எந்த துஷ்ட சக்தியாலும் உங்கள் தூக்கத்தை கெடுக்க முடியாது. கெட்ட கனவுகள் வராமல், இரவு நிம்மதியாக தூங்க இந்த மந்திரத்தை 11 முறை உச்சரித்து விட்டு தூங்கச் செல்லுங்கள். உங்களை பாதுகாக்க அந்த ஈசனே வந்துவிடுவார்.

shivan2

பகல் முழுவதும் வேலை செய்து, உழைத்து களைத்து வீடு திரும்பிய பின்பு, நிம்மதியாக ஒரு பிடி உணவு அருந்தி விட்டு, படுக்கையில் படுத்தால் தூக்கமானது நம்முடைய கண்களை தழுவ வேண்டும். நிம்மதியான தூக்கத்தில் தான் நம்முடைய வாழ்க்கையே முழுமையாக நிறைவு பெறுகிறது என்று கூட சொல்லலாம். ஒரு வேளை சாப்பிடாமல் கூட இருந்து விடலாம். ஆனால், ஒரு நாள் இரவு தூங்கவில்லை என்றால் அதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்பு என்பது ஒரு மனிதனுக்கு அதிகமாக இருக்கும். இரவில் எவர் ஒருவருக்கு நிம்மதியான தூக்கம் இல்லையோ, அவர்களால் நிம்மதியான வாழ்க்கையையும் நிச்சயமாக வாழ முடியாது.

sleepless

இரவு ஆழ்ந்த முழு தூக்கத்தை தூங்கினால் தான், பகல் நேரத்தில் வேலையில் கவனத்தை செலுத்த முடியும். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியும். தேவையில்லாத மன அழுத்தங்கள் கூட வருவதற்கு காரணம் இரவு ஆழ்ந்த தூக்கம் இல்லாதது தான். இரவில் தூங்கச் சென்றாலே தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு, தேவையற்ற கெட்ட கனவுகள் வந்து தூக்கம் கெடுபவர்களுக்கு, வாழ்க்கையில் தீராத துயரத்தின் மூலம் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, ஆன்மீக ரீதியாக சொல்லப்பட்டுள்ள ஒரு மந்திரத்தைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சிவபெருமானை மனதார நினைத்து, நெற்றியில் விபூதி பூசிக் கொண்டு, அதன் பின்பு இந்த மந்திரத்தை 11 முறை உச்சரித்து விட்டு, சிவபெருமானே நீயே துணை என்று சொல்லிவிட்டு, தூங்கச் செல்லுங்கள். கட்டாயம் மன நிம்மதி கிடைத்து தேவையற்ற மன பயம் நீங்கி, எதிர்மறை ஆற்றலின் மூலம் வரக்கூடிய தாக்குதல்கள் நீங்கி, நிம்மதியான தூக்கம் கட்டாயம் வரும் என்பதில் சந்தேகமே கிடையாது. உங்களுக்காக சிவபெருமானின் மந்திரம் இதோ!

sivan-god2

சவ்வும் நம சிவாய நம
ஸ்ரீயும் நம சிவாய நம
அங் உங் வங் சிவாய நம
ஓம் நம சிவாய நம

- Advertisement -

இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு உறங்கினால் கட்டாந்தரையில் படுத்தால் கூட, பட்டு மெத்தையில் சொர்க்கத்தில் தூங்குவது போல ஒரு மன அமைதி கிடைக்கும். திருட்டு பயம் நீங்கும். பேய் பிசாசு கனவு கட்டாயம் வரவே வராது. துஷ்ட சக்திகள் உங்களை நெருங்க முடியாது. இதோடு மட்டுமல்லாமல் சிலருக்கு உடலில் இருக்கும் நோயால், அதன் மூலம் ஏற்படக்கூடிய வலியால் அவதிப்பட்டு வருவார்கள். அவர்களால் உடலில் ஏற்படும் உபாதைகளால் தூங்கவே முடியாது. அப்படிப்பட்ட உபாதைகளைக் கூட கட்டுப்படுத்தக் கூடிய சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு.

sleep

தொடர்ந்து ஒரு மண்டலம் 48 நாட்கள் இந்த மந்திரத்தை தூங்கச் செல்லும்போது உச்சரித்துக் கொண்டே வாருங்கள். உங்களுடைய வாழ்க்கையில் பல மாற்றங்களை உங்களால் உணர முடியும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து, எம்பெருமானை மனதார வேண்டிக்கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்டு பீரோவில் இந்த 3 பொருளையும் ஒன்று சேர்த்து வையுங்க! அப்புறம் பாருங்க மகாலட்சுமிக்கே, காசை கடனாக கொடுக்கும் அளவிற்கு பணக்காரர் ஆயிருவீங்க.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.