நிமிடத்தில் உங்களை வெள்ளையாக்க நித்திய கல்யாணிப் பூ இருந்தால் போதும். அடிக்கிற வெயிலில், வெளியில் சென்று வந்தாலும் நீங்க கருப்பா மாறவே மாட்டீங்க.

face13
- Advertisement -

வெயில் காலம் வந்துவிட்டது. குடை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லவே கூடாது. சூரியனின் கதிர்கள் நம்மீது பட்டால் உடனே தோல் கருப்பாகி விடும். சன் டேன் வந்துவிடும். டூவீலர் ஓட்டவே சிலர் பயப்படுவாங்க. வெயில் காலத்தில் சிலர் கையை பார்த்தாலே கருப்பு வெள்ளை படம் பார்ப்பது போல இரண்டு நிறத்தில் தெரியும். துப்பட்டா கட்டிக்கொண்டு போனாலும் சூரிய கதிர் வீச்சின் தாக்கம் தாங்க முடியாமல் சில பேருடைய சருமம் உடனடியாக பொலிவிழக்கும்.

சிலபேருக்கு வெயில் காலத்தில் சருமத்தில் சிறிய குறு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. முட்டை முட்டையாக சொறி வந்துவிடும். இப்படிப்பட்ட எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வரக்கூடிய வெயில் காலத்தில் உங்களுடைய சருமத்தை எப்படிப் பாதுகாப்பது.

- Advertisement -

இயற்கையாகக் கிடைக்கக்கூடிய முல்தானிமெட்டி, நித்யகல்யாணி பூ. இந்த இரண்டு பொருட்கள் இருந்தால் போதும். நித்திய கல்யாணி பூ, இலை, தண்டு எல்லாவற்றிலும் மருத்துவ குணம் அடங்கியுள்ளது. நித்தியகல்யாணி செடியிலிருந்து சிறிதளவு தண்டோடு பூவோடு இலையோடு வெட்டிக் கொள்ளுங்கள். எல்லாம் சேர்த்து இரண்டு கைப்பிடி இருந்தால் கூட பரவாயில்லை.

மிக்ஸி ஜாரில் போடுவதற்கு ஏற்ப தண்டுகளை வெட்டிக் கொள்ளுங்கள். இலைகளை பூவை அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விழுது கொஞ்சம் தண்ணீராக இருக்கட்டும் பரவாயில்லை. ஒரு சின்ன கிண்ணத்தில் உங்களுக்கு தேவையான அளவு முல்தானி மெட்டி பொடியை போட்டு கொள்ளுங்கள். அந்த முல்தானி மெட்டியில் கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து வைத்திருக்கும் இந்த நித்யகல்யாண விழுதை ஊற்றி கலக்கவேண்டும். நமக்கு ஒரு பேஸ்ட் கிடைத்துவிடும்.

- Advertisement -

இந்த பேஸ்ட்டை எடுத்து உங்களுடைய உடம்பில் தடவும் பக்குவத்திற்கு கலந்து கொள்ளுங்கள். இவ்வளவு தான். முகம், கை, கால், உடல் முழுவதும் கூட இதை பூசிக் கொள்ளலாம். 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு அதன் பின்பு குளித்து விட வேண்டும். உங்களுக்கு முகம் கை கால்களில் மட்டும் தேவை என்றாலும் போட்டுக் கொள்ளலாம். அது அவரவர் விருப்பம். (உங்களுடைய தேவைக்கு ஏற்ப முல்தானிமெட்டி யையும், நித்திய கல்யாணி பூ சாரையும் எடுத்துக்கொள்ளலாம். இவ்வளவு அளவில்தான் இதை கலக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.)

தினம் தோறும் இதை செய்து வர வெயிலினால் ஏற்படும் சரும பாதிப்பு இருக்கவே இருக்காது. உங்களுக்கு ரொம்பவும் ட்ரை ஸ்கின் ஆக இருந்தால், முல்தானி மெட்டி நித்யகல்யாணி சாறு சேர்த்து கலந்து விட்டு, அதில் 2 ஸ்பூன் தேங்காய் நெய் விட்டு கலந்து கொள்ளுங்கள். இந்த பேக்கை உடம்பில் போட்டுக் குளித்து முடித்து வந்த பிறகு மாய்சுரைசர் க்ரீம் அப்ளை செய்து கொள்ளுங்கள். இதோடு மட்டுமல்லாமல் உங்கள் சருமத்தில் இருக்கக்கூடிய கட்டிகள் புண் இவைகளுக்கு கூட இது ஒரு நல்ல மருந்தாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -