நாளை நிலை வாசல் கதவை திறக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

ekadesi4
- Advertisement -

நாளை சனிக்கிழமை 23.12.2023 ஆம் தேதி, மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதேசி திருநாள் வரவேற்கின்றது. எல்லோரும் நாளை பிரம்ம முகூர்த்த நேரம் எப்போது வரும். சொர்க்கவாசல் எப்போது திறக்கும். பெருமாளை எப்போது தரிசனம் செய்யலாம் என்று காத்துக் கொண்டிருக்கின்றோம். ஏனென்றால் வருடத்தில் ஒருமுறை ஏகாதசி விரதம் இருந்து பெருமாளை தரிசனம் செய்தால் கிடைக்கக்கூடிய மனதிருப்தியை நம்முடைய வாயால் வார்த்தைகளால் சொல்லி முடித்து விட முடியாது.

இந்த அற்புதம் வாய்ந்த நன்னாளில் நாம் செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டு முறைகள் ஏராளம் இருக்கிறது. அதை எல்லாம் உங்களால் செய்ய முடியுமோ அல்லது செய்வதற்கான நேரமும் வாய்ப்புகளும் கிடைக்குமோ, கிடைக்காமல் போகுமோ தெரியவில்லை. ஆனால், எல்லோரும் நாளை காலை விடிந்த உடன் நிலை வாசல் கதவை திறந்து நிலை வாசலுக்கு தண்ணீர் தெளித்து கோலம் போடுவோம்.

- Advertisement -

நிலைவாசல் கதவு திறக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

இது மார்கழி மாதம் என்பதால் சூரிய உதயத்திற்கு முன்பே பிரம்ம முகூர்த்த நேரத்தில் நம் வீட்டு நிலை வாசல் கதவை திறப்போம் அல்லவா. நாளைய தினம் பெருமாளை மனதில் நினைத்துக் கொண்டு கண்விழிக்கவும். சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதிகாலை 4.00 மணிக்கு முன்பாகவே குளித்துவிட்டு பெண்கள் அழகாக ஒரு ஆடை அணிந்து கொண்டு நெத்திக்கு பொட்டு இட்டுக்கொண்டு நிலை வாசல் கதவை திறக்க வேண்டும்.

என்ன வார்த்தையை சொல்லி திறக்க வேண்டும் தெரியுமா. ‘கோவிந்தா கோவிந்தா, பஜகோவிந்தம் பஜகோவிந்தம்! என்ற வார்த்தையை சொல்லி நிலை வாசல் கதவை திறந்தீர்கள் என்றால், அந்த பெருமாள் சொர்கள் வாசல் திறந்த பின்பு பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் புரிந்து விட்டு, நேராக உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வாதம் செய்வார்.

- Advertisement -

உங்கள் குடும்ப கஷ்டத்தை எல்லாம் தீர்த்து வைப்பார். மன நிறைவான வாழ்க்கையை கொடுப்பார். வீட்டு பெண்கள் மட்டும் தான் இதை செய்ய வேண்டும் என்று அவசியம் கிடையாது. ஆண்கள் காலையில் முதலில் எழுந்தாலும் நிலை வாசல் கதவை திறக்கும்போது இந்த நாமத்தை சொல்லுங்கள்.

வைகுண்ட ஏகாதேசி நாள் முழுவதும் பஜகோவிந்தம் பஜகோவிந்தம், கோவிந்தா கோவிந்தா, ஓம் நமோ நாராயணா, ராமா, என்ற நாமங்களை சொல்லுவதன் மூலம் நமக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இது சனிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கக் கூடிய அற்புதம் வாய்ந்த வைகுண்ட ஏகாதேசி.

இதையும் படிக்கலாமே: வைகுண்ட ஏகாதேசிக்கு பெருமாளுக்கு உகந்த நெய்வேதியம்

இந்த நாமத்தை சொல்ல யாரும் தவறாதீர்கள். மேல் சொன்ன இந்த சின்ன எளிமையான ஆன்மீகம் சார்ந்த குறிப்பு உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -