தீராத கொடிய நோயாக இருந்தாலும், அதை 48 நாட்களில் தீர்க்க, வெறும் 1 ரூபாய் போதுமே! மருந்து மாத்திரைகளிலிருந்து நிரந்தர விடிவுகாலம் கிடைக்கும்.

kadugu

கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தும் சில பேருக்கு இருக்கக்கூடிய சில வியாதிகளை தீர்க்க முடியாது. அப்படிப்பட்ட தீராத வியாதிகளை கூட ஆன்மீக ரீதியாக நம்மால் தீர்க்க முடியும். அதற்கான வழிபாட்டு முறைகளை நம்முடைய முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே சொல்லி விட்டுதான் சென்றுள்ளார்கள். ஆனால் அதை நாம் கடைபிடிப்பது கிடையாது. இதனால் இன்று தீராத பல வியாதிகளுக்கு நிரந்தரமாக மருந்து சாப்பிடும் நிலைமை நமக்கு ஏற்பட்டுள்ளது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்லுவார்கள். ஆனால் இன்று நோயற்ற வாழ்வே நம்மில் ஒருத்தரால் கூட வாழ முடியவில்லை. உடல் ரீதியாக ஏதாவது ஒரு பிரச்சினை இருந்து கொண்டுதான் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கிய குறைபாட்டால் அவதிப்பட்டு தான் வருகின்றோம்.

Nellikai benefits in tamil

ஆன்மீக ரீதியாக சொல்லப்பட்டுள்ள சுலபமான இரண்டு வழிபாட்டு முறைகளைத்தான் இன்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.  ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, 48 நாட்கள் தொடர்ந்து இதை மருந்து சாப்பிடுவது போல சாப்பிட்டால் கூட போதும். உங்களுக்கு எந்த தெய்வம் விருப்பமோ, அந்த இஷ்ட தெய்வத்தையோ அல்லது குலதெய்வத்தையோ வேண்டி இந்த பரிகாரத்தை தொடங்குங்கள்.

தினமும் காலை எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, ‘மலை நெல்லிக்காய்’ ஒன்று, இதை இறைவனுக்கு நிவேதனமாக படைத்து அதன் பின்பு அந்த ஒரு நெல்லிக்காயை நீங்கள் சாப்பிட்டு விடவேண்டும். அவ்வளவு தான் பரிகாரமே! நெல்லிக்காயை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். இருப்பினும் அதை ஏன் இறைவனுக்கு நிவேதனமாக வைக்க வேண்டும்.

இதுதான் ஆன்மீக ரீதியான நம்பிக்கை. அந்த நம்பிக்கையே நமக்கு நல்ல பலனைக் கொடுக்கும். சாதாரணமாக வீட்டில் சமைத்த பொருளை சாப்பிட்டால் அது வெறும் உணவு தான். அதை இறைவனுக்கு படைத்து விட்டு இறைவனுக்கு நிவேதனம் செய்துவிட்டு அதை நாம் சாப்பிட்டால், அது பிரசாதமாக மாறி விடுகிறது. நம் வீட்டில் செய்த சர்க்கரைப் பொங்கலுக்கு ருசி குறைவுதான். அதையே கோவிலில் இருந்து வாங்கி சாப்பிட்டால் அது அமிர்தமாக இருக்கிறது அல்லவா? அதேபோல் தான். முயற்சி செய்து பாருங்கள்.

இரண்டாவதாக உடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வெளியேற்றுவதற்கு கடுகு எண்ணெய்க்கு முன்னுரிமை உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. உப்பு சுற்றி கண் திருஷ்டியை போக்குவார்கள் அல்லவா? அதேபோல் தான் நோய்வாய்பட்டு உள்ளவர்களை, கிழக்கு பார்த்தவாறு அமர வைத்து விடுங்கள். சிறிதளவு கடுகு எண்ணெய், 10 ml அளவு கடுகு எண்ணெய் எடுத்துக் கொண்டால் கூட போதும். அதை தினம்தோறும் நோய்வாய்ப்பட்டவர்களின் தலையை மூன்று முறை இடப்பக்கம் சுற்றவேண்டும். மூன்று முறை வலப்பக்கம் சுற்ற வேண்டும். இப்போது இந்த எண்ணெயைக் கொண்டு போய் கால் படாத இடத்தில் கீழே ஊற்றி விடுங்கள்.

இப்படி செய்தால் உடல் ரீதியான கோளாறுகள் படிப்படியாக குறையும் என்பதும் நம்பிக்கை. உங்களுக்கு இந்த இரண்டு பரிகாரங்களையும் செய்ய முடியுமென்றால் 48 நாட்கள் தொடர்ந்து செய்து பார்த்துவிட்டு அதன் பின்பு என்ன மாறுதல்கள் ஏற்படுகிறது என்பதை நீங்களே உணர்ந்தால்தான் பரிகாரத்தின் மகிமையை உங்களால் புரிந்து கொள்ள முடியும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.