வரலட்சுமி நோன்பு அனுஷ்டிப்பவர்கள் வெள்ளிக்கிழமையில் வாங்க வேண்டிய முக்கிய பொருட்கள் என்ன? இந்த பொருட்களை இந்த நாளில் வாங்கினால் செல்வம் மென்மேலும் பெருகுமாம்!

arisi-sangu-varalakshmi
- Advertisement -

வரலட்சுமி நோன்பு அனுஷ்டிப்பவர்கள் பூஜைக்கு தேவையான எல்லாப் பொருட்களையும் முந்தைய நாட்களிலேயே வாங்கி வைத்து விடுவார்கள். ஆனால் பூஜை அன்று வெள்ளிக்கிழமையில் இந்த சில பொருட்களை வாங்குவதால் கிடைக்கக் கூடிய நன்மைகள் அளப்பரியது. வெள்ளிக்கிழமையில் வாங்க வேண்டிய இந்த மங்கல பொருட்களை வரலட்சுமி நோன்பு அன்று வாங்கி வைத்துக் கொண்டால் செல்வமானது மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். எனவே பூஜைக்கு உரிய எல்லா பொருட்களையும் முந்தைய நாட்களில் நீங்கள் வாங்கி வைத்தாலும், ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை மட்டும் அன்றைய நாளில் வாங்கி வந்து வையுங்கள். அது என்னென்ன பொருட்கள்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

Thamboolam

பூஜைக்குரிய மங்கள பொருட்கள் நிறைய தேவைப்படும் என்பதால் அதனை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால் அன்றைய நாள் வெள்ளிக்கிழமையில் நீங்கள் இந்த சில பொருட்களை உங்கள் தேவைக்கு ஒன்றிரண்டு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் முதலாவதாக இருப்பது அரிசி. வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி பூஜை செய்யும் பொழுது வீட்டில் அரிசி வாங்குவது மிகவும் சிறப்பு.

- Advertisement -

பூஜைக்கு கட்டாயம் பச்சரிசி பயன்படுத்த வேண்டும். பூஜையில் இருக்கும் அரிசியை கலசத்துடன் பூஜை முடிந்ததும் நீங்கள் வாங்கி வந்த அரிசி பானையில் இறக்கி வைக்க வேண்டும். மகாலட்சுமி அன்னபூரணி உடன் இணையும் பொழுது தனத்திற்கும், தானியத்திற்கு என்றென்றும் குறைவில்லாத வரம் கிட்டும். எனவே அரிசி பானையில் கலசத்தை இறக்கி வைத்து பின்னர் கலசத்தை கலைப்பார்கள். கலசத்திற்கு தண்ணீர் ஊற்றி வைப்பவர்கள், அதில் தங்கம், வெள்ளி, நவரத்தினம் ஆகிய பொருட்களையும் போடுவது வழக்கம். உங்களிடம் இருக்கும் சிறிய மோதிரமோ, மூக்குத்தியோ எதுவாக இருந்தாலும் மகாலட்சுமி பூஜையின் பொழுது அதனை நன்கு கழுவி சுத்தம் செய்து கலசத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.

manjal-kizhangu

தாம்பூலம் கொடுக்கும் பொழுது குண்டு மஞ்சள் கொடுப்பது மிகவும் நல்லது. எனவே மஞ்சள் தூளை வாங்கிக் கொடுக்காமல் குண்டு மஞ்சளை கொடுங்கள். அடுத்ததாக நீங்கள் வாங்க வேண்டிய பொருட்களில் குங்குமம், சந்தனம் மற்றும் மஞ்சள் கயிறு அன்றைய நாளில் வாங்குவது சிறப்பு. அதே போல பச்சை கற்பூரம் பணத்தை ஈர்க்கும் அற்புத ஆற்றல் படைத்தது. எனவே பச்சை கற்பூரத்தை அன்று வாங்கி வையுங்கள். பூஜை முடிந்ததும் அவற்றைத் துண்டுகளாக்கி நீங்கள் பணம் வைக்கும் இடங்களில் கொஞ்சம் கொஞ்சம் போட்டு வையுங்கள். இதனால் செல்வமானது மென்மேலும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

- Advertisement -

கல் உப்பு மற்றும் பெரிய நெல்லி இந்த இரண்டிலும் மகாலட்சுமி பூரணமாக வாசம் செய்கிறார். குபேரனுக்கு துன்பம் வரும் பொழுது நெல்லி மரத்தை வளர்க்க சொல்லி இழந்த நாடு, நகரத்தை எல்லாம் திரும்பப் பெற்றுக் கொடுத்தார் நாராயணன். எனவே அன்றைய நாளில் நெல்லிக்காய், கல் உப்பு ஆகியவற்றை வாங்குவது சிறப்பு. தாம்பூலம் கொடுக்க ரவிக்கைத் துணி வாங்கும் பொழுது மஞ்சள் துணி ஒன்றை வாங்குங்கள். வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி நோன்பு நாளில் மஞ்சள் துணி வாங்கி அம்மனுக்கோ அல்லது பூஜை அறைக்கோ பயன்படுத்திக் கொள்வது மிகவும் விசேஷம்.

சங்கு

அதே போல புதிதாக சங்கு வைத்து வழிபட நினைப்பவர்கள் வரலட்சுமி நோன்பு அன்று சங்கு வாங்கலாம். சங்கு வழிபாடு முறையாக செய்வது வேண்டும், எனவே உங்களால் முறையான பூஜைகள் அனுஷ்டிக்க முடியும் என்றால் நோன்பு நாளில் சங்கு வாங்கி வைத்து வழிபாடுகளை துவங்கலாம். மேலும் தாம்பூலம் வைத்து கொடுக்கும் பொழுது சிறிய கண்ணாடி ஒன்றை வைத்துக் கொடுப்பது மிகவும் விசேஷம். இந்த கண்ணாடியையும் நீங்கள் அன்றைய நாளில் வாங்கி கொடுப்பது சிறப்பு. எனவே மேற்கூறிய இந்த பொருட்களை எல்லாம் வெள்ளிக்கிழமையில் காலையிலேயே வாங்கி வைத்து பூஜைகளை துவங்குவது நல்லது.

- Advertisement -