ஃப்ரிட்ஜில் எப்போதுமே வதங்கி கொண்டிருக்கும் இந்த காயில், காரசாரமா ஆந்திரா ஸ்டைலில் ஒரு சட்னி அரைப்போமா!

chutney2
- Advertisement -

இந்த காய் வாங்கினால் வீட்டில் இருப்பவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. உடம்புக்கு ஆரோக்கியம் தரும் காய்கறிகளில் இதுவும் ஒன்று. அதுதாங்க நூல் கோல். ஆரோக்கியமாச்சே அப்படின்னு சொல்லி கடையில் பச்சை பசேல் என இந்த காய் விற்கும்போது வாங்கி விடுவோம். ஆனால் வீட்டிற்கு கொண்டுவந்து ஃப்ரிட்ஜில் வைத்தால் என்ன சமைப்பது என்று தெரியாது. ஆந்திரா ஸ்டைலில் காரசாரமாக நூல்கோலில் இப்படி ஒரு சட்னி அரைங்க. அந்த நூல்கோல் வீணாகாமல் காலியாகி விடும். ருசியாக சட்னி சாப்பிட்ட திருப்தியும் நமக்கு இருக்கும். ஆரோக்கியமாக சமைத்த திருப்பியும் நமக்கு இருக்கும்.

செய்முறை

முதலில் மீடியம் சைஸில் இருக்கும் நூல் கோலை தோல் சீவி கொஞ்சம் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, இந்த நூல் கோலை, போட்டு வதக்க வேண்டும். அந்த நூல் கோல் எண்ணெயிலேயே வதங்கி நிறம் மாறி வெந்து வந்துவிடும். அதை தனியாக எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்த அதே கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, உளுந்து 1 டேபிள் ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன், பூண்டு பல் 4, வரமிளகாய் 5, போட்டு வறுத்துக்கோங்க. அடுத்து நறுக்கிய பெரிய வெங்காயம் 1 போட்டு, கொஞ்சமாக உப்பு போட்டு, வதக்கினால் வெங்காயம் பிரவுன் நிறமாக சீக்கிரம் வதங்கி கிடைத்துவிடும். இறுதியாக இதில் கோலிகுண்டு அளவு புளி சேர்த்து நன்றாக சூடு செய்து, அடுப்பை அணைத்து விடுங்கள்.

இப்போது நூல்கோல் தவிர, வதக்கிய மற்ற மசாலா பொருட்களை எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு, ஒரு ஓட்டு ஓட்டிக்கோங்க. பிறகு வதக்கி வைத்திருக்கும் நூல் கோலை இதில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, சட்னிக்கு தேவையான அளவு உப்பு போட்டு, அரைத்தால் சூப்பரான காரசாரமான நூல் கோல் சட்னி தயார். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, கருவேப்பிலை, பெருங்காயம், தாளித்து அந்த தாளிப்பில் இந்த சட்னியை ஊற்றி உடனடியாக அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

கட்டியாக இருக்கும் நூல் கோல் துவையலை சுட சுட சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் ருசியோ ருசி. இட்லி தோசைக்கு தேவை என்றால் இதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து சைடு டிஷ் ஆக பரிமாறுங்கள். அவ்வளவுதான். நூல் கோல் ரெசிபி ரெடி.

இதையும் படிக்கலாமே: முருகன் இட்லி கடை ஃபேமஸ் கொத்தமல்லி சட்னியை அதே டேஸ்ட்ல கிடைக்கணும்னா இந்த பொருள் சேர்த்து தான் அரைக்கணும். வாங்க அது எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

பின் குறிப்பு: இப்படி வாங்கிய நூல்கோலை துவையல் செய்யவும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், வெஜிடபிள் குருமா செய்யும் போது அந்த காய்கறிகளுடன், நூல் கோல் சேர்த்து செய்தால் வெஜிடபிள் குருமா சூப்பராக இருக்கும். வெஜிடபிள் பிரியாணியிலும் இந்த நூல்கோளை சேர்த்து சமைக்கலாம். இந்த நூல் கோலை இனி யாரும் ஒதுக்கி வைக்காதீங்க.

- Advertisement -