தீராத பிரச்சனைகள் தீரவும், நீங்கள் மனதில் நினைத்தது நடக்கவும் அனைவரது வீட்டில் இருக்கும் இந்த உப்பு மட்டும் போதும்

uppu
- Advertisement -

வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொருவரும் அவற்றில் இருந்து விடுபடுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி சாதாரண உப்பை வைத்து பிரச்சினையை எப்படி சரி செய்ய முடியும் என்று யோசிக்காமல், மனதை ஒருமுகப்படுத்தி முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது நிச்சயம் பலன் கிடைக்கிறது. நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் இந்த உப்பை பயன்படுத்தி சுற்றி போடும் பொழுது, மந்திரிக்கும் பொழுதும் பெரியவர்கள் கையில் வைத்து சுற்றி போடுவதை நாம் பார்த்திருக்கிறோம். அதேபோல் ஒரு சிலர் தங்கள் பாவங்கள் தீர வேண்டும் என்பதற்காகவும், மனக்கவலைகள் குறைய வேண்டும் என்பதற்காகவும் கல் உப்பை வாங்கி சென்று கோவிலின் கொடி மரத்தின் மீது கொட்டி வைப்பார்கள். அதேபோல் செய்த பாவங்கள் அனைத்தும் தீர கடல் நீரில் தலை முழுகுழதை வழக்கமாக வைத்திருக்கிறோம். இப்படி புனிதமான கல் உப்பின் மூலம் நாம் நினைத்தது எப்படி நிறைவேறும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சீதை மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கிறோம் .அனைத்து பிரச்சனைகளையும் நம்மைவிட்டு விளக்கக்கூடிய விஷ்ணு பகவான் பார்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார். எனவே தான்மகாலட்சுமிக்கும் உப்பு மிகவும் பிடித்த பொருளாக இருக்கிறது.

- Advertisement -

கிராமங்களில் எல்லாம் உப்பை மற்றவருக்கு கடனாக கொடுக்கவும் மாட்டார்கள், கடனாக வாங்கவும் மாட்டார்கள் .ஏனென்றால் கடனாக கொடுக்கும் பொழுது மற்றவர்களிடம் இருக்கும் எதிர்மறை சக்தி நமக்கு வந்துவிடுகிறது. நம்மிடம் இருக்கும் நேர்மறை சக்தி மற்றவருக்கு சென்றுவிடுகிறது.

காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்துவிட்டு, பூஜை அறையின் முன்வந்து கிழக்கு முகமாக அமர வேண்டும். பின்னர் இரண்டு உள்ளங்கையிலும் கல்லுப்பை எடுத்துக்கொண்டு, கைகளை இறுக்கமாக மூடிக் கொள்ள வேண்டும். பிறகு மனதை ஒருமுகப்படுத்தி உங்களுக்கு வேண்டியவற்றை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். உங்கள் பிரச்சனையை வாய்விட்டு பத்து நிமிடமாவது சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

- Advertisement -

உங்கள் உடல்நிலை சரியாக வேண்டுமென்றால் எனது உடல் நல்லபடியாக இருக்கிறது, எனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை, நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று 10 நிமிடம் தொடர்ந்து சொல்ல வேண்டும். பின்னர் இந்த கஉப்பை ஒரு பேப்பரில் மடித்து கொள்ள வேண்டும். அதன் பிறகு இதனை ஓடும் தண்ணீரில் விட்டு விட வேண்டும்.

இவ்வாறு எங்கள் வீட்டிற்கு அருகில் ஓடும் தண்ணீர் இல்லை என்றால் தாவரத்திற்கு தண்ணீர் ஊற்றும் பொழுது அதனுடன் சேர்த்து இந்த உப்பை போட்டு விடலாம். அப்படி இல்லை என்றால் ஒரு பக்கெட்டில் தண்ணீர் நிறைத்துக் கொண்டு, அதில் உப்பை கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றிவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உப்பு எப்படி தண்ணீரில் கரைகிறதோ அதுபோல உங்கள் பிரச்சனைகளும் கரைந்து உங்களுக்கான தீர்வு கிடைத்துவிடும்.

- Advertisement -