உங்கள் ஜாதக கட்டப்படி வேலையே கிடைக்காது என்ற சூழ்நிலை இருந்தாலும், உங்களது தலையெழுத்து மாறும். நிச்சயம் வேலை கிடைக்கும். விதியை மாற்றக்கூடிய சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு.

sivan-2

சிலபேருக்கு அவரவருடைய ஜாதக கட்ட படி, வேலையை இழக்கக்கூடிய நேரம் வரும். அதேசமயம் அந்த வேலையை விட்டு விட்டால், அவருக்கு மற்றொரு வேலை கிடைக்கவே கிடைக்காது என்று விதி இருந்தாலும் கூட, அதை நம்முடைய மதியால் வெல்ல முடியும் என்று சொல்கிறது சாஸ்திரம். உங்களுடைய ஜாதக கட்டத்தில் வேலையே கிடைக்காது என்ற சூழ்நிலை இருந்தாலும் சரி, அரசாங்க வேலை காண அனுகூலங்கள் இல்லை என்றாலும் சரி, அதை மாற்ற ஒரு சிறப்பான சக்தி வாய்ந்த பரிகாரம் உள்ளது. அது என்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sani-baghavan

ஒருவருடைய ஜாதக கட்டத்தில் சனி பகவானோடு கேது தொடர்பு கொண்டிருந்தால், கட்டாயம் அவருக்கு வேலை கிடைப்பதில் பிரச்சனை வரும். அதே ஜாதகர்களுக்கு சுக்கிரன் பலம் இல்லை என்றால் சொல்லவே வேண்டாம். தொடர் கஷ்டங்கள் இருந்து கொண்டுதான் இருக்கும். எந்த ஒரு ஜாதக காரருக்கு சுக்கிரனும் சூரியனும் வலுவிழந்து இருக்கின்றார்களோ அவர்களுக்கு வேலை கிடைப்பது சிரமம். விரைவில் நல்ல வேலை கிடைக்க வேண்டுமென்றால் சூரியபகவானின் அனுக்கிரகத்தை முழுமையாக பெற, தினம்தோறும் காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு சூரிய நமஸ்காரம் செய்து வர வேண்டும். ‘ஓம் சூர்யாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

சூரியநமஸ்காரம் செய்வதோடு சேர்த்து சூரியனார் கோவிலுக்கு சென்று கோதுமையை தானமாக வழங்க வேண்டும். இப்படியெல்லாம் செய்து வந்தும் வேலை கிடைக்கவில்லை. பிரச்சினைகளின் தாக்கம் அதிகமாக இருந்து கொண்டே உள்ளது. என்ன செய்வது? அதற்கும் வழி உண்டு சாஸ்திரத்தில்! மார்க்கண்டேயனின் விதியை மாற்றி எழுதிய மந்திரத்தை பற்றி நாமெல்லாம் கேள்விப்பட்டிருப்போம்.

Sivan lingam

மார்க்கண்டேயருக்கு இளமையிலேயே இறப்பு என்பது தான் விதி. அந்த விதியை மாற்றி அமைக்க முடிந்தது அல்லவா? சிவபெருமானை இறுகப் பற்றிக் கொண்ட மார்க்கண்டேயருக்கு, என்றும் பதினாறு என்ற வரத்தை அளித்தான் அந்த ஈசன். மார்கண்டேயருக்கு எமபயம் வந்தபோது, சிவபெருமானை பற்றி கொண்ட போது, உச்சரித்த மந்திரம் ஒன்று உள்ளது. பொதுவாக இதை எமபயம் போக்கும் மந்திரம் என்று சொல்லுவார்கள். நம்முடைய விதியை மாற்ற கூடிய சக்தியும் இதற்கு உண்டு.

- Advertisement -

அதாவது உங்களுடைய விதிப்பயன் படி உங்களது ஜாதக கட்டத்தில் எப்பேர்பட்ட பிரச்சனை இருந்தாலும், அதை சரிசெய்ய மார்கண்டேயர் உச்சரித்த, அந்த மந்திரத்தை நீங்களும் தினம் தோறும் காலையும் மாலையும் உங்களது வீட்டில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, உச்சரித்து சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். மார்க்கண்டேயரின் விதியை மாற்றிய அந்த மந்திரம் உங்களுக்காக இதோ.

Siva Lingam

மிருத்யுஞ்ஜய மகா மந்திரம்:
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே
சுகந்திம் புஷ்ட்டிவர்த்தனம்

உருவாருகமிவ பந்தனாத்
ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்.

lingam

நான்கே வரி மந்திரம். இந்த மந்திரம் யாருடைய தலையெழுத்தை வேண்டுமென்றாலும் சரியாக மாற்றி எழுதும். உங்களுக்கு வேலை கிடைக்காத பட்சத்தில் இந்த மந்திரத்தை உச்சரித்து, முடிந்தால் சிவபெருமானின் கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கு முன்பாக இந்த மந்திரத்தை உச்சரித்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்து வரும் பட்சத்தில் கட்டாயம் உங்களுக்கு ஏதாவது ஒரு வழியில் வேலை கிடைக்கும் என்பது உறுதி.

இதையும் படிக்கலாமே
சொந்த வீடு கட்ட 5 ரூபாய் போதுமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.