நீண்ட நாள் நோய்கள் நீங்க சுற்றி போடும் முறை.

suthi poduthal
- Advertisement -

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம் அனைவருக்கும் தெரியும். எவ்வளவு செல்வங்களை நாம் பெற்றாலும் ஆரோக்கியமான உடல் இருந்தால்தான் அந்த செல்வங்களை நம்மால் அனுபவிக்க முடியும். அப்படிப்பட்ட ஆரோக்கியமான உடலை பெறுவதற்கும் நோயிலிருந்து வெளியில் வருவதற்கும் செய்யக்கூடிய ஒரு எளிய பரிகார முறையை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

பொதுவாகவே ஒரு குடும்பத்தில் சிறு குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்கள் சாப்பிட கஷ்டப்படுகிறார்கள் என்றால் திருஷ்டி பட்டுவிட்டது என்று சுத்தி போடும் பழக்கம் நம் முன்னோர்களுக்கு இருக்கிறது. இதை அவர்கள் தினந்தோறும் செய்யக்கூடிய ஒரு வழக்கமான முறையாகவே வைத்திருப்பார்கள். அந்த வகையில் வீட்டில் நோய் வாய் பட்டவர்களின் நோயை படிப்படியாக குறைப்பதற்கு மருத்துவத்துடன் சேர்த்து இந்த முறையில் சுற்றி போட வேண்டும்.

- Advertisement -

என்னதான் மருந்து மாத்திரைகளை எடுத்தாலும் ஒரு சிலருக்கு அந்த நோயின் தாக்குதல் என்பது குறையவே குறையாது. பலமுறை மருத்துவரை பார்த்தாலும் அதனால் எந்த முன்னேற்றமும் இருக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டிலேயே சுற்றி போட்டால் அவர்களின் நோயின் தாக்கம் குறைய ஆரம்பிக்கும். இப்படி சுற்றி போடுவதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன.

கற்பூரத்தை வைத்து சுற்றி போடுதல், உப்பு மிளகாய் வைத்து சுற்றி போடுதல், எலுமிச்சை வைத்து சுற்றி போடுதல் தேங்காய் சுற்றி உடைத்தல், பூசணிக்காய் சுற்றி உடைத்தல் என்று பல வகைகளில் நம் முன்னோர்கள் தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து குறைவதற்கு சுற்றி போட்டு இருக்கிறார்கள். அவற்றில் மிகவும் எளிமையான ஒரு பரிகார முறையை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு முதலில் ஒரு சிறிய அளவில் இருக்கும் மண் சட்டியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஒரு லட்டுவை வைக்க வேண்டும். பிறகு ஒரு முட்டையை வைக்க வேண்டும். அடுத்ததாக அதில் இரண்டு நாணயங்களை வைக்க வேண்டும். ஒரு ரூபாயோ அல்லது ஐந்து ரூபாயோ ஏதாவது இரண்டு நாணயங்களை வைக்க வேண்டும். பிறகு அதில் சிறிது குங்குமத்தை போட்டு நோய் வாய் பட்டவர்களை வலது புறமாக மட்டும் மூன்று முறை சுற்ற வேண்டும்.

சுற்றிய இந்த பொருட்களை நண்பகல் 12 மணிக்கு நான்கு ரோடுகளும் சந்திக்கும் இடத்தில் கொண்டு போய் போட்டுவிட்டு திரும்ப பார்க்காமல் வந்து விட வேண்டும். வீட்டிற்குள் வருவதற்கு முன்பாக முடிந்த அளவிற்கு குளித்துவிட்டு வரவேண்டும். குளிக்க இயலவில்லை என்றால் முகம் கை கால்களை கழுவி விட்டு தலையில் மூன்று முறை தண்ணீரை தெளித்து விட்டு உள்ளே வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் நோய்வாய்ப்பட்டவர்களின் நோயானது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே: வியாபாரம் மற்றும் தொழிலில் ஏற்பட்டிருக்கும் தடைகள் நீங்க பரிகாரம்.

நோய்வாய்ப்பட்டவர்கள் நோய் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு தகுந்த மருத்துவரை அணுகி மருத்துவ ஆலோசனை பெற்று மருந்துகளை முறையாக சாப்பிடுவதுடன் இந்த சுற்றி போடும் முறையையும் பின்பற்றி வர விரைவிலேயே அவர்களின் நோயின் தாக்கம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

- Advertisement -