உங்க வீட்டு பீரோவில் இந்த 3 பொருளையும் ஒன்று சேர்த்து வையுங்க! அப்புறம் பாருங்க மகாலட்சுமிக்கே, காசை கடனாக கொடுக்கும் அளவிற்கு பணக்காரர் ஆயிருவீங்க.

bero1

பணக்காரராக வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்குமே வசதி படைத்தவர்களாக, அதிக பணம் உடையவர்களாக வாழவேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஏனோ, சிலருக்கு பணத்தை சேர்க்கும் தந்திர வித்தை கடைசிவரை தெரியாமலேயே போகின்றது. ஒரு ரூபாயைக் கூட எதிர்காலத்திற்காக சேமித்து வைத்துக் கொள்ளாதவர்கள் கையில் கூட, பணம் சேரும். வருமானம் இல்லாதவர்களுக்கு கூட வருமானம் தானாக தேடி வரும். தொழிலில் முன்னேற்றம் இல்லாதவர்களுக்கு கூட, தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்து அதிக லாபத்தை பெற முடியும். அதற்கான ஒரு தாந்திரீக சூட்சம முறையைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் இரண்டே பொருள் தான். பச்சரிசி, 5 ரூபாய் நாணயம், சின்ன கண்ணாடி பவுல். பச்சரிசி என்பது சாதாரணமாக சமையலுக்காக பயன்படுத்த கூடிய பொருள் மட்டும் கிடையாது. சுபகாரியங்களில் பச்சரிசிக்கு எப்போதுமே ஒரு முன்னுரிமை உண்டு. பச்சரிசியில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. திருமணத்தில் பச்சரிசியில், மஞ்சள் கலந்து அட்சதையாக பயன்படுத்தி, மங்களகரமான பொருட்களின் வரிசையில் இதற்கு மிக மிக முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. 16 செல்வங்களைப் பெற்றுத் தரக் கூடிய சக்தியும் இந்த பச்சரிசியில் அடங்கியுள்ளது.

பெரிய பெரிய ஹோமங்களில் பூஜைகளில் கலசத்தை நிறுத்த வேண்டும் என்றாலும், பச்சரிசியை பரப்பி தான் அதன் மேல் கலச சொம்பு நிற்க வைப்பார்கள். இறைவனுக்கு பிரசாதமாக செய்யக்கூடிய பலகாரங்களிலும் பச்சரிசிக்கு முன்னுரிமை உண்டு. மாவிளக்கு போடுவதிலும் பச்சரிசி மாவுக்கு முன்னுரிமை உண்டு. வாசலில் மாக்கோலமிட்டாலும் மஹாலட்சுமி வீட்டிற்குள் வருவாள். இவ்வாறாக பல நேர்மறை ஆற்றலை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் இந்த பச்சரிசியை, பணம் பெறுவதற்கு நாம் எப்படி பயன்படுத்த போகின்றோம் என்ற சூட்சும ரகசியத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

இந்த பரிகாரத்திற்க்கு சிறிதளவு நெல் கிடைத்தால், அதை பச்சரிசியுடன் சேர்த்து கலந்து கொள்ளலாம். நாட்டு மருந்துகளில் நெல் கிடைக்கும். முடிந்தால் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். முடியாதவர்கள் வெறும் பச்சரிசியை கூட பயன்படுத்தலாம் தவறொன்றும் கிடையாது.

- Advertisement -

பீங்கான் பவுல் அல்லது அகலமாக இருக்கும் கண்ணாடி பௌலில் முழுமையாக பச்சை அரிசியை நிரப்பி விடுங்கள். அதன் மேல் சிறிதளவு மஞ்சள் தூளைத் தூவி விட்டு, அதன் மேல் 5 ரூபாய் நாணயத்தை வைத்து, ஐந்து ரூபாய் நாணயத்தின் மேல் முடிந்தால் வாசனை நிறைந்த மல்லிகை பூவை வைத்து, அப்படியே உங்களுடைய வீட்டு பீரோவில் வைத்து விடுங்கள். நீங்கள் பணம் நகை வைத்திருக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.

five-rupee-coins

வாடிய பூ பீரோவில் இருக்கக்கூடாது. தினம்தோறும் முடிந்தால் பூவை எடுத்து விட்டு, மாற்றிவிடுங்கள். பூ தினந்தோறும் கிடைக்காதவர்கள், பூ வைக்க வேண்டாம். அகலமான கண்ணாடி அல்லது பீங்கான் கிண்ணம் நிரம்ப தான் பச்சரிசி இருக்க வேண்டும். எடுக்கும்போதே சின்ன பவுலா எடுத்துக்கோங்க! பெரிய பவுலை எடுத்தா அதே நீ நிறம்ப தான் பச்சரிசி வைக்கணும். குறைவாக வைக்கக் கூடாது. ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், அதன் மேல் ஐந்து ரூபாய் நாணயம் இவ்வளவு தாங்க!

mallipoo

மாதம் ஒருமுறை இந்த பச்சரிசியை காக்கை குருவிகளுக்கு போட்டுவிடலாம். அப்படி இல்லையென்றால் பச்சரிசி மாவாக அரைத்து, வாசலில் மாக்கோலம் இட்டு விடலாம். மீண்டும் அந்த கண்ணாடியை பவுலை சுத்தம் செய்துவிட்டு, புதியதாக பச்சரிசியை நிரப்பி இதே போல் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

bero

வெள்ளிக்கிழமை அன்று இதை தயார் செய்து பீரோவில் வைத்தால் நிச்சயம் உங்கள் வீட்டு பீரோவில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். இதேபோல ஒரு பவுலை தயார் செய்து நீங்கள் தொழில் செய்யும் இடத்திலும், பணம் வைக்கும் பெட்டியில் வைக்கலாம். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த பரிகாரத்தோடு சேர்ந்த உங்களுடைய விடாமுயற்சியும் இருந்தால், பணத்தை வைப்பதற்கே இடம் இருக்காது, அந்த அளவிற்கு பணம் நிரம்பி வழியும்.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்டு பீரோவில் இந்த 3 பொருளையும் ஒன்று சேர்த்து வையுங்க! அப்புறம் பாருங்க மகாலட்சுமிக்கே, காசை கடனாக கொடுக்கும் அளவிற்கு பணக்காரர் ஆயிருவீங்க.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.