- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண கஷ்டத்தை தீர்க்கும் தேய்பிறை அஷ்டமி பரிகாரம்

பண கஷ்டத்தை தீர்க்கும் தேய்பிறை அஷ்டமி பரிகாரம்

- Advertisement -

எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாக திகழக்கூடியவர் கால பைரவர் என்றும் நவகிரகங்களில் கர்ம வினைகளுக்கு அதிபதியாக திகழக்கூடிய சனி ஈஸ்வர பகவானின் குருவாகவும் திகழக்கூடியவர்தான் காலபைரவர். அப்படிப்பட்ட காலபைரவருக்குரிய தேய்பிறை அஷ்டமி நாளில் நாம் காலபைரவரை நினைத்து செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடும் பரிகாரமும் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டத்தை நீக்கும். அந்த வகையில் பணம் தொடர்பான கஷ்டங்களை நீக்குவதற்கு தேய்பிறை அஷ்டமி நாளன்று செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பண கஷ்டத்தை தீர்க்கும் பரிகாரம்

வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை, எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கையில் தங்கவில்லை, கடன் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது, எவ்வளவு சம்பாதித்தாலும் கடனை அடைக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம் என்று பணம் தொடர்பான எந்த பிரச்சினையாக இருந்தாலும் எந்த கஷ்டமாக இருந்தாலும் அவை அனைத்தையும் நீக்கி அருள் புரியக்கூடிய தெய்வமாக தான் கால பைரவர் திகழ்கிறார். அப்படிப்பட்ட காலபைரவரை கஷ்டங்கள் நீங்குவதற்கு தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

சித்திரை மாதத்தில் வரக்கூடிய முதல் தேய்பிறை அஷ்டமி என்பது ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3:30 மணிக்கு மேல் தேய்பிறை அஷ்டமி என்பது தொடங்குகிறது. பொதுவாக தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் கால பைரவரை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கஷ்டங்கள் தீரும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6 மணிக்குள் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய காலபைரவரின் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு அவரை வழிபாடு செய்யும் பொழுது நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீரும்.

இதோடு சேர்த்து பணம் தொடர்பான கஷ்டங்கள் தீருவதற்கு இதே ராகு காலத்தில் காலபைரவரை நினைத்து வீட்டில் ஒரு பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பாக ராகு காலத்தில் வீட்டு பூஜை அறையில் சிவபெருமானின் படத்திற்கு முன்பாக காலபைரவரை நினைத்து ஒரு அகல் விளக்கில் தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். அந்த அகல் விளக்கை கால பைரவராக பாவித்து உங்களுடைய பண பிரச்சினை பணக்கஷ்டங்கள் அனைத்தும் முற்றிலும் தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு சிவப்பு நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த துணியை தீபத்திற்கு முன்பாக வைத்து அதில் நான்கு மிளகு, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், ஒரு துண்டு பச்சை கற்பூரம், இரண்டு வில்லை சந்தனம், புனுகு சிறிதளவு, அரகஜா சிறிதளவு இதோடு சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய செவ்வரளி மலர் 2 வைத்து மூட்டையாக கட்டி அந்த தீபத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். தீபம் குறைந்தது ஒரு மணி நேரமாவது எரிய வேண்டும் அல்லது ராகு காலம் முடியும் வரை கூட இந்த தீபம் வீட்டில் எரியலாம். தீபத்தை குளிர வைத்த பிறகு இந்த மூட்டையை எடுத்து காலபைரவரை மனதார நினைத்துக் கொண்டு வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்து விட வேண்டும். அந்த இடம்தான் குபேர மூலை என்று கூறப்படுகிறது. அந்த இடத்தில் நாம் இந்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து வைக்கும் பொழுது நமக்கு இருக்கக்கூடிய பணம் தொடர்பான அனைத்து கஷ்டங்களும் விலகும். முக்கியமாக கடன் பிரச்சினைகள் தீரும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இதில் இருக்கக்கூடிய பொருட்களை கால் படாத இடத்திலோ அல்லது ஓடுகின்ற நீரிலோ போட்டுவிட்டு புதிதாக மறுபடியும் நாம் செய்து வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே:கண்திருஷ்டி விலக மை பரிகாரம்

அதி சக்தி வாய்ந்த தெய்வமாக திகழக்கூடிய காலபைரவரை நினைத்து இந்த முறையில் தேய்பிறை அஷ்டமி நாளன்று அதுவும் குறிப்பாக ராகு காலத்தில் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் காலபைரவரின் அருளால் பணம் தொடர்பான கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்