உங்கள் நிலைவாசல் இப்படி இருக்கிறதா? அப்படியானால் உங்களை பிரச்சனைகள் பின் தொடர தான் செய்யும். நிலைவாசல் இப்படி இருந்தால் உடனே சரி செய்து விடுங்கள்.

- Advertisement -

ஒரு வீட்டில் அறைகள் ஒவ்வொன்றும் எந்த அளவிற்கு முக்கியமோ அதை விட முக்கியம் அந்த வீட்டின் நிலை வாசல். ஒரு வீடு கட்ட தொடங்கும் போது கூட சில பெரிய அளவில் பூஜை புனஸ்காரங்கள் ஏதும் செய்யாமல் அவர்களின் தெய்வத்தை வணங்கி விட்டு வேலையை தொடங்கி விடுவார்கள். ஆனால் ஒரு வாசக் கதவை வைக்கும் போது மட்டும் அப்படி வைக்கவே மாட்டார்கள். சுமங்கலி பெண்களை அழைத்து அந்த வாசலில் மஞ்சள் குங்குமம் வைத்து நவதானியங்கள் எல்லாம் சேர்த்து அத்தனை சிரத்தையாக நிலை வாசலை வைக்கும் நாம், அதன் பிறகு அதே அளவு அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி நாம் என்னென்ன தவறுகளை இந்த நிலை வாசல் விஷயத்தில் செய்கிறோம் என்பதை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

முதலில் நிலை வாசலில் எப்போதும் மஞ்சள், குங்குமம் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். நிலை வாசல் மஞ்சள் குங்குமம் இல்லாமல் இருக்கவே கூடாது இது மிக மிக முக்கியமான ஒரு விஷயம். இதை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நிலை வாசலில் இந்த தோரணம் மாவிலை போன்றவற்றை இப்பொழுது அலங்காரத்திற்காக பிளாஸ்டிக்கில் கட்டி வைத்திருக்கிறார்கள் அப்படி கட்டவே கூடாது. நீங்கள் அடிக்கடி அந்த மாவிலை தோரணங்களை மாற்ற முடியாமல் போனாலும் பரவாயில்லை, ஒரு முறை கட்டிய பிறகு அந்த மாவிலை தோரணங்கள் காய்ந்து இருந்தாலும் கூட அப்படியே இருக்கட்டும். ஆனால் எந்த காரணத்திற்காகவும் பிளாஸ்டிக் உபயோகிக்க வேண்டாம்.

இன்னொரு முக்கியமான விஷயம் நிலை வாசலில் எந்த காரணத்திற்காகவும் ஆணி அடிக்கவே கூடாது. அணி அடித்து அதில் தோரணம் கட்டுவது இது போன்ற செயல்கள் செய்யக் கூடாது அப்படி செய்திருந்தால் உடனடியாக அந்த ஆணியை எடுத்துவிட்டு அந்த இடத்தில் மஞ்சள் வைத்து அடைத்து விடுங்கள். ஏனென்றால் இரும்பானது நல்ல சக்திகளை நம் வீட்டிற்குள் வருவதை தடுக்கும் ஆற்றல் உடையது எனவே கட்டாயமாக இதை செய்யக் கூடாது. அதோடு கேட்ட செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -

அதே போல் இப்போதெல்லாம் சேஃப்டி கேட் என்று நிலை வாசல் கதவிற்கு அடுத்தது பெரிய இரும்பு கேட் ஒன்று போட்டு வைத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது சின்ன ஆணி அடித்தாலே நல்ல சக்திகள் வராது எனும் போது இத்தனை பெரிய கேட் இருக்கும் போது எப்படி மகாலட்சுமி வீட்டுக்குள் வருவாள். அதற்காக இப்படி வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை இன்றைய காலமும்சூழ்நிலையும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் எந்நேரமும் அந்த இரும்பு கேட்டை பூட்டாமல், நீங்கள் வீட்டில் இருக்கும் நேரம், பூஜை செய்யும் நேரம், விளக்கேற்றும் நேரங்களில் அந்த இரும்பு கேட்டை மூடாமல் திறந்து வையுங்கள்.

இப்போது வீடுகளில் அணி அடித்து ஸ்கிரீன் போட்டு விடுகிறார்கள். மஞ்சள் குங்குமம் தோரணம் என அனைத்து அலங்காரமும் செய்து விட்டு, அதை ஸ்கிரீன் போட்டு மூடி விடுவதால் எந்த பயனும் கிடையாது. உங்களுக்கு அப்படியே கட்டாயமாக ஸ்கிரீன் போட வேண்டும் என்றால், வாசலுக்கு உள்புறமாக போட்டுக் கொள்ளுங்கள். அதையும் இதே போல் எப்பொழுதும் மூடி வைக்காதீர்கள். கட்டாயமாக விளக்கேற்றும் போது மூடவே கூடாது.

- Advertisement -

அதே போல் சிலர் மாலை நேரங்களில் விளக்கேற்றி முடித்ததும் அவசர அவசரமாக விளக்கை குளிர விட்டு வாசல் கதவை மூடி வைத்து விடுவார்கள். இதை தவறை எப்போதும் செய்யாதீர்கள் மாலை நேரங்களில் வீட்டில் கொஞ்ச நேரம் விளக்கை எரிய விட்டு சாம்பிராணி, ஊதுபத்தி போன்ற வாசனை பொருள் ஏற்றி வைத்து கதவை திறந்து வைக்க வேண்டும். அப்போது தான் மஹாலக்ஷ்மி நம் இல்லம் தேடி வருவாள்.

இதையும் படிக்கலாமே: மோதிர விரலைத் தவிர மற்ற விரல்களில் மோதிரம் அணிபவரா நீங்கள்? அப்படினா இத மட்டும் தெரிஞ்சுக்கிட்டா இந்த விரலில் தான் இனி மோதிரம் அணிவீங்க!

ஒவ்வொருவரும் ஒரு வீட்டை கட்டி வாழ்வது என்பது அதில் சந்தோஷமும், அமைதியும், நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக தான். அப்படி கட்டிய பிறகு அதை நாம் எப்படி பார்த்துக் கொள்கிறோம் பராமரிக்கிறோம் என்பதில் தான் நான் எப்படி வாழ்வோம் என்பது இருக்கிறது. இது போன்ற சிறு சிறு விஷயங்கள் நாம் சரி செய்து கொண்டால் போதும் பெரிய அளவில் வரும் பிரச்சனைகள் ஏதும் வராமல் பார்த்துக் கொள்வதோடு மஹாலஷ்மி தாயாரின் அருளையும் முழுமையாக பெற்று வாழ்வோம் .

- Advertisement -