வீட்டில் நிம்மதி உண்டாக மற்றும் பண வரவு அதிகரிக்க இந்த தண்ணீரைத் வீட்டின் மூலைகளில் தெளித்தால் போதுமே!

theertham-lakshmi

நம்மிடம் எவ்வளவு பணம் தான் இருந்தாலும் அதை விட மிகவும் தேவையான ஒன்று நிம்மதி. எவ்வளவு பேர் வீட்டில் நிம்மதியாக இருக்கின்றனர்? வீட்டிற்குள் நுழைந்தாலே சதா சண்டை, சச்சரவு என்று ஒரு சிலருடைய வீட்டில் எல்லாம் இருக்கும். இது போன்ற வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் இருப்பதை உணரலாம். வீட்டிற்குள் வரும் பொழுது நிம்மதியும், சாந்தமும் குடிகொள்ள, செல்வ வளம் அதிகரிக்க இந்த தீர்த்தத்தை வீடு முழுக்க தெளித்து வரலாம். அது என்ன தீர்த்தம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

theertham

அலுவலகத்தில் இருப்பவர்கள் வேலை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பும் பொழுது வீட்டில் நிம்மதி இருக்கும் என்கிற நம்பிக்கையில் தான் இருப்பார்கள் ஆனால் வீட்டிற்குள் சென்றதும் சண்டையை ஆரம்பித்து விடுபவர்களும் உண்டு. இவ்வாறு எதிர்மறை ஆற்றல்களை கொண்டிருப்பவர்களுக்கு இந்த பரிகாரம் நல்ல ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.

நாம் அன்றாடம் பூஜை செய்யும் பொழுது பூஜையில் தீர்த்தம் வைப்பது வழக்கம். அந்த தீர்த்தத்தில் ஒரு சிலர் தண்ணீர் மட்டுமே வைப்பார்கள். ஆனால் இன்னும் சிலர் அதில் துளசி இலைகளை போட்டு துளசி தீர்த்தம் செய்து வைப்பார்கள். மேலும் சிலர் அதில் வேறு சில பொருட்களும் சேர்த்து புனித தீர்த்தமாக மாற்றி விடுவார்கள். வீட்டில் கங்கா ஜலம் வைத்திருப்பவர்கள் இந்த தீர்த்தத்தில் கங்கா ஜலம் விட்டுக் கொள்ளலாம்.

thulasi theertham

இப்படி நாம் செய்து வைக்கும் தீர்த்தத்தை தெளித்து வந்தால் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் அனைத்தும் வெளியேறிவிடும் மேலும் கெட்ட சக்திகள், பில்லி, சூனியம், ஏவல் போன்ற எந்த ஒரு துஷ்ட தீவினைகளும் உங்களை நெருங்க கூட செய்யாது. அப்படியான விசேஷமாக தீர்த்தத்தை எப்படி செய்ய வேண்டும்? என்பதை இனி பார்ப்போம்.

- Advertisement -

நீங்கள் வைக்கும் தீர்த்த பாத்திரம் செம்பு அல்லது பித்தளையாக இருப்பது மிகவும் நல்லது. அதில் சிவனுக்குரிய வில்வம் மற்றும் விஷ்ணுவிற்கு உரிய துளசி இரண்டுமே சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு இலைகளும் மிகுந்த விசேஷமான சக்திகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. இதில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட போதும் தான். இருப்பினும் இவைகள் ஒன்றோடொன்று இணையும் பொழுது அதற்குரிய பலன்களும் அதிகம்.

theertham1

இந்த தீர்த்தத்திற்குள் பச்சை கற்பூரம் மற்றும் சிறிதளவு ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். பூஜைகள் முடிந்ததும் தீர்த்தத்தில் இருக்கும் தண்ணீரை வீடுகளில் மூலை முடுக்குகளிலெல்லாம் தெளித்து வாருங்கள். படுக்கை அறை, பூஜை அறை, சமையல் அறை என்று ஒரு அறைகளையும் விட்டு வைக்காமல் அனைத்து இடங்களிலும் இவ்வாறு தீர்த்தத்தை தெளித்து வந்தால் நல்ல ஒரு அதிர்வலைகள் வீட்டில் உண்டாகத் தொடங்கும்.

lakshmi-devi

எந்த அளவிற்கு வீட்டில் நல்ல அதிர்வுகள் இருக்கின்றதோ! அந்த அளவிற்கு உங்களுக்கு செல்வமும் அதிகரிக்கும். மகாலட்சுமியின் அருட் பார்வை இருந்தால் தான் வீட்டில் நல்ல அதிர்வலைகள் பெருகும். நீங்கள் கடை அல்லது தொழில் செய்பவர்களாக இருந்தால் அந்த தொழில் ஸ்தாபனங்களிலும் இவ்வாறு மகாலட்சுமிக்கு பூஜை செய்து தீர்த்தத்தை தெளித்து வந்தால் அமோகமாக வெற்றி அடைவீர்கள். வியாபாரம் செழிக்க இந்த புனித தீர்த்தத்தை கடைகளில் தெளித்து விடுங்கள்.