- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநினைத்தது நடக்க வாராகி வழிபாடு

நினைத்தது நடக்க வாராகி வழிபாடு

- Advertisement -

இந்த கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடிய தெய்வங்களுள் ஒருவராக இருப்பவர் தான் வாராகி அம்மன். வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்கும் என்று புராணங்களில் இருந்து கூறப்படுகிறது. இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக திகழ்பவர் தான் ராஜராஜ சோழன். ராஜராஜ சோழன் ஒவ்வொரு முறையும் போருக்கு செல்வதற்கு முன் வாராகி அம்மனை வழிபாடு செய்த பிறகுதான் செல்வார் என்றும் அப்படி செல்லக்கூடிய போர்களில் வெற்றியும் பெறுவார் என்றும் கூறப்படுகிறது. அப்படி வெற்றிகளை தரக்கூடிய தெய்வமான வாராகி அம்மனை எந்த முறையில் வழிபட்டால் நாமும் வெற்றிவாகை சுடலாம் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து அதில் இருக்கக்கூடிய லாப நஷ்டங்களை கணக்கிட்டு செய்ய ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஆரம்பித்தும் நம்மால் அந்த காரியத்தில் வெற்றி அடைய முடியவில்லை என்னும் பட்சத்தில் அதற்கு தெய்வத்தின் அருளும் வேண்டும் என்று தான் அர்த்தம். அப்படி தெய்வத்தின் அருளை பெறுவதற்கு பலவிதமான வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றான வாராகி வழிபாட்டை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நாம் செய்ய வேண்டும். திங்கட்கிழமை ஆரம்பித்தோம் என்றால் திங்கள், செவ்வாய், புதன் என்று மூன்று நாட்கள் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். பிறகு சாதாரணமாக நாம் வழிபாடு செய்யும்பொழுது வாராகி அம்மனை வழிபாடு செய்து கொள்ளலாம். முதலில் இந்த வழிபாட்டை நாம் வாராகி அம்மனுக்கு உகந்த பஞ்சமி திதியில் செய்ய ஆரம்பிக்கலாம் அல்லது வெள்ளிக்கிழமையில் செய்ய ஆரம்பிக்கலாம்.

வாராகி அம்மனுக்கு இரவு நேரம் என்பது மிகவும் சிறப்பு மிகுந்த நேரமாக கருதப்படுகிறது என்பதால் மாலை 6 மணிக்கு மேல் இந்த வழிபாட்டை செய்வது என்பது மிகவும் சிறப்பு. வீட்டில் வாராஹி அம்மனின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். வாராகி அம்மனுக்கு தீபம் ஏற்றி வைத்து தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாராஹி அம்மனின் இந்த ஒரு மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். இதே போல் மூன்று நாட்களும் தொடர்ச்சியாக வாராஹி அம்மனுக்கு தீபம் ஏற்றி வைத்து வாராகி அம்மனின் மந்திரத்தை 108 முறை கூற வேண்டும்.

- Advertisement -

இப்படி நாம் கூறக்கூடிய இந்த நாட்களில் அசைவத்தை தவிர்த்து சுத்தமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று நாட்கள் தொடர்ச்சியாக மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்த பிறகு அனுதினமும் காலையில் நாம் வழிபாடு செய்யும்பொழுது அந்த மந்திரத்தை ஏழு முறையோ, ஒன்பது முறையோ, 11 முறையோ நம்மால் இயன்ற எண்ணிக்கையில் ஒற்றைப்படை வருவது போல் கூறினால் போதும். அனுதினமும் வாராகி அம்மனின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நாம் செய்யக்கூடிய செயல்கள் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மந்திரம்

“ஓம் ஷியாமளாயை வித்மஹே
ஹலஹஸ்தாயை தீமஹி
தந்நோ வாராஹி ப்ரசோதயாத்”

இதையும் படிக்கலாமே:நினைத்த வேலை கிடைக்க நரசிம்மர் வழிபாடு

நம்முடைய விடாமுயற்சியுடன் வாராகி அம்மனை முழுமனதோடு நம்பி இந்த முறையில் வழிபாடு செய்து விட்டு காரியத்தை செய்ய அந்த காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகி வெற்றிகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்