உடம்பில் தீராத நோய்கள் தீர இந்த 2 பொருளை கோவிலில் நோயாளியை சுற்றி திருஷ்டி கழித்து இப்படி செய்யுங்கள்! நோய் தீர சக்தி வாய்ந்த பழங்கால எளிய பரிகாரம்.

uppu-vellam-murugan
- Advertisement -

உடம்பில் இருக்கும் நோய்கள் எல்லாம் தீர பழங்காலத்தில் இது போன்ற திருஷ்டி முறைகளை செய்து வந்தனர். இப்படி செய்யும் பொழுது பிணிகள், ரோகங்கள் எல்லாம் தீரும் என்பது அவர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்றளவிலும் கடைபிடிக்கப்படும் ஆரோக்கியத்திற்காக இந்த திருஷ்டி கழிக்கும் முறையை எப்படி செய்வது? யார் செய்ய வேண்டும்? என்பது போன்ற ஆன்மீகம் சார்ந்த பயனுள்ள தகவல்களை தான் இந்த பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வயிற்று வலி, தலைவலி, உடல் வலி போன்ற பிரச்சனைகளுக்கு எவ்வளவு மருத்துவம் பார்த்தும் சரியாகாமல் போனாலும், இறைவனை நம்புபவர்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைப்பதாக ஒரு நம்பிக்கை உண்டு. அந்த வகையில் இது போன்ற பிரச்சனைகள் தீராத நோய்கள் தீருவதற்கு கோவிலில் சென்று சில எளிய பரிகாரங்கள் செய்வார்கள்.

- Advertisement -

சில கோவில்களில் சன்னதியின் பின்புறத்தில் கல் உப்பையும், மிளகையும் குவித்து வைத்திருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். உடலில் கொப்புளங்கள், புண்கள், புள்ளிகள் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் இது போல உப்பையும், மிளகையும் நோயாளிகளை திருஷ்டி சுற்றி அங்கே போட்டு வைப்பார்கள்.

அதே போல தீராத பல நோய்கள் தீர, நோயாளிகளை கோவிலுக்கு கூட்டி சென்று இந்த எளிய பரிகாரத்தை செய்ய வேண்டும். நீங்கள் செல்லும் கோவிலில் தீர்த்தம் அதாவது குளம் அமையப் பெற்று இருக்க வேண்டும். அந்த மாதிரியான கோவில்களுக்கு சென்று தான், இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். முருகன், பெருமாள், சிவன் என்று எந்த கோவில்களிலும் குளம் இருந்தால் இதை செய்யலாம்.

- Advertisement -

நோயாளிகளை கோவிலுக்கு கூட்டிச் சென்று கையில் கொஞ்சம் மண்டை வெல்லமும், கல் உப்பும் சேர்த்து திருஷ்டி சுற்றி போட வேண்டும். வலப்புறம் மூன்று முறையும், இடப்புறம் மூன்று முறையும் திருஷ்டியை சுற்றிவிட்டு கையில் இருக்கும் வெல்லத்தையும், கல் உப்பையும் கொண்டு போய் கோவில் குளத்தில் இருக்கக் கூடிய தண்ணீரில் கரைத்து விட வேண்டும். பின்னர் அங்கேயே கையை கழுவி கொள்ளுங்கள்.

வெல்லமும், உப்பும் கரைவது போல நம் உடலில் இருக்கக் கூடிய நோய்கள், கட்டிகள், தீராத பிரச்சனைகள், வலிகள் யாவும் தீருவதாக ஐதீகம் உண்டு. நோயாளிகளுக்கு நெருங்கியவர்கள் யார் வேண்டுமானாலும் இதை செய்யலாம். நோயாளிகள் தனக்கு தானே இதை செய்து கொள்ளக் கூடாது. செய்து முடித்த பின்பு கோவில் வளாகத்தை முழுவதுமாக சுற்றி வந்து தரிசனம் செய்து பிரார்த்திக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
கற்றாழை செடியை வீட்டில் வளர்க்கக் கூடாதா? ஏன்? கற்றாழையை வீட்டில் வளர்ப்பதால் என்ன நேரும் தெரியுமா?

அதன் பிறகு கொடி மரத்திற்கு வந்து அங்கு ஒரு கற்பூரத்தை ஏற்றி வைக்க வேண்டும். ஏற்றி வைத்து தன் பிணிகள் யாவும் தீர மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இது போல வேண்டிக் கொண்ட பின்பு வீட்டிற்கு தான் நேராக செல்ல வேண்டும், வேறு எங்கும் செல்லக்கூடாது. இது போல வாரம் ஒரு முறை செய்து வந்தால் விரைவிலேயே உங்களுடைய பிரச்சனைகள் யாவும் தீருவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. பிணி தீர இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது. நீங்களும் இதை செய்து பயனடையலாமே!

- Advertisement -