எந்த நோய் நொடியும் உங்களை அண்டாமல் இருக்க சாமிக்கு வேண்டி வேப்பிலையை முடிந்து வைப்பது எப்படி?

- Advertisement -

வருமுன் காப்பதே எந்த ஒரு நோய்க்கும் முதல் மருந்தாகும். வந்த பிறகு அழுது ஒரு பிரயோஜனமும் இல்லை. நோய்களை நீக்கும் மாபெரும் மருந்து மனோதிடம் என்று கூறுவார்கள். மனதில் தைரியம் இருந்தால் எந்த நோயையும் எதிர்கொண்டு போராடி ஜெயிக்கலாம். நோய்கள் வரும் முன் இறைவனிடம் வேண்டி வேப்பிலையை முடிந்து வைப்பார்கள் நம் முன்னோர்கள். அதை முறையாக செய்வதன் மூலம் எந்த நோய், நொடிகளும் நம்மை அண்டாது என்பது பக்தர்களுடைய தீவிர நம்பிக்கை. அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

Neem

முந்தைய காலகட்டத்தில் எல்லாம் ஒவ்வொரு சீசனுக்கு ஏற்ப நோய்கள் வரும். வெயில் காலம் வந்தாலே அம்மை நோய், வெப்ப நோய் போன்றவைகள் உடலை பாதிக்கும். அதுபோல குளிர்காலத்தில் சீதளமும், கபமும் பிடித்து மனிதனை பாடாய் படுத்தும். இப்படி ஒவ்வொரு நோய்கள் ஒவ்வொரு காலத்திற்கு ஏற்ப வருவதால் அவர்கள் முன்கூட்டியே இறைவனை வேண்டி எந்த நோய் நொடியும் அண்டாமல் இருக்க காசு முடிந்து வைப்பார்கள். அது அவர்களுடைய நம்பிக்கையை பொருத்ததாக இருந்தது.

- Advertisement -

இப்போது இருக்கும் சூழ்நிலை அப்படி அல்ல! எல்லாக் காலத்திலும் எல்லா நோய் தொற்றும் வருகிறது. இந்த காலத்தில் இந்த நோய் தான் வரும் என்றெல்லாம் கூற முடிவதில்லை. எத்தகைய கொடிய நோயாக இருந்தாலும், கடைசியில் மருத்துவர்களால் கைவிடப்பட்டாலும் நாம் சரணடைவது இறைவன் திருவடியை மட்டும் தான். அவனின்றி அணுவும் அசையாது என்பது போல நமக்கு வரும் நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் இறைவன் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று கவலைகளை விட்டு விட வேண்டும்.

one-rupee0

குடும்பத்தில் சில நேரத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு நோய்கள் ஏற்படும். ஒருவருக்கு வரும் பொழுதே நாம் இப்படி செய்து மனதார வேண்டிக் கொண்டால் அது மற்றவர்களுக்கு வராமல் தடுத்துக் கொள்ளலாம். நோய் வாய்ப்பட்டவர்கள் எளிதில் மீளவும் இந்த பரிஹாரம் நிச்சயம் உதவும். இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டும். ஒரு சுத்தமான வெள்ளைத் துணியை சதுரமாக கத்தரித்து அதை மஞ்சள் நீரில் தோய்த்து உலரவிட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதில் புத்தம் புதிதாக பறித்த வேப்பிலைகள் சிறிதளவு வையுங்கள். வேப்பிலையில் அம்மன் குடியிருப்பதாக நம்பப்பட்டு வருகிறது. வேப்பிலையில் வாசம் செய்யும் திருமகள் சர்வ ரோக நிவாரணியாகவும் செயல்படுவாள். வேப்பிலையுடன் ஒரே ஒரு, ஒரு ரூபாய் நாணயத்தை வையுங்கள். ஒரு ரூபாய் நாணயத்திற்கு மிகுந்த சக்தி உண்டு. பின்னர் அந்த துணியை ஒரு மூட்டையாக கட்டி மஞ்சள் நூல் அல்லது மஞ்சள் துணி கொண்டு மூன்று முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள். இதனை நோய் பாதிக்கப்பட்டவர்கள் இரவு தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்க வேண்டும்.

manjal-mudichu

மூன்று நாட்கள் வரை அதை அப்படியே விட்டு விடுங்கள். பின்னர் அதனை எடுத்துக் கொண்டு போய் அம்மன் கோவிலில் இருக்கும் ஏதாவது ஒரு மரத்திற்கு கீழே வைத்து விடுங்கள். பின்னர் அம்பாளுக்கு நெய் விளக்கு ஏற்றி, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்துவிட்டு வாருங்கள். உங்களால் முடிந்தால் ஏழை எளியவர்களுக்கு மருத்துவ உதவி செய்யுங்கள். இப்படி செய்து வர குடும்பத்தில் எந்த விதமான நோய்களும் இன்றி ஆரோக்கியம் சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை. இறைவனை சரண் அடைவது மற்றும் வருமுன் காப்பதும் ஒன்றே நோயிலிருந்து நம்மை காத்துக் கொள்ளும் வழியாகும்.

- Advertisement -