எங்கு சென்றாலும் ஒரு மனிதரை பார்க்கும் பொழுது முதலில் நலம் விசாரித்த பிறகு அடுத்ததாக கேட்கும் கேள்வி எங்கே வேலை செய்கிறீர்கள்? இந்த கேள்வியை முன் பின் அறிமுகம் இல்லாதவர்களும் கேட்பார்கள் என்பது நம் அனுபவ ரீதியான உண்மை. அந்த நிலையில் ஒரு கௌரவமான வேலையை சொன்னோம் என்றால் அதனால் நம்முடைய மதிப்பும் மரியாதையும் கூடும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் அப்படிப்பட்ட கௌரவமான நிரந்தர வேலையை பெறுவதற்குரிய எளிய பரிகார முறைகளை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
நன்றாக படிக்க வேண்டும். படித்து முடித்த பிறகு அதற்குரிய வேலையில் சேர வேண்டும். வேலையில் முன்னேற வேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று பல கனவுகளை தான் இன்றைய இளைய தலைமுறையினர் தாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஒருவருக்கு நல்ல வேலை கிடைத்துவிட்டாலே அவர்களுடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகளை இருந்து அவர்களால் தப்பிக்க முடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
அப்படிப்பட்ட நிரந்தர நல்ல வேலையை பெறுவதற்கு முயற்சிகளை செய்தாலும் சிலரால் அந்த வேலையை பெற முடியாத சூழ்நிலை இருக்கும். அதற்கு காரணம் அவர்களின் ஜாதகத்தில் இருக்கும் பிரச்சனைகளும், தோஷங்களும். அந்த பிரச்சனைகளையும், தோஷங்களையும் நீக்குவதற்குரிய பரிகார முறைகளை பற்றி தான் பார்க்கப் போகிறோம். நிரந்தர வேலை கிடைப்பதற்காக எடுக்கும் முயற்சியோடு இந்த எளிய பரிகாரத்தையும் செய்வதன் மூலம் அவர்களின் கனவு வேலையை அவர்களால் பெற முடியும்.
நிரந்தரமான வேலை கிடைப்பதற்கு ஆஞ்சநேயரையும், வைரவரையும் வழிபட வேண்டும். இவர்கள் இருவரையும் சனிக்கிழமை தான் வழிபட வேண்டும். மேலும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி சுந்தர காண்டம் படித்து வழிபட்டு வருவதன் மூலம் ஆஞ்சநேயர் நமக்கு நிரந்தரமான வேலையை வழங்குவார்.
பைரவரை பொறுத்தவரை ஒரு கருப்பு நிற துணியில் 27 மிளகுகளை போட்டு நல்லெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெய் ஊற்றி பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இவ்வாறு சனிக்கிழமை தோறும் செய்து வர பைரவரின் அருளால் நிரந்தரமான நல்ல வேலை கிடைக்கும்.
இதோடு மட்டுமல்லாமல் சனிக்கிழமை காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு அரச மரத்திற்கு நம் கைகளால் நீரூற்றி வழிபட்டு வர விரைவிலேயே அரசு வேலை போன்ற நிரந்தரமான வேலை கிடைக்கும். இவ்வாறு தொடர்ந்து 43 நாட்கள் செய்து வர வேண்டும்.
சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து சூரிய நமஸ்காரம் செய்து சூரிய பகவானை அனுதினமும் வழிபடுவதன் மூலமும் நல்ல வேலை கிடைக்கும். அது மட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை தோறும் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று அங்கு வீற்றிருக்கும் சூரிய பகவானிற்கு முன்பாக கோதுமையை பரப்பி அதன் மீது இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வழிபட்டு வருவதன் மூலமும் வேலை தொடர்பான அனைத்து விஷயங்களும் நிறைவேறும்.
இதையும் படிக்கலாமே: வெற்றியைத் தரும் வழிபாடு
நம்முடைய முயற்சிகளை விடாமல் மேற்கொண்டு அதே சமயம் தெய்வீக வழிபாட்டையும் மேற்கொண்டால் கண்டிப்பான முறையில் நம் வாழ்க்கையில் பல வெற்றிகளை நம்மால் அடைய முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்கிறோம்.