மாதம்தோறும் நிலையான வருமானம், நிரந்தரமாக வந்துகொண்டே இருக்க இவரை வழிபட்டாலே போதும்.

suriya

ஒரு மனிதனுக்கு வருமானம் என்பது நிலையாக வந்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு மாதம் பற்றாக்குறையான வருமானம், ஒரு மாதம் அதிகப்படியாக வருமானம் என்று ஏற்றத்தாழ்வுகளோடு வருமானம் இருக்கும் பட்சத்தில், நம்மால் நிலையான வாழ்க்கையை வாழ முடியாது. சேமிப்பில் எடுத்து வைக்கும் பணம், வருமானம் இல்லாத சமயத்தில் கரைந்து போகும். இதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதில் சிரமம் இருக்கும். மாதம்தோறும் நிலையான வருமானத்தை தேடிக் கொள்ள, ஆன்மீக ரீதியாக என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

money1

நிரந்தர வருமானத்தை நிலையான வேலை வாய்ப்பை தரக்கூடிய சக்தி சூரிய பகவானுக்கு உண்டு. சூரிய பகவானை தொடர்ந்து எவரொருவர் வழிபட்டு வருகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக வருமானத்திற்கு குறைவிருக்காது. அதாவது தேவைக்கு ஏற்ப மாதம்தோறும் நிலையான வருமானம் கைக்கு வந்து கொண்டே இருக்கும். பற்றாக்குறை என்ற வார்த்தைக்கு இடம் இல்லை.

தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, சூரிய நமஸ்காரம் செய்ய மறந்துவிடாதீர்கள். இதோடு சேர்த்து ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய பகவான் சன்னிதிக்குச் சென்று இரண்டு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுவது மேலும் சிறப்பினைத் தரும். இது தவிர சூரிய பகவானின் ஆசீர்வாதத்தை பெற இரண்டு வழிமுறைகள் உள்ளது.

முதல் பரிகாரம், உங்கள் வீட்டு பூஜை அறையில் ஞாயிற்றுக்கிழமைகளில் கொஞ்சமாக கோதுமையை கீழே பரப்பி, அதன் மேல் ஒரு மண் அகல் தீபத்தை வைத்து, நெய் ஊற்றி தீபம் போட்டு சூரியபகவானை மனதார நினைத்து வணங்க வேண்டும். தொடர்ந்து 48 வாரங்கள் இப்படி செய்து வரும் பட்சத்தில், உங்களுக்கு இருக்கக்கூடிய பண கஷ்டம் நீங்கும். நிதிநிலைமை உயரும். நிலையான வருமானம் வரும். தீபம் முழுமையாக எரிந்து முடிந்து விட்ட பின்பு, கீழே பரப்பி வைத்திருக்கும் கோதுமையை எடுத்து பசுமாட்டிற்கு கொடுத்துவிடலாம்.

- Advertisement -

இரண்டாவது பரிகாரமாக ஒரு தாம்பூலத் தட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் கொஞ்சமாக கோதுமை மாவை கொட்டி, உங்களது வலது கை மோதிர விரலால் ‘ஸ்ரீம்’ என்ற வார்த்தையை எழுதி அதில் ஒரு சொட்டு நெய் விட்டு, தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ள வேண்டும். இப்போது உங்களுக்கு கோதுமை மாவு உருண்டைகள் கிடைத்திருக்கும்.

Ration gothumai

சப்பாத்திக்கு மாவு பிசைவது போல். இந்த மாவை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து, குளத்தில் இருக்கும் மீன்களுக்கு உணவாகப் போட்டுவிட வேண்டும். இப்படி செய்தால் நமக்கு இருக்கக்கூடிய கர்ம வினைகள் எல்லாம் நீக்கி, நிரந்தர வருமானத்தை தேடித்தர வழி கிடைக்கும். இந்த பரிகாரத்தை உங்களுக்கு எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் செய்யலாம். உங்களுக்கு எந்த பரிகாரம் சுலபமாக இருக்குமோ, நீங்கள் அந்த பரிகாரத்தை தேர்ந்தெடுத்து பயன் அடையலாம், என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
பெண்கள், காலையில் சமையலறைக்குள் சென்ற உடன், இந்த 1 வார்த்தையை சொல்லி விட்டு, அடுப்பை பற்ற வைத்தால், வீட்டில் பஞ்சம் என்ற வார்த்தைக்கே இடமில்லை.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.