எந்த ராசிக்காரர் என்ன செய்தால் நோயின்றி வாழலாம் தெரியுமா ?

astrology

பெருமளவு செல்வம் சேர்க்கவில்லை என்றாலும் வாழ்வின் இறுதி நாள் வரை நோய்கள் ஏதும் இல்லாமல் வாழ வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். ஜோதிட சாத்திரத்திலும் எந்த ராசியினர் நோய்கள் இன்றி வாழ்வார்கள், மற்ற ராசியினரும் நோய்கள் இன்றி வாழ என்ன செய்ய வேண்டும் என்பதை கூறப்பட்டிருக்கின்றன. அவற்றை குறித்து இங்கு விரிவாக அறிந்து கொள்ளலாம்.

hospital

ஜோதிடத்தில் கூறப்பட்டிருக்கும் பன்னிரண்டு ராசிகளில் “மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம்” ஆகிய ராசியில் பிறந்தவர்கள் எந்த ஒரு நோயாலும் சுலபத்தில் பாதிக்கப்படுவதில்லை. இதில் “மேஷம் மற்றும் விருச்சிகம்” ராசி போர்க்கிரகமான “செவ்வாய்” கிரகத்தின் ஆதிபத்தியம் மிகுந்த ராசிகளாகும். இந்த செவ்வாய் பகவான் தான் மனிதர்களின் ரத்தத்திற்கு காரகனான இருக்கிறார். செவ்வாயின் ஆளுமைக்கு உட்பட்ட மேஷம் மற்றும் விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு அவர்களின் ரத்தத்தில் மற்ற ராசியினரை விட வீரிய தன்மை அதிகம் இருப்பதால் எந்த வகையான வியாதிகளும் சுலபத்தில் அவர்களை அண்டுவதில்லை. அப்படியே அவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டாலும் மிக விரைவிலேயே குணமடைந்து விடுகின்றனர்.

இதே போல் சூரியனின் ஆதிபத்தியம் நிறைந்த சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இயற்கையாகவே மற்ற ராசியினரை விட உடல்வெப்பம் அதிகம் கொண்ட உடலை பெற்றிருப்பார்கள். அதிக வெப்பம் எந்த வகையான நுண்கிருமிகளையும் கொள்ள கூடியது. எனவே சிம்ம ராசியில் பிறந்தவர்ளுக்கு அவர்களின் அதிக உடல் வெப்பமே அவர்களை எந்த ஒரு நோயும் சுலபத்தில் அண்டாதவாறு பாதுகாக்கிறது. இவை பல ஆண்டுகள் ஜோதிட கலையில் அனுபவம் பெற்ற ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது.

hospital

நோய் தீர அனைத்து ராசிக்கான பரிகாரம்:

- Advertisement -

தினந்தோறும் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து நீராடி, முன்னோர்களையும் சூரிய பகவானையும் வணங்குபவர்களுக்கு எத்தகைய நோய்களும் ஏற்படாது.

உங்களால் முடிந்த போதெல்லாம் வறிய நிலையில் உள்ள மக்களுக்கு அன்னதானம் மற்றும் ஆடைகளை தானமாக வழங்குவதும் சிறந்த பரிகாரமாவும்.

தினந்தோறும் தன்வந்திரி பகவானை அவருக்குரிய மந்திரங்களை கூறி துதித்து வந்தாலும் நோய் நொடியற்ற வாழ்க்கை வாழ முடியும்.

dhanvantari

பசுக்கள், பறவைகள் போன்றவற்றிற்கு தினந்தோறும் உணவளிப்பது சிறந்த பரிகாரமாகும்.

நீண்ட நாள் நோய் பாதிப்புகளுக்குகாக மருந்து சாப்பிடுபவர்கள் தேய்பிறை நாட்களில் மருந்து சாப்பிட தொடங்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
சொந்த வீடு யாருக்கெல்லாம் அமையும் அதற்கான பரிகாரங்கள் என்ன

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

English overview:
Here we have Noi theera pariharam in Tamil.