- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநினைத்த கோரிக்கையை நிறைவேற்றும் தீபம்

நினைத்த கோரிக்கையை நிறைவேற்றும் தீபம்

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் நடைபெற வேண்டும் என்றுதான் நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுவோம். அது நியாயமான முறையில் நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அதை தான் நாம் கோரிக்கையாக தெய்வத்திடம் வைக்க வேண்டும். எந்த ஒரு நல்ல காரியமும் நம்முடைய வாழ்க்கையில் நடைபெறாமல் தடைப்பட்டு கொண்டே இருக்கிறது என்னும் பட்சத்தில் அதை கோரிக்கையாக தெய்வத்திடம் முன்வைக்கும் பொழுது தெய்வத்தின் அருளால் அந்த தடைகள் நீங்கும். இந்த தடைகள் ஏற்படுவதற்கு நம்முடைய கர்ம வினைகளே காரணம் என்பதால் முதலில் கர்ம வினைகள் படிப்படியாக குறைய ஆரம்பித்து பிறகு கோரிக்கையை தெய்வம் நிறைவேற்றுவார்கள். இப்படி கோரிக்கையை நிறைவேற்றுவதற்கும் நம்முடைய கர்மவினையை குறைப்பதற்கும் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கோரிக்கை நிறைவேற தீபம்

வீட்டில் கண்டிப்பான முறையில் தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எந்த ஒரு வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் பழக்கம் இருக்கிறதோ அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் என்றும் அந்த வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலகிச் செல்லும் என்றும் கூறப்படுகிறது. அப்படி ஏற்றக்கூடிய தீபத்தில் பலவிதமான சூட்சுமங்கள் இருக்கின்றன. எந்த எண்ணெயை பயன்படுத்தி ஏற்றுகிறோம், எந்த திரியை பயன்படுத்தி ஏற்றுகின்றோம், எந்த நேரத்தில் ஏற்றுகின்றோம் என்றெல்லாம் இருக்கிறது.. அந்த முறையில் நம்முடைய நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு ஏற்ற வேண்டிய தீபத்தை தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நமக்கு நான்கு வகையான எண்ணெய்கள் வேண்டும். அவை நெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய். இவை நான்கையும் சம அளவு வாங்கி ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இந்த தீபத்தை ஏற்றுவதற்காக திரி பயன்படுத்துவோம் அல்லவா? அந்த திதி ஐந்து வண்ண திரிகளாக இருக்க வேண்டும். அவை வெள்ளை, மஞ்சள், சிவப்பு, பச்சை மற்றும் நீலம். இந்த ஐந்து நிறங்களில் இருக்கக்கூடிய திரிகளை ஒன்றாக திரித்து போட்டு தான் தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த தீபத்தை நாம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்றலாம் அல்லது காலை 6:00 மணியிலிருந்து 7 மணிக்குள் ஏற்றலாம் அல்லது மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் ஏற்றலாம் அல்லது இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் ஏற்றலாம். இந்த நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்து அதில் உங்களுடைய நியாயமான கோரிக்கை எது நிறைவேற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை எழுதிக் கொள்ளுங்கள். அதை மடித்து ஒரு தட்டிற்கு மேல் வைத்து விட வேண்டும். அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். அந்த அகல் விளக்கிற்கு மேல் புதிதாக வாங்கிய ஒரு அகல் விளக்கை வைத்து கலந்து வைத்திருக்கும் எண்ணெய் திரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இந்த தீபத்தை வீட்டு பூஜை அறையில் தான் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றும் பொழுது சுத்தமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தீபத்தை ஏற்றி வைத்த பிறகு இந்த தீபத்திற்காக ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை வைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக சில நெய்வேத்தியங்கள் சில பலன்களை நமக்குத் தரும். அவை தேங்காய் தன லாபம் மற்றும் வியாபாரம் சிறப்பாக நடைபெற உதவும். சிறுபருப்பு சுண்டல் படிப்பு தொடர்பான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும். வெண்பொங்கல் தீர்க்க சுமங்கலி யோகத்தை தரும், கருப்பு திராட்சை எதிரிகள் தொல்லையை நீக்க உதவும், மிளகு அதிகார பதவிகள் கிடைக்க வழிவகை செய்யும், அப்பம் திருமண தடையை விளக்கும். இந்த தீபத்தை தொடர்ச்சியாக 11,:21, 54, 108 நாட்கள் ஏற்ற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தேய்பிறை பிரதோஷ தீப வழிபாடு

மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டை முழுமனதோடு உங்களுடைய இஷ்ட தெய்வத்தையோ அல்லது குலதெய்வத்தையோ நினைத்து தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் ஏற்றி வழிபாடு செய்ய கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்