நோய்கள் தீர வாராஹி அம்மன் வழிபாடு

noi neenga
- Advertisement -

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கூறப்படுகிறது. எவ்வளவுதான் செல்வங்கள் இருந்தாலும் அதை அனுபவிப்பதற்கு உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். அது இன்றைய காலகட்டத்தில் இல்லை என்று தான் கூற வேண்டும். வாயில் நுழையாத ஏதேதோ பெயர்களை சொல்லி நோய்கள் வந்துவிட்டது என்று கூறுகிறார்கள். இவை அனைத்தையும் நீக்குவதற்கு நாம் மருத்துவர ஆலோசனை பெற்றாலும் முறையாக தெய்வ வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் விரைவிலேயே அதிலிருந்து வெளிவர முடியும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் வாராகி அம்மனை நினைத்து எப்படி தீபம் ஏற்றி வழிபட்டால் நோய்கள் படிப்படியாக குறையும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

உடல் ஆரோக்கியத்திற்கு காரணமாக விளங்க கூடியவர் சூரிய பகவான். ஆதலால் சூரிய பகவானிற்குரிய கிழமையான ஞாயிற்றுக்கிழமை அன்று வாராகித் தாயை வழிபடும் பொழுது நம் உடல் நலம் ஆரோக்கியம் பெறும் என்று கூறப்படுகிறது. இந்த வழிபாட்டை நாம் பிரம்ம முகூர்த்த வேளையான 4:30 மணி முதல் 6:00 மணிக்குள் அல்லது வாராகி தாயின் வழிபாட்டு நேரமான இரவு 8:00 மணியிலிருந்து 9:00 மணிக்குள் மேற்கொள்ளலாம். அன்றைய தினம் அசைவம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.

- Advertisement -

வாராகி தாயை பஞ்சமுகி என்று கூறுவதால் வாராகி தாய்க்கு நாம் ஐந்து தீபங்களை ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஐந்து முகங்கள் இருக்கும் அகல் விளக்கை வாராகித் தாயாக நினைத்து நாம் ஏற்றலாம். அப்படி ஐந்து முக அகல் விளக்கு இல்லாதவர்கள் ஐந்து அகல் விளக்குகளை ஏற்றலாம். வீட்டில் வாராஹிதாயின் சிலையோ புகைப்படமோ இருந்தால் அதை சுத்தம் செய்த அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு அதற்கு முன்பாக ஒரு தாம்பாளத்தை வைத்து அதன் மேல் பச்சரிசியை நிரப்பி அதற்கு மேல் இந்த அகல் விளக்கை வைக்க வேண்டும்.

புகைப்படமும் சிலையும் இல்லாதவர்கள் நேரடியாக தாம்பாலத்தில் அரிசி நிரப்பி அகல் விளக்கை வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது 5 பஞ்சுத் திரிகளை போட்டு இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இலுப்பை எண்ணெய் இல்லாதவர்கள் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊத்தி தீபம் ஏற்றலாம். இவ்வாறு தீபம் ஏற்றிய பிறகு வாராகிதாயின் 108 போற்றிகளை கூறி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். அதோடு வாராகி தாயருக்கு மாதுளம் பழம் அல்லது நெல்லிக்கனி இவற்றில் ஏதாவது ஒன்றை நிறைவேத்தியமாக வைக்க வேண்டும்.

- Advertisement -

அர்ச்சனை செய்து முடித்த பிறகு கற்பூர தீபாரதனை காட்டி வாராகித் தாயிடம் உடல் நலம் சரியாக வேண்டும் எந்தவித நோய் நொடியும் அண்ட கூடாது என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். விளக்கு தானாக மலை ஏறக்கூடாது என்பதால் எண்ணெய் தீரும் வரை எரியவிட்டு எண்ணெய் தீர்ந்ததும் மாதுளம் பழ குச்சியை வைத்து விளக்கை குளிர வைத்து விட வேண்டும். பிறகு அர்ச்சனை செய்த குங்குமத்தை தினமும் நெற்றியில் இட்டுக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: இருண்டு போன உங்கள் வாழ்க்கையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் பரிகாரம்

வாராகி தாயின் மீது முழு நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அவர்களுக்கு இருக்கக்கூடிய நோய்கள் படிப்படியாக நீங்கும்.

- Advertisement -