வைகுண்ட ஏகாதேசிக்கு பெருமாளுக்கு உகந்த நெய்வேதியம்

ekadesi1
- Advertisement -

இதுவரை பெய்த மழையையே எங்களால் தாங்க முடியவில்லை. இதில் மார்கழி மாதத்தில் செல்வமழையில் வேற நாங்க நனைய வேண்டுமா, என்று கேட்காதீங்க. நாளைய தினம் மார்கழி மாதம் முதல் சனிக்கிழமை, அதோடு மட்டுமல்ல பெருமாளுக்கு உகந்த வைகுண்ட ஏகாதேசியும் சேர்ந்து வந்து இருக்கிறது. நாமும் வாழ்வில் செல்வந்தர்களாக மாற வேண்டாமா.

அதற்கு அந்த பெருமாளை நம் கைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி என்றால் பெருமாளுக்கு பிடித்த சில விஷயங்களை நாம் செய்ய வேண்டும். அந்த வரிசையில் நாளைய தினம் பெருமாளுக்கு என்ன நிவேதனம் செய்து வைத்தால் சிறப்பு என்பதை பற்றிய ஆன்மீகம் தகவலைத்தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

ஜாதக கட்டத்தில் உங்களுக்கு பண வரவே இல்லை, என்ற சூழ்நிலை அமைந்திருந்தால் கூட, அது தகர்க்கப்படும். வீட்டிற்குள் பணம் வர தடையாக இருக்கக்கூடிய அத்தனை பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடிய எளிமையான வழிபாடு தான் இந்த வைகுண்ட ஏகாதேசி பெருமாள் வழிபாடு.

வைகுண்ட ஏகாதேசிக்கு பெருமாளுக்கு செய்ய வேண்டிய நெய்வேதியம்

இறந்த பிறகு சொர்க்கத்துக்குப் போக வழி கிடைத்தால் மட்டும் போதுமா, வாழும் போது நம்முடைய வாழ்க்கையை சொர்க்கமாக மாற வேண்டாமா. அதற்காகவும் இந்த வழிபாடு. சரி சரி நாளைய தினம் பெருமாளுக்கு வைக்க வேண்டிய அந்த நெய்வேதியம் தான் என்ன. ‘வெண்பொங்கல்’ தாங்க அது.

- Advertisement -

மற்ற எல்லா தெய்வங்களுக்கும் சர்க்கரை பொங்கலை வைத்து நெய்வேத்தியம் செய்ய வேண்டும். ஆனால் பெருமாளுக்கு குறுமிளகு சீரகம் இஞ்சி பசு நெய் பச்சரிசி பாசிப்பருப்பு சேர்த்த வெண்பொங்கலை நிவேதனமாக வையுங்க. உங்களுடைய வாழ்க்கையை பொருளாதாரத்தில் தலைகீழாக மாறும்.

அதுவும் நாளை சனிக்கிழமை சொர்க்கவாசல் திறக்க கூடிய அந்த நேரத்தில் உங்களால் கோவிலுக்கு செல்ல முடியும் என்றால் செல்லலாம். முடியவில்லை என்பவர்கள் வீட்டில் இந்த வெண் பொங்கலை பெருமாளுக்கு செய்து வைத்து, வேண்டிய வரங்களை எல்லாம் கேட்டுப் பாருங்கள். அந்த சொர்க்கமான வாழ்க்கையை அவர் உங்களுக்கு கொடுத்து விடுவார்.

- Advertisement -

கோவிலுக்கு செல்பவர்கள், கோவிலுக்கு சென்று வந்த பிறகு வெண்பொங்கலை செய்து வீட்டில் இருக்கும் பெருமாளுக்கு நிவேதனம் செய்து வழிபாடு செய்யலாம். சரிங்க இந்த ஏகாதசி திருநாள் என்று வருகிறது. 23.12.2023 சனிக்கிழமை காலை 6.45 வரை ஏகாதேசி திதி இருக்கிறது. சனிக்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: வைகுண்ட ஏகாதேசி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

அந்த சொர்க்கவாசல் திறக்கக்கூடிய நேரத்தில் உங்கள் வீட்டு அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கும் சென்று நீங்கள் பெருமாளை வழிபாடு செய்யலாம். முடியாதவர்கள் வீட்டிலேயே வெண்பொங்கல் வைத்து பெருமாளை நினைத்து கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்தை எழுப்பி வழிபாடு செய்யுங்கள். நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையும் உங்களுக்கு சொர்க்கமாக அமையும். நீங்கள் வாழ்ந்து முடித்து செல்லக்கூடிய மேல் லோகத்திலும் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.

- Advertisement -