வீட்டின் நிலை வாசலில் விளக்கேற்றும் போது இந்த தவறை மட்டும் செய்யக்கூடாது! என்ன தவறு அது?

vasal-home-vilakku
- Advertisement -

ஒருவருடைய வீட்டில் பிரதான வாசலை நிலைவாசல் என்கிறோம். வீட்டை கட்டும் பொழுது நாம் எந்த விஷயத்திற்காகவும் பெரிதாக பூஜைகள் எதுவும் செய்வதில்லை. ஆனால் நிலை வாசல் கதவை பொருத்தும் பொழுது கட்டாயம் பூஜை செய்வது உண்டு. எனவே ஒரு வீட்டினுடைய உயிர் மூச்சாக கருதப்படுவது இந்த நிலை வாசல். அப்படிப்பட்ட நிலை வாசலில் விளக்கேற்றுவது என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? அதில் நாம் செய்யக் கூடாத தவறு என்ன? இதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

Home 2

பழங்கால வீடுகள் மற்றும் முந்தைய காலங்களில் நம் முன்னோர்கள் வாழ்ந்த இல்லங்களில் எல்லாம் பிரதான வாசலுக்கு இருபுறமும் மாடம் அமைத்து வைத்திருப்பார்கள். காலை, மாலை இருவேளையும் இந்த மாடத்தில் விளக்கை வைத்து ஏற்றுவார்கள். இது எதற்காக என்று தெரியுமா? தலை வாசலுக்கு இருபுறமும் இருக்கும் இடத்தை சூரியனாகவும், சந்திரனாகவும் பாவிக்கப்படுகிறது. சூரியன் அனைத்து தேவாதி தேவர்களையும், தெய்வங்களையும் குறிக்கிறது. சந்திரன் பித்ருக்களை குறிக்கிறார். ஒரு வீட்டில் இருப்பவர்களுக்கு தெய்வங்கள் உடைய அனுக்கிரகமும், அவர்களுடைய முன்னோர்கள் ஆகிய பித்ருக்கள் உடைய ஆசீர்வாதமும் கிடைக்கப் பெறும் பொழுது தான் அவர்கள் பரிபூரணமான செல்வங்களையும், மகிழ்ச்சியான வாழ்வையும் அடைகிறார்கள்.

- Advertisement -

ஒரு மனிதனுக்கு பரிபூரணமான செல்வமும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் தவிர வேறென்ன வேண்டும்? இவை இரண்டையும் பெற பித்ருக்கள் மற்றும் தெய்வங்கள் உடைய ஆசீர்வாதம் தேவை. இவற்றை பெற்று தரக்கூடிய ஒரு இடம் தான் நிலை வாசல். அதனால் தான் நிலை வாசல் கதவை பொருத்தும் பொழுதே தெய்வத்தை ஆகர்ஷணம் செய்ய பூஜைகள் செய்யப்படுகிறது. எனவே இத்தகைய பெரும் மகிமைகள் வாய்ந்த நிலை வாசலில் விளக்கு ஏற்றுவது என்பது எல்லா வளங்களையும் நமக்கு பெற்றுக் கொடுக்கும் அற்புத வழிபாடாக இருக்கிறது.

அதனால் தான் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் செய்யும் பொழுதும், விசேஷ நாட்களில் வீட்டில் பூஜைகள் செய்யப்படும் பொழுதும் நிலை வாசலில் மஞ்சள், குங்குமம் வைத்து அலங்கரிக்கப்படுகிறது. நிலைவாசல் கதவில் மஞ்சள், குங்குமம் வைத்தால் அந்த வீட்டில் கடன் பிரச்சனைகள் வெகுவாக குறையும். நிலைவாசல் கதவை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தூசிகள் படியாமல் கொஞ்சமாக ஈரப்பதம் இருக்கும் துணியால் வாரம் ஒரு முறையாவது நிலை வாசல் கதவு முழுவதையும் சுத்தம் செய்வது மிகவும் நல்லது.

- Advertisement -

நிலைவாசல் கதவில் விளக்கை ஏற்றுபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் கதவின் படியில் விளக்கை ஏற்றுவதை விட மாடம் அமைத்து இருந்தால் எங்கு அமைப்பீர்களோ! அங்கு ஒரு ஸ்டாண்ட் போல அடித்து விளக்கு ஏற்றலாம். மாடம் உங்கள் நெஞ்சுப் பகுதிக்கு நேராக இருக்க வேண்டும். அப்படி செய்ய முடியாதவர்கள், வீட்டில் நிலை வாசல் படியில் வைத்து விளக்கு ஏற்ற வேண்டுமே தவிர, அதற்குக் கீழ் வைத்து ஏற்றக்கூடாது.

vilakku

அப்படி கீழே வைத்து ஏற்றுபவர்கள் ஒரு சிறிய மனை வைத்து ஏற்றுவது முறையானது. அதே போல தலை வாசல் படியில் கோலம் போடுவது, கோடு போடுவது போன்றவற்றை எல்லாம் செய்யக்கூடாது. வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு எல்லாம் இப்படி விளக்கு ஏற்றினால் வீட்டினுடைய வாசல் பகுதி பாதிக்கப்படும் என்று வீட்டு முதலாளிகள் அனுமதிப்பது இல்லை. இப்படிப்பட்டவர்கள் மனை வைத்து ஏற்றுவது மிகவும் சிறந்தது. தலை வாசலை எப்பொழுதும் வெற்றிலை மாலை, ஏலக்காய் மாலை அல்லது மாவிலை ஆகியவற்றால் அலங்காரம் செய்து வைத்தால் குடும்பத்தில் எப்பொழுதும் சுபகாரியத் தடைகள் ஏற்படாது, சுபீட்சமும் நீடிக்கும் என்பது நம்பிக்கை.

nilai-vasal

தலைவாசல் பகுதியில் பிளாஸ்டிக் மலர்களால் அலங்கரித்து இருப்பவர்கள் அம்மலர்கள் மஞ்சள் நிறத்தில் அமைந்திருப்பது விசேஷமானது. தலை வாசலுக்கு இரண்டு புறமும் இரண்டு ஜன்னல்கள் இருப்பது அதிர்ஷ்டம் தரும். அப்பகுதியில் ஜன்னல்களே இல்லாத இல்லத்தில் நிச்சயம் கண் தொடர்பான பிரச்சினைகளும், கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சனைகளும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். இவர்கள் இது போல் தொடர்ந்து வெள்ளிக் கிழமைகளில் விளக்கு ஏற்றி வர அந்த பிரச்சனைகள் நிச்சயம் குறையும்.

- Advertisement -