நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே – பாரதியார் கவிதை

Bharathiyar kavithai

நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம்
அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

Bharathiyar Kavithai
Bharathiyar Kavithai

வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?

கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

Bharathiyar Kavithai
Bharathiyar Kavithai

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.

இதையும் படிக்கலாமே:
விடுதலை வேண்டும் – பாரதியார் கவிதை

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே பாடல் வரிகள் பல இசையமைப்பாளர்களால் பாடல் ஆக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த பாரதி என்ற படத்தில் இசை ஞானி இளையராஜாவின் இசையில் இந்த வரிகள் பாடலாக மாற்றப்பட்டது. அந்த பாடல் மேலே இணைக்கப்பட்டுள்ளது..

English Overview:
Here we have Bharathiyar kavithaigal – Poiyyo Meiyyo.”Nirpathuve nadapathuve lyrics in Tamil” is the first line of this Bharathiyar Padal.