நினைவின் வலிகள் – காதல் கவிதை

Kadhal kavithai

நினைவின் வலியும், பிரிவின் மொழியும்
நீ என்னை நீங்கி சென்ற
பிறகு தான் உணர்ந்தேன்.

காதலின் வலியோடு
உன் கண்களை தேடி
காத்து கிடக்கிறேன்..
ஒருமுறை நீ என்னை பார்த்தல்
போதும்.. ஒரு நொடி கூட
தாமதிக்காமல்.. உன் உண்மை
காதலை புரிந்துகொள்ள காத்திருக்கிறேன்..
விரைந்து வா.. நம் காதலுக்கு
புது வெளிச்சம் தா..

இதையும் படிக்கலாமே:
தனிமை எனக்கு பிடிக்கிறது – காதல் கவிதை

kadhal kavithai Image
kadhal kavithai Image

காதல் என்றால் அது அன்பு மட்டும் அல்ல. சண்டை, பொறாமை, காமம் என பல உணர்வுகள் அதில் அடங்கி உள்ளது. இதற்கு சிறு உதாரணம் கூறவேண்டும் என்றால், தன் காதலன் அவன் தோழியிடம் பேசினால் கூடு காதலியின் மனம் தாங்காது. அதே போல தான், காதலி தன் தோழனிடம் பேசினாலும் காதலன் மனம் தாங்காது. காதலில் தான் எத்தனை பொறாமைகள்.

ஆனால் இந்த அன்பு பொறாமை சில நேரம் அறிவிழந்து சண்டைக்கு வழிவகுக்கும். தவறை யார் செய்கிறார்கள் என்பதல்ல முக்கிய, மன்னிப்பை யார் கேட்கிறார்கள் என்பது தான் முக்கியம். காதலில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்பவர்கள், சண்டை என்றால் விட்டுக்கொடுப்பது கிடையாது. இதனாலே பல காதலர்கள் நாள் கணக்கில் பேசாமல் இருந்து தவிப்பதுண்டு. அப்படி தவிப்பவர்களுக்கு இந்த கவிதை சமர்ப்பணம்.

Love kavithai Image
Love kavithai Image

காதல் பாடல் வரிகள், நட்பு பாடல் வரிகள், காதல் கவிதைகள் இப்படி அன்பு சார்ந்த பல தகவல்கள் இங்கு உள்ளன.