நினைத்தது நடக்க கார்த்திகை சஷ்டி தீப வழிபாடு

murugan agal dheepam
- Advertisement -

கார்த்திகை மாதம் என்றாலே அது தீபத்திற்குரிய மாதம் தான். அதே போல் இந்த கார்த்திகை மாதம் சில தெய்வங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதிலும் முருகப் பெருமானுக்கு கார்த்திகை மாதம் மிகவும் விசேஷமானது. அதே போல் திதிகளில் சஷ்டி திதியும் முருகருக்கு மிகவும் உகந்த திதி. இவை அனைத்தும் ஒன்றாக வந்திருக்கக் கூடிய இந்த நாளில் முருகப்பெருமானை திதிகளில் இப்படி தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் நாம் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.

கந்தா என்று மனதார நினைத்தாலே வந்து அருள் பாலிக்கும் அற்புதமான கடவுள் தான் இந்த முருகப்பெருமான். அப்படியான கந்தக் கடவுளை விசேஷமான இன்றைய தினத்தில் அவருக்கு பிடித்தமான முறையில் தீபம் ஏற்றி வழிபடும் பொழுது நமக்கு விருப்பமானவற்றை உடனே அவர் நிறைவேற்றி தருவார். அது என்ன தீபம் எப்படி ஏற்ற வேண்டும் என்பதையெல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

நினைத்தது நிறைவேற வெற்றிலை தீபம்

இன்று சஷ்டி திதியின் ஏற்றப்படும் இந்த தீபத்தை காலை முதல் மாலை மாலை வரையில் எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்றலாம். நீங்கள் தீபம் ஏற்றும் நேரத்தில் ராகு காலம், எமகண்டம் போன்றவை இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் இன்றைய நாளில் நீங்கள் அசைவத்தை தவிர்த்து விட வேண்டும். இது மிகவும் முக்கியமான ஒன்று.

உங்கள் வீட்டில் இருக்கும் முருகப்பெருமான் படத்தை சுத்தமாக துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து செவ்வரளி மாலை சூட்டிக் கொள்ளுங்கள். வேல் வைத்து வழிபாடு செய்பவர்கள் இன்று வேலுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதும் சிறந்த பலன்களை தரும். அதே போல் முருகப்பெருமான் சிலை வைத்திருப்பவர்கள் அதற்கும் இன்றைய தினம் வழிபாடு செய்யுங்கள்.

- Advertisement -

முருகப்பெருமான் படத்திற்கு முன்பாக அவருக்கு உகந்த சஷ்டிவிரத கோலத்தை போட வேண்டும். அதே போல் ஆறு நல்ல தரமான வெற்றிலையாக பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு தாம்பாள தட்டில் இந்த ஆறு வெற்றிலையும் வட்ட வடிவமாக அடுக்கி நடுவில் ஒரு அகலை வைத்து ஆறு திரி போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து முருகப்பெருமானை வணங்க வேண்டும்.

நெய்வேத்தியமாக உங்களால் முடிந்த ஏதேனும் ஒன்றை செய்து வையுங்கள. முடியாதவர்கள் ஒரு டம்ளரில் பசும்பாலை காய்ச்சி வைத்து வணங்கினால் கூட போதும். தீபம் ஏற்றி வைத்து வணங்கும் நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தை படிக்க வேண்டும். இந்த நேரத்தில் உங்களுக்கு என்ன கோரிக்கை உண்டோ அதை மனதார முருகனிடம் சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள். நிச்சயம் அதை நிறைவேற்றித் தருவார்.

- Advertisement -

இந்த தீபத்தை கோலத்தின் மேல் ஆறு வெற்றிலையை வரிசையாக அடுக்கி அதன் மேல் ஆறு அகல் விளக்கை வைத்து திரி போட்டும் தீபம் ஏற்றலாம். உங்களுக்கு எந்த முறையில் தீபம் ஏற்றுவது வசதியாக உள்ள தோ அது போல செய்து கொள்ளுங்கள் ஆனால் ஆறு விளக்கு ஆறு தீபம் எறிய வேண்டும் அவ்வளவு தான்.

இதையும் படிக்கலாமே: பணம் சேர வெள்ளிக்கிழமை பரிகாரம்

இன்றைய இந்த அற்புதமான கார்த்திகை மாத சஷ்டி திதியில் முருகருக்கு ஏற்றப்படும் இந்த வெற்றிலை தீபமானது உங்கள் வேண்டுதல் அனைத்தையும் நிறைவேற்றித் தரும். நம்பிக்கையுடன் இன்று இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டு முருகனின் அருள் ஆசையுடன் உங்களுடைய ஆசை அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -