந்தஸ்து இவையெல்லாம் தானாக உங்களைத் தேடி வந்து செல்வாதிபதியான வாழ்க்கையை நீங்கள் வாழ நினைத்தால் ஏலக்காயை தினமும் இப்படி பயன்படுத்துங்கள்.

உங்களைக் காக்கும் குலதெய்வமாக, நிலை வாசலில் நின்று கொண்டிருக்கும் நிலை வாசல் கதவை, தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்ளுங்கள். பிறகு உங்களுடைய வீட்டில் எவ்வளவு நல்லது நடக்கிறது என்பதை நீங்களே பார்க்கலாம். நிலை வாசல் கதவை நாம் வழிபாடு செய்ய செய்ய, நம் குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். இவ்வளவு தாங்க. இந்த சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றி வந்தாலே வீட்டிற்குள் எந்த கெட்டதும் நுழையாது என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -