27 நட்சத்திரங்களை தாண்டி வரக்கூடிய ஒரு நட்சத்திரம் தான் 28வது நட்சத்திரம் என்று கூறக்கூடிய அபிஜித் நட்சத்திரம். இந்த அபிஜித் நட்சத்திரம் என்பது கிருஷ்ண பகவானுக்குரிய நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே திகழக்கூடியது. இந்த நட்சத்திர நேரத்தில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாடு நாம் நினைத்ததை அப்படியே நிறைவேற்றும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
அபிஜித் நட்சத்திர மந்திரம்
திருவோண நட்சத்திரமான பெருமாளுக்குரிய நட்சத்திரம் வந்த பிறகு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் இருக்கக்கூடிய நட்சத்திரம் தான் அபிஜித் நட்சத்திரம். இது மிகவும் சிறப்பு வாய்ந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரம் இருக்கக்கூடிய நேரத்தில் நாம் என்ன செய்தாலும் அது நமக்கு அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் ஏற்படுத்தும் என்று புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட நேரத்தில் நாம் செய்ய வேண்டிய ஒரு மந்திர வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது தெரிந்து கொள்ள போகிறோம்.
அபிஜித் நட்சத்திரம் என்பது ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி மதியம் 12:25 மணிக்கு ஆரம்பித்து 12:49 மணிக்கு நிறைவடைகிறது. இந்த 24 நிமிடங்கள் தான் அபிஜித் நட்சத்திரம் இருக்கக் கூடிய நேரமாக திகழ்கிறது. இந்த நேரத்தில் நாம் கண்டிப்பான முறையில் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த நாளில் நாம் செய்யக்கூடிய இந்த வழிபாடு நாம் நினைத்ததை நினைத்தபடியே நிறைவேற்றும்.
அபிஜித் நட்சத்திரம் என்பது கிருஷ்ண பகவானுக்குரிய நட்சத்திரம். திங்கட்கிழமை என்பது சிவபெருமானுக்குரிய கிழமை. அன்றைய தினம் தேய்பிறை அஷ்டமியும் வருகிறது என்பதால் அது காலபைரவருக்கும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இப்படி இவர்கள் மூவரின் அருளையும் பெற்றிருக்கக் கூடிய இந்த நாளில் நாம் சிவபெருமானின் மந்திரத்தை அபிஜித் நட்சத்திர நேரத்தில் 24 முறை மட்டும் கூறினால் போதும் நம்முடைய வாழ்க்கையில் நாம் என்ன நினைத்து அந்த மந்திரத்தை கூறினோமோ அது நிறைவேறும்.
இந்த நேரத்தில் வீட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். இந்த தீபம் சிவபெருமானிற்கு முன்பாகவும் ஏற்றலாம். பெருமாளுக்கு முன்பாகவும் ஏற்றலாம். ஏற்றி முடித்த பிறகு தரையில் ஒரு விரிப்பை விரித்து வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு சிவபெருமானுக்குரிய இந்த ஒரு மந்திரத்தை 24 முறை மட்டும் கூறினால் போதும். ஒருவேளை அந்த நேரத்தில் வீட்டில் இல்லை வேறு இடங்களில் இருக்கிறோம். அப்பொழுது என்ன செய்வது என்று யோசிப்பவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் முழு மனதோடு சிவபெருமானை நினைத்து அமைதியான ஒரு இடத்தை தேர்வு செய்து இந்த மந்திரத்தை 24 முறை கூறலாம்.
மந்திரம்
“மவ சிவ”
இதையும் படிக்கலாமே:பண கஷ்டத்தை தீர்க்கும் தேய்பிறை அஷ்டமி பரிகாரம்
எளிமையான சிவ மந்திரத்தை கிருஷ்ண பகவானுக்குரிய நட்சத்திர நேரத்தில் கூறுபவர்களுக்கு கண்டிப்பான முறையில் கிருஷ்ணர் மற்றும் சிவபெருமானின் பரிபூரண அருளால் அவர்கள் நினைத்தது அப்படியே நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.