இந்த இலை 1 கைப்பிடி இருந்தா போதும் உடல் வலி, தசை வலி, தலை வலி எல்லா வலியும் எங்க போச்சுனே தெரியாது! நிம்மதியான தூக்கம் வர இதை தலைமாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த உலகத்தில் விலை மதிக்க முடியாத சொத்து ஆரோக்கியம் மட்டுமே ஆகும். ஓயாத உடல் உழைப்பால் ஏற்படக்கூடிய தசை வலி, உடல் வலி, தலைவலி போன்றவற்றை ரொம்ப சுலபமாக நீக்கிவிடக் கூடிய ஆற்றல் இந்த இலைக்கு உண்டு. சித்த மருத்துவத்தில் மிக முக்கிய பங்காற்றும் இந்த ஒரு இலைக்கு நிறையவே மகத்துவங்கள் உண்டு. நம் முன்னோர்கள் கண்ட வைத்திய முறைகளிலும் இந்த இலை பெருமளவு இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்தகைய இந்த இலை எப்படி எல்லாம் பயன்படுகிறது? நிம்மதியான தூக்கத்தை பெற இதை என்ன செய்யலாம்? என்பது போன்ற அற்புதமான ஆரோக்கிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

தீராத நோய்களையும் தீர்க்கும் அற்புதமான ஆற்றல் இந்த இலைக்கு உண்டு. இதன் இலை மட்டும் அல்லாமல் வேர், பட்டை, விதை, பூக்கள் என்று முழு தாவரமும் மருத்துவ குணங்களால் நிறைந்துள்ளது. இந்த இலைக்கு நொச்சி இலை என்று பெயராகும். நொச்சி இலை பலரும் அறிந்திருக்க கூடும், சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம். பொதுவாக நொச்சி இலையை ஆவி பிடிக்க பயன்படுத்துவார்கள், இதனால் தலைபாரம் குறையும்.

- Advertisement -

இந்த நொச்சி இலையை பிரஷ்ஷாக பறித்து ஒரு சுத்தமான காட்டன் துணி அல்லது நீங்கள் உபயோகப்படுத்தும் தலையணை உறையில் கூட நிரப்பி வையுங்கள். பிறகு இதை நீங்கள் தூங்கும் பொழுது உங்களுடைய தலைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்க வேண்டும். இதனால் நீர் கோர்வை இருந்தால் இது முழுமையாக உரிந்து கொண்டு, உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.

அது மட்டும் அல்லாமல் இதனுடைய மெல்லிய வாசம் ஆழ்ந்த உறக்கத்திற்கு கொண்டு செல்லும் அற்புதமான ஆற்றல் படைத்தது. உடல் வலி, தசை வலி இருப்பவர்கள் ஒரு கைப்பிடி நிறைய நொச்சி இலைகளை பறித்து வெந்நீரில் போட்டு காய வையுங்கள். பின்னர் அந்த நீரை கொண்டு நீங்கள் குளித்து பாருங்கள், அவ்வளவு புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.

- Advertisement -

நொச்சி இலைகளை காய வைத்து பொடித்து அதை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் மூலம் வரக்கூடிய ஆவியை பிடித்து வந்தால் மூக்கடைப்பு, சுவாச பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, தலைபாரம், நீர் கோர்வை ஆகியவை நீங்கி பிரஷ்ஷாக உணரலாம். நொச்சி இலையில் இருந்து கிடைக்கக்கூடிய சாற்றை மூட்டு வலி, முழங்கால் வலி போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் தடவி வந்தால் விரைவாகவே அதிலிருந்து நிவாரணம் காண முடியும். குறிப்பாக சைனஸ் பிரச்சனையை தீர்க்கக் கூடிய அற்புதமான ஆற்றல் இதற்கு உண்டு.

இதை தலையணையாக தயாரித்து கழுத்திற்கு கீழே வைத்து தூங்கினால் கழுத்து வலி, முதுகு வலி போன்ற பிரச்சனைகளும் நீக்கும். காய்ச்சல் இருப்பவர்கள், சளி தொந்தரவு இருப்பவர்கள் நொச்சி இலையை ஆவி பிடிப்பதன் மூலம் விரைவில் அதிலிருந்து குணமடைந்து விடலாம். இது உடலில் இருக்கும் வியர்வையை அதிகப்படியாக வெளியேற்றி உடலை சுத்தம் செய்கிறது. மேலும் இது ஒரு தைலம் போல செயல்படுவதால் நரம்புகள் சுறுசுறுப்பு அடைந்த நம் உடலை அசதியிலிருந்து மீட்டு எடுக்கிறது.

- Advertisement -