நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்லுவார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில் நோய்நொடி இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியவில்லை. மருந்து மாத்திரை சாப்பிட்டு தான் உயிர் வாழ வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. சுகர், பிபி, தைராய்டு என்று வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட்டு வாழுகின்றோம்.
உங்களுக்கு இப்படி ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால், வாய்ப்பு கிடைத்தவர்கள் இந்த ஒரு வழிபாட்டை செய்து பாருங்கள். நிச்சயம் நோய்நொடி இல்லாத வாழ்க்கை மருந்து மாத்திரை இல்லாத வாழ்க்கையை வாழ முடியும். கலியுகத்தின் எல்லா வகையான பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய சக்தியும் முருகப்பெருமானுக்கு இருக்கிறது.
அந்த வகையில், நோய்நொடி பிரச்சனையை தீர்க்கக்கூடிய கடவுள் முருகப்பெருமான்தான். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. முருகப்பெருமானை வைத்து தான் இந்த பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. பழனி முருகன் கோவிலில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். புதுசாக சிவப்பு நிற காட்டன் ரவிக்கை துணி எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு முறை துவைத்து காய வைத்து விடுங்கள். பிறகு அந்த துணியை 3 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். சதுர வடிவில் வெட்டிக் கொள்ளுங்கள்.
ஒரு சிவப்பு நிற தூண்டில், 1 கைப்பிடி நெல், இன்னொரு சிவப்பு நிற துணியில் 1 கைப்பிடி தயிர் சாதம், இன்னொரு சிவப்பு நிற துணியில் 1 கைப்பிடி பச்சரிசி, இந்த மூன்று பொருட்களையும் தனித்தனி துண்டுகளில் தனித்தனியாக வைத்து, அந்த சிவப்புத் துணியை ஒரு நூலால் முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த மூன்று முடிச்சுகளுக்கு முன்பாக மூன்று மண் அகல் விளக்கு ஏற்றி வைக்கவும்.
பழனியில் முருகன் கோவிலுக்கு சென்று அந்த முருகனின் சன்னிதானத்தில் இந்த முடிச்சுகளை வைத்து, இந்த முடிச்சுகளுக்கு முன்பாக 3 மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அந்த முடிச்சுகளை அப்படியே அங்கேயே விட்டு விட்டு வரவும்.
பிறகு தான் முக்கியமான விஷயமே இருக்கிறது. பழனியில் இருக்கக்கூடிய முருகனின் சிலைக்கு அபிஷேகங்கள் நடக்கும். அந்த நவபாஷாண சிலை மேலே அபிஷேகத்திற்காக பயன்படுத்தப்பட்ட பால் தண்ணீர் பஞ்சாமிர்தம் ஏதாவது ஒரு பொருள் உங்களுக்கு கிடைக்க வேண்டும். அதிலிருந்து ஒரு சொட்டை நீங்கள் பருகி விட்டால், அன்றிலிருந்து உங்களுக்கு தீராத வியாதிகள் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.
இந்த பரிகாரத்தை நாங்கள் சொல்லவில்லை. கணக்கன்பட்டி சுவாமிகள் அவர்களால், மக்களின் நலனுக்காக சொல்லப்பட்ட பரிகாரம் தான் இது. இதை அவ்வளவு எளிதாக யாராலும் செய்து விட முடியாது. ஆனால் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்து இந்த பரிகாரத்தை செய்து விட்டால் அன்றிலிருந்து உங்களை பிடித்த பிணி விலகிவிடும்.
இதையும் படிக்கலாமே: எதிரிகள் தொல்லை விலக மிளகு பரிகாரம்
இந்த பரிகாரத்தை செய்யும் போது அபிஷேக தீர்த்தத்தை பருகும் போது ‘ஓம் ஸ்ரீ போகர் பெருமானே போற்றி போற்றி! ஓம் ஸ்ரீ சண்முகாய நமஹ! ஓம் முருகா!’ என்ற நாமத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள். உங்கள் உடம்பில் தீர வியாதியாக அமர்ந்து கொண்டிருக்கும், பிரச்சனைகள் எல்லாம் உங்கள் உடம்பை விட்டு விலகி ஓடிவிடும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.