இந்த மந்திரத்தை உச்சரித்தவர்கள் கோடீஸ்வரர் ஆகாமல் போனதாக சரித்திரமே இல்லை!

vinayagar1

வாழ்க்கையில் ஏற்படக்கூடிய எல்லா வகையான தடைகளையும் தகர்த்தெறிபவர் விக்னங்களை தீர்க்கும் விநாயகர் தான். ஐந்து கரங்களைக் கொண்ட ஆனை முகத்தனை பற்றிய தகவல்களையும், குறிப்பாக கோடீஸ்வர யோகத்தை பெறுவதற்கு எந்தப் பிள்ளையாரை வணங்க வேண்டும் என்பதைப் பற்றியும், எந்த மந்திரத்தை உச்சரித்தால் பரம ஏழையும், கோடீஸ்வர யோகத்தைப் பெறலாம் என்பதை பற்றியும், தான் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம். கடின உழைப்போடு சேர்த்த, இந்த ஒரு வரி மந்திரம் நிச்சயம் உங்களை கோடீஸ்வரராக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை தொடங்கலாம்.

lakshmi-ganapathy

மொத்தமாக விநாயகருக்கு 52 வடிவங்கள் இருப்பதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக வாழ்க்கையில் இருக்கக்கூடிய பணக் கஷ்டத்தை போக்குவதற்கு, நிதி கணபதியின் மூல மந்திரத்தையும், லட்சுமி கணபதியின் மூல மந்திரத்தை உச்சரித்தால் மட்டுமே போதும்.

வாழ்வில் இருக்கக்கூடிய கடன் பிரச்சினையைத் தீர்க்க நிதி கணபதி மந்திரத்தையும், மேலும் மேலும் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்க லக்ஷ்மி கணபதி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஓரிரு நாட்கள் மட்டுமே இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு கோடீஸ்வர யோகத்தை பெற வேண்டும் என்று நினைப்பது முற்றிலும் தவறான ஒன்று.

லட்சக்கணக்கில் இந்த மந்திரத்தை உச்சரித்து, அதன் பின்பு  இந்த மந்திரத்தை, எந்த அளவிற்கு உரு ஏற்றி வைத்துக் கொள்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களுடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பு அதிகரித்துக்கொண்டே செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. இன்று பல முக்கிய பணக்காரர்கள், விநாயகரின் இந்த மந்திரத்தை உச்சரித்து மேலும் மேலும் வாழ்க்கையில் முன்னேறியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

- Advertisement -

நம்முடைய வீடுகளில் கட்டாயம் விநாயகரின் திருவுருவப்படம் இருக்கும். முடிந்த வரை இந்த மந்திரத்தை சூரிய உதயத்திற்கு முன்பு உச்சரிப்பது அதி விரைவான பலனைக் கொடுக்கும். காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விட்டு, முடிந்தால் தினமும் விநாயகருக்கு அருகம்புல் சாத்தி பின்வரும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். உங்களுக்கான மந்திரம் இதோ!

arugampul-vinayagar

நிதி கணபதி மூல மந்திரம்:
‘ஓம் வக்ரதுண்டாய ஹீம்’

லட்சுமி கணபதி மூல மந்திரம்:
ஓம் ஸ்ரீம் கம் சௌம்யாய
கணபதயே வரவரத ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா!

vinayaga

இதில் ஏதாவது ஒரு மந்திரத்தை தினம்தோறும் உச்சரிக்கலாம் தவறொன்றும் கிடையாது. முடிந்தவர்கள் இரண்டு மந்திரத்தையும் தினம் 1008 முறை உச்சரிப்பது வாழ்க்கையில் விரைவான முன்னேற்றத்தை கொடுக்கும். சிறிய மந்திரம் என்பதால் நேரம் என்பது குறைவாகத்தான் எடுக்கும். உங்களுடைய மனசு முழுவதும், நீங்கள் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு நம்பிக்கையோடு நிதி கணபதியையும், லட்சுமி கணபதியையும் நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை உச்சரித்து தான் பாருங்களேன்! விரல் விட்டு எண்ணக்கூடிய நாட்களில் உங்களது முன்னேற்றம் வான் உயரத்தை தொடும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
செலவு செய்யும் பணம் இரட்டிப்பாக திரும்பவும் நம்மிடமே வருவதற்கு, இந்த 5 ரூபாய் நாணயத்தை உங்கள் பர்ஸ்ஸில் வைக்க வேண்டும். அது எந்த 5 ரூபாய்? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.