கலியுக தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருக பெருமானை அவருக்குரிய விசேஷகரமான நாட்களில் நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு பல நன்மைகள் உண்டாகும். அவரை அன்றாடம் வழிபாடு செய்வதும் மிகவும் சிறப்புக்குரியதாகவே திகழ்கின்றது. தினமும் அவரை நினைத்து வழிபாடு செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களான சஷ்டி, கிருத்திகை, செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி போன்ற நாட்களில் முருகப்பெருமானுக்கு என்று சிறப்பான வழிபாட்டு முறைகளை மேற்கொள்ளலாம். அப்படி செய்வதன் மூலமும் நன்மைகளை பெற முடியும். அந்த வகையில் எந்த மந்திரத்தை கூறி வழிபட்டால் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
முருகப்பெருமானுக்கு என்று பல மந்திரங்கள் இருக்கின்றன. அந்த மந்திரங்களுக்கு ஏற்றார் போல் பலன்கள் கிடைக்கும். ஒவ்வொரு மந்திரத்தையும் ஒவ்வொருவர் உபயோகப்படுத்தி பார்த்து அதன்மூலம் பலன் அடைந்திருப்பார். அந்த வகையில் இந்த பதிவில் நாம் ஒரு சிவசுப்பிரமணிய மந்திரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம். அது என்ன சிவசுப்பிரமணிய மந்திரம்? இந்த மந்திரத்தில் சிவபெருமானும் இருப்பார், முருகப்பெருமானம் இருப்பார். இந்த மந்திரத்தை கூறி நாம் வழிபட்டால் சிவபெருமானின் அருளையும் நம்மால் பெற முடியும் முருகப்பெருமானின் அருளையும் நம்மால் பெற முடியும். அதனால் தான் இதற்கு சிவசுப்பிரமணிய மந்திரம் என்று கூறுகிறோம்.
இந்த மந்திரத்தை தினமும் 27 முறை கூறுவது என்பது மிகவும் சிறப்பு. அப்படி தினமும் கூற இயலாதவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று கூறலாம் அல்லது மாதத்தில் இரண்டு முறை வரக் கூடிய சஷ்டி திதியில் கூறலாம் அல்லது மாதத்தில் ஒருமுறை வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரம் அன்று கூறலாம். இதுவும் செய்ய இயலாது என்பவர்கள் பௌர்ணமி அன்று முருகப் பெருமானுக்கு இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்யலாம்.
இவற்றில் எந்த நாள் உங்களுக்கு வசதியாக இருக்கிறதோ அந்த நாளை தேர்வு செய்து கொள்ளுங்கள். காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் சிலைக்கு உங்களால் இயன்ற அபிஷேகத்தை செய்து கொள்ளுங்கள். சிலை இல்லாதவர்கள் முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து ஆறு இடங்களில் சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு முருகப்பெருமானுக்கு முன்பாக ஒரு வெற்றிலையை வைத்து அதில் அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்றிக் கொள்ளுங்கள். பிறகு இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். இந்த 27 என்பதை கணக்கில் வைத்துக் கொள்வதற்கு 27 துவரம் பருப்பை எடுத்து வைத்து ஒவ்வொரு முறையும் மந்திரத்தை சொல்லும் பொழுது இந்த துவரம் பருப்பை முருகப்பெருமானுக்கு முன்பாக ஒரு சிறிய கிண்ணத்தை வைத்து அதில் போட்டுக் கொள்ளுங்கள். வழிபாடு நிறைவு செய்த பிறகு அந்த துவரம் பருப்பை எடுத்து சமைப்பதற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
இப்படி செய்வதன் மூலம் சிவபெருமானின் அருளும், முருகப்பெருமானின் அருளும் இவர்களோடு சேர்ந்து செவ்வாய் பகவானின் அருளும் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மந்திரம்
ஓம் தத் புருஷாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்
இதையும் படிக்கலாமே:
பணவரவை உண்டாக்கும் வன்னி மர வழிபாடு
முருகப்பெருமானின் இந்த அற்புதமான மந்திரத்தை முழுமனதோடு முருகப்பெருமானை நினைத்து 27 முறை கூறுபவர்களுக்கு தொட்ட காரியம் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறுவதோடு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.