நினைத்த காரியம் நடக்க விநாயகர் வழிபாடு

vinayagar dheepam
- Advertisement -

தெய்வங்களிலே எளிமையான தெய்வமும் கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடி வரக் கூடிய தெய்வமும் விநாயகர் தான். பக்தர்கள் நினைத்த மாத்திரத்தில் அவரை வணங்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் அவர் ஆங்காங்கே வீற்றிருக்கிறார். இந்த விநாயகர் வழிபாடுகளுக்கு அதிக விரத முறைகளையும் கட்டுப்பாடுகளையும் கிடையாது.

அப்படியான விநாயகரை நம்முடைய கடன் பிரச்சனை தீரவும் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

நினைத்தது நடக்க விநாயகர் வழிபாடு

இந்த வழிபாடு புதன்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அதே போல் இதை ஆலயத்தில் தான் செய்ய வேண்டும் வீட்டில் செய்யக் கூடாது. இந்த வழிபாடு செய்வதற்கு ஒரு முழு தேங்காய் வாங்கிக் கொள்ளுங்கள். இதில் தேங்காய் எண்ணெய் அல்லது சுத்தமான நெய் ஊற்றி ஏற்றலாம். அதே போல் பஞ்சுத்திரி போட்டு தான் ஏற்ற வேண்டும் நெய்வேத்தியமாக வெல்லம் வைத்தாலே போதும்.

இந்தப் பொருட்களை எல்லாம் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு கொண்டு செல்லுங்கள். அங்கு தேங்காய் சரிபாதியாக உடைத்துக் கொள்ளுங்கள். உடைத்த தேங்காய்க்குவு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை அப்படியே நிறுத்தி வைத்தால் நிக்காது. அதற்கு கீழே ஒரு அகல் விளக்கை வைத்துவிட்டு அதன் மேல் தேங்காய் வையுங்கள்.

- Advertisement -

இப்போது தேங்காயில் திரியை பெருக்கல் குறி போல போட வேண்டும். ஒவ்வொரு முடியிலும் இரண்டு திரிகள் இருக்கும்படி போட்டுக் கொள்ளுங்கள். அடுத்ததாக தேங்காயில் தேங்காய் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி விநாயகருக்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்றுங்கள். நெய்வேத்தியமாக எடுத்துச் சென்று வெல்லத்தை வைத்து விடுங்கள். ஏதேனும் ஒரு புஷ்பத்தை வைத்து விடுங்கள்.

இந்த தீபத்தை ஏற்றும் போது உங்களுடைய ஏதேனும் ஒரு கோரிக்கை மட்டும் வையுங்கள். நினைத்த காரியங்கள் எதுவும் அதை நிறைவேற வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுங்கள் அல்லது கடன் அடைய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். இரண்டுக்குமே இந்த தீப வழிபாடு சிறந்த பலனை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தங்கம் சேர மகாலட்சுமி வழிபாடு

இப்படியாக 5 வாரங்கள் இந்த முறையில் தீபம் ஏற்றி விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும். ஐந்து வாரங்கள் முடிந்தவுடன் உங்கள் வேண்டுதல் நிச்சயம் பலித்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு வேறு ஒரு வேண்டுதலை வைத்து விநாயகரை எந்த முறையில் வழிபாடு செய்யுங்கள் அதுவும் நிச்சயம் பலிக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -