பெண்கள், காலையில் சமையலறைக்குள் சென்ற உடன், இந்த 1 வார்த்தையை சொல்லி விட்டு, அடுப்பை பற்ற வைத்தால், வீட்டில் பஞ்சம் என்ற வார்த்தைக்கே இடமில்லை.

kitchen1

நம்முடைய வீட்டில் பணக்கஷ்டம் நிறைய இருக்கலாம். நிறைய கடனையும் வாங்கி வைத்திருக்கலாம். இருப்பினும் சமையலறையில் அரிசி பருப்பு உப்பு வாங்குவதற்கு நம்முடைய வீட்டில், நம் கையில் பணம் இல்லை என்ற நிலைமை நமக்கு வந்து விடவே கூடாது. வறுமை பஞ்சம் எவ்வளவு கொடியது என்பது, பசியால் அவதிப்பட்டவர்களுக்கு தான் புரியும். வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் சமையல் அறையை கோவிலாக மதித்து, சாப்பாட்டை அமிர்தமாக நினைத்தாலே போதும். அந்த குடும்பமும் சரி, அந்த குடும்பத்திற்கு அடுத்து வரக்கூடிய வாரிசுகளும் சரி வாழ்நாள் முழுவதும் தன தானியத்திற்கு கஷ்டப்படாமல் வாழலாம்.

cook1

பதிவிற்கு செல்வதற்கு முன்பு ஒரு சிறிய விஷயத்தையும் நாம் இந்த இடத்தில் தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு நமக்கு நேரம் நன்றாக இருக்கும்போது, எல்லாம் நல்லதாகவே நடக்கலாம். நாம் செய்யக்கூடிய தவறுகளுக்கான தண்டனை இன்று நமக்கு கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், இன்று நாம் செய்யும் தவறுகளும் பாவ கணக்குகளும், பட்டியலில் சேர்ந்து கொண்டே தான் வருகின்றது. நேரம் சரியில்லாத சமயத்தில், நாம் கீழே விழும் சமயமும் வரும்.

அந்த இடத்தில் ஒட்டுமொத்தமாக கஷ்டம் வந்து நம்மை அழுத்த தொடங்கிவிடும். முடிந்தவரை தவறு செய்வதை குறைத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் அலட்சியப் போக்கில் எந்த ஒரு தவறையும் செய்து விடக்கூடாது என்ற கருத்தோடு இந்த பதிவினை தொடங்கலாம்.

kitchen-and-milk

காலையில் பெண்கள் சமையலறைக்குள் சுத்தமாகத்தான் செல்ல வேண்டும். சுத்தமில்லாத சமயத்திலாவது குளித்துவிட்டு செல்லும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். இதுதான் உங்களுடைய குடும்பத்திற்கு நன்மையை தரும். காலையில் உங்களது வீட்டில் அடுப்பைப் பற்ற வைப்பதற்கு முன்பாக, அடுப்பை தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்வது மிகவும் நல்லது. அன்ன லட்சுமி வாசம் செய்யும் சமையலறையும் கோவிலுக்கு சமமானது தான்.

- Advertisement -

அடுப்பை பற்ற வைப்பதற்கு முன்பாக, அடுப்பின் மேலே மூன்று அரிசியை சமர்ப்பணம் செய்துவிட்டு, அதாவது 3 அரிசியை எடுத்து அடுப்பின் மேலே வைத்துவிட்டு, ‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி’ இந்த வார்த்தைகளை உச்சரித்து விட்டு, அதன் பின்பு உணவை சமைத்தால் உணவு மிக மிக ருசியாக இருக்கும். அடுப்பின் மேலே வைத்த அந்த மூன்று பருக்கை அரிசியை கூட வீணாக்க வேண்டாம்.

அன்றாடம் சாதம் செய்யும் அரிசியில் எடுத்து போட்டுக் கொள்ளுங்கள். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. இந்த வார்த்தையை தினம்தோறும் வீட்டில் இருக்கும் பெண்களின் வாயால் ஒருமுறையேனும் கட்டாயம் உச்சரிக்க வேண்டும். அதை சமையலறைக்கு காலை எழுந்து முதன்முதலாக செல்லும்போது உச்சரிப்பது மிகவும் நல்லது. முயற்சி செய்து பாருங்கள். உங்களுடைய வீட்டில் நல்ல மாற்றம் ஏற்படுவதை உங்களால் உணர முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
ஆண்களே! மனைவியிடம் இந்த 3 விஷயங்கள் கடைபிடித்து பாருங்கள்! உங்கள் வாழ்க்கையும் இனிமையாக மாறிவிடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.