வீட்டிற்குள் எந்த வித தீய சக்திகளும் நுழையாமல் இருக்க இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்.

nilaivasal
- Advertisement -

என்றென்றைக்கும் வீட்டில் நிம்மதி நிலவ வேண்டும். மகிழ்ச்சி நிலைத்திருக்க வேண்டும் என்று தான் அனைவரும் ஆசைப்படுவோம். ஆனால் இந்த நிலை பலருக்கும் கிடைப்பதில்லை. ஏதாவது ஒரு ரீதியில் குடும்பத்தில் பிரச்சனைகள், சண்டைகள், சச்சரவுகள், மன நிம்மதியின்மை, வியாதிகள், வறுமை என்று பல பிரச்சனைகள் இருக்கும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் அப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து வெளியே வருவதற்கும் தீய சக்திகள் வீட்டிற்குள் வராமல் இருப்பதற்கும் நம் வீட்டு நிலை வாயிலில் எதை வைக்க வேண்டும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக நிலைவாசல் என்பது குலதெய்வத்தின் அம்சமாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த நிலை வாசலில் தான் கிரகலட்சுமி வீற்றிருப்பாள் என்றும் மகாலட்சுமியும் நிறை வாசலின் அமர்ந்திருப்பாள் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் அன்றைய காலத்தில் இருந்தே நிலை வாசலை மிதிக்கக்கூடாது. நிலைவாசலின் மேல் அமரக்கூடாது. நிலைவாசல் அருகில் அமர்ந்து தீய விஷயங்கள் எதையும் பேசக்கூடாது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அப்படிப்பட்ட நிலை வாசலில் நாம் தெய்வீக அம்சம் பொருந்திய விஷயங்களை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் தெய்வம் நம் வீட்டிற்குள் வரும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் இன்றைய காலத்திலும் பல பேர் நிலை வாசலில் வெள்ளிக்கிழமை அன்று மஞ்சள் தடவி குங்குமம் வைக்கும் பழக்கத்தை மேற்கொள்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் மாயிலை தோரணம் கட்டுவதும் மகாலட்சுமி தாயாரை வீட்டிற்குள் வரவழைப்பதற்காக செய்யக்கூடிய செயலாகவே கருதப்படுகிறது.

ஆனால் இன்றைய காலத்தில் மாவினை தோரணத்திற்கு பதிலாக பிளாஸ்டிக்கில் தோரணங்கள் கிடைக்க அதை எடுத்து மாட்டி விடுகிறோம். அதனால் எந்த பலனும் இல்லை என்பதுதான் உண்மை. சரி இப்பொழுது தீய சக்திகள் எதுவும் வீட்டிற்குள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். இதற்கு நமக்கு உறுதுணையாக இருப்பது அருகம்புல். அருகம்புல் என்றதும் நம் நினைவிற்கு வருவது விநாயகர் பெருமான் தான் என்றாலும் அருகம்புல்லில் அனைத்து தெய்வங்களும் வாசம் செய்கிறார்கள் என்ற ஒரு கூற்றும் நிலவு வருகிறது.

- Advertisement -

அருகம்புல் நேர்மறை ஆற்றல்கள் அனைத்தையும் ஈர்க்கக் கூடியதாக திகழ்கிறது. அருகம்புல் இருக்கும் இடத்தில் எதிர்மறை ஆற்றல்கள் எதுவும் செயல்படாது என்ற கூற்றும் நிலவுகிறது. அருகம்புல்லை மாலையாக தொடுத்து வீட்டு நிலை வாசலில் தோரணமாக கட்டி விடும்பொழுது வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள், தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வீட்டிற்குள் எந்த வித தீய சக்திகளும் வராத அளவிற்கு வீட்டிற்கு ஒரு அறங்காவலாக இந்த அருகம்புல் திகழ்கிறது.

அருகம்புல் மாலை கட்டும் அளவிற்கு கிடைக்காத நிலையில் இரண்டு அருகம்புல்லை எடுத்து நிலை வாசலின் மேலே இரண்டு ஓரங்களிலும் சொருகி விட்டாலே போதும். வேறு எதுவும் செய்யத் தேவையில்லை. இந்த அருகம்புல்லை முடிந்தால் மாற்றலாம். முடியாவிட்டால் அது காய்ந்தாலும் அப்படியே இருக்கட்டும். அருகம்புல்லிற்கு அவ்வளவு பெரிய மகத்துவம் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கடன் தீர வாராகி அன்னைக்கு தேய்பிறை பஞ்சமியில் இந்த தீபத்தை ஏற்றுங்கள்.

விநாயகரின் அம்சமான இந்த அருகம்புல்லை நம் வீட்டு நிலை வாசலில் வைத்து நம் வீட்டையும் வீட்டில் இருக்கும் நபர்களையும் தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்றுவோம்.

- Advertisement -