உங்களுக்கு நேரம் சரியில்லாத நேரத்தில் கூட இந்த மந்திரத்தை கூறினால் போதும் நினைத்தது அப்படியே நடக்கும்.

vinayagar-navagragam

நீங்கள் நினைத்தது நடக்கவில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்களா? உங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கவலைகளை மனதில் கொண்டிருப்பீர்கள். நாம் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு காரியம் நடக்கவில்லை என்றால் அதனால் மனம் எவ்வளவு வேதனைப்படும் என்பதை நிச்சயம் மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியாது. நம்முடைய வேண்டுதல்களை விக்னங்களை தீர்க்கும் விநாயகரிடம் வைத்து விட்டால் போதும்! எத்தகைய பிரச்சினைகள் உங்களுக்கு இருந்தாலும் அவை தவிடு பொடியாகி விடும்.

அந்த அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த இந்த விநாயகர் மந்திரத்தை தினமும் மனதிற்குள் உச்சரிக்க வேண்டும். உங்களுக்கு நினைத்த காரியம் உடனே நிறைவேற இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வாருங்கள். நிச்சயம் நீங்கள் நினைத்தது தடையின்றி நிறைவேறுவதை நீங்களே பார்ப்பீர்கள். அப்படி என்ன மந்திரம் அது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.

விநாயகர் சக்தி மந்திரம்:
ஈம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லெளம் கம் ஐம்
கஏஈ லஹ்ரீம் தத்சவிதர்
வரேண்யம் கணபதயே க்லீம்!

mantra-signature

ஹசககல ஹரீம்
பர்க்கோ தேவஸ்யதீமஹீ
வரவரத சவு சஹல ஹ்ரீம்
த்யோயோநப்ர சோதயாத் சர்வ
ஐனம்மே வசமானய ஸ்வாஹா!!

- Advertisement -

நாம் நினைத்தது தடைப்பட்டுக் கொண்டே இருந்தால் அதற்கு மிக முக்கிய காரணம் நம் ஜாதகத்தில் இருக்கும் கிரக நிலைகள் சரியாக அமைந்து இல்லாததே காரணம். நம்முடைய ஜாதகத்தில் சுப கிரகங்கள், அசுப கிரகங்கள் என்று தனித்தனியே பிரிக்கப்பட்டிருக்கும். அதில் சுபகிரகங்கள் நீசம் பெற்றிருந்தால் நாம் என்ன நினைத்தாலும் அதில் தடைகள் வந்து சேரும். நினைத்த காரியங்கள் அனைத்தும் தோல்வியை தழுவும்.

navagragha-mandhiram

மேலும் அசுப கிரகங்கள் உச்சம் பெற்று இருக்கும் காலத்தில் நமக்கு தீராத துன்பங்கள், காரியத் தடைகளும் ஏற்படும். நாமொன்று நினைக்க அது ஒன்று நடக்கும். என்ன செய்வது என்றே தெரியாத நிலையில் விழித்துக் கொண்டிருப்போம். அது போன்ற சமயங்களில் நமக்கு முழுமுதற் கடவுளான விநாயகர் அருள் புரிவதாக வேத புராணங்கள் கூறுகின்றன. விநாயகரை வணங்கினால் தோல்வி என்பதே கிடையாது.

arugampul-vinayagar

ஒரு முறை கைலாயத்தில் தேவர்களுக்கு பிரச்சனை ஒன்று வந்ததாம். நவகிரகங்களும் தேவர்களுக்கு எதிராக இருந்த பொழுது விநாயகரின் இந்த சக்தி மந்திரத்தை பாராயணம் செய்து அந்த பிரச்சனையிலிருந்து நீங்க பெற்றனராம். தேவர்களுக்கு மட்டுமல்ல மனிதர்களின் தீராத பிரச்சனைகள் தீரவும் இந்த மந்திரம் துணை புரிவதாக கூறப்படுகிறது.

vinayagar-1

இந்த சக்தி வாய்ந்த விநாயகர் மந்திரத்தை நீங்கள் உச்சரித்தால் கிரக நிலைகள் சரியில்லாத நேரத்திலும் நீங்கள் நினைத்தது நடக்கும். தடைகள் அனைத்தும் தகர்த்து நம்முடைய நியாயமான வேண்டுதல்களை விநாயகர் நிறைவேற்றித் தருவார் என்பது நம்பிக்கை. உங்களுடைய பிரச்சனைகள் தீர, நினைத்தது நடக்க இந்த விநாயகர் மந்திரத்தை தினமும் உச்சரித்து நீங்களும் பயன் பெறுங்கள்.

இதையும் படிக்கலாமே
உங்கள் ஜாதக கட்டப்படி வேலையே கிடைக்காது என்ற சூழ்நிலை இருந்தாலும், உங்களது தலையெழுத்து மாறும். நிச்சயம் வேலை கிடைக்கும். விதியை மாற்றக்கூடிய சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.