நாஸ்ட்ரோடாமஸ் கூறியது போல் 2020 நிலவரப்படி அப்படி என்னதான் நடக்கும்?

nostradamus3

யார் இந்த நாஸ்ட்ரோடாமஸ்? என்று கேட்டால் பெரும்பாலோனார் அவர் ஒரு தீர்க்கதரிசி என்று சுலபமாக கூறி விடுவார்கள். தீர்க்கதரிசி என்றால் புரியும்படி கூற வேண்டுமெனில் எதிர்காலத்தை குறிப்பால் முன் கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் உடையவர் என்று பொருள்படும். அது தன்னுடைய எதிர்காலமாக இருக்கலாம் அல்லது இந்த உலகத்தினுடைய எதிர்காலமாக இருக்கலாம். எதிர்காலத்தில் இதெல்லாம் நடக்கும் என்று கூறினால் யாராவது நம்புவார்களா? நீங்கள் நம்புவீர்களா? கட்டாயம் நம்ப மாட்டோம். ‘நாளை’ இது நடக்கும் என்று கூறினாலே யாரும் நம்பமாட்டார்கள். ஆனால் நாஸ்ட்ரோடாமஸ் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னாளில் நடக்கவிருப்பதை கூட தன்னுடைய குறிப்புகளால் எழுதி வைத்து சென்றுள்ளார்.

nostradamus

அவர் 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். தற்போதைய ஃபிரான்ஸ் நாட்டில் பிறந்து வளர்ந்த அவர் ஒரு மருத்துவர். அந்த காலக்கட்டத்தில் வைத்தியமும், ஜோசியமும் மக்களுக்கு கூறி வந்தாராம். இவர் டிசம்பர் மாதம் 1503 இல் பிறந்தவர். அதே போல் ஜூலை மாதம் 1566 இல் மரணம் அடைந்தார் என்று வரலாறு கூறுகிறது. இவரின் தீர்க்கதரிசனம் தன்னுடைய மரணத்தையே கூறும் அளவிற்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் எதையும் நேரடியாக கூறுவதில்லை. மாறாக குறிப்பால் உணர்த்துவார். அவரிடம் வழக்கமாக வரும் மக்களிடம் ‘நாளை நான் இருக்க மாட்டேன் வராதீர்கள்’, என்று கூறியுள்ளார். மறுநாள் அவரின் மரணம் நிகழ்ந்திருக்கிறது.

நாஸ்ட்ரோடாமஸ் எழுதிய குறிப்புகளில் உள்ள பல நிகழ்வுகள் உலகத்தில் உண்மையாக நடந்தது என்பது தான் விளங்க முடியாத வியந்து பார்க்கும் ஒன்றாக இருந்து வருகிறது. இது போன்ற எதிர்கால தகவல்களை பலர் கூறிருந்தாலும் அவைகளில் பல பலிக்காமல் இருந்ததால் பெரிதாக பார்க்கப்படவில்லை. ஆனால் நாஸ்ட்ரோடாமஸ் குறிப்புகள் அப்படி அல்ல. அவர் அப்படி என்ன தான் கூறினார் என்று இனி இப்பதிவில் காண்போம்.

nostradamus1

முதல் மற்றும் இரண்டாம் போர் நடக்கும், இரண்டாம் உலகப்போரில் எந்த நாடு வெற்றி பெறுகிறதோ அந்த நாடு அடுத்து நூறு வருடங்களுக்கு வல்லரசாக இருக்கும், இன்றைய ஜெர்மனி நாட்டில் கொடூரமான ஒரு தலைவன் தோன்றுவான் அவன் மூலமாகவே அந்த நாடு தோற்கும் மேலும் நம் இந்தியா யாருடைய ஆளுகையின் கீழ் செல்லும் என்றும் பின்னர் எப்போது சுதந்திரம் அடையும் என்பதையும் கூறி இருந்தார். பின்னர் அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதல்கள் பற்றிய குறிப்புகளும், அந்த நாட்டை ஒரு கறுப்பர் ஆள்வார் என்றும் அவரே கடைசி கறுப்பின தலைவன் என்றும் அவருக்கு பிறகு ஆட்சியில் அமர்பவருக்கு மர்ம நோய் ஒன்று தாக்கும் என்றும் குறிப்புகளில் இடம் பெற்றிருந்தது. இது மட்டுமல்ல அவர் கூறிய இன்னும் பல முக்கிய நிகழ்வுகள் உலகத்தில் நடந்துள்ளன.

- Advertisement -

அமெரிக்காவில் உருவாக இருக்கும் ஒரு அரக்கனால் மூன்றாம் உலகப்போர் மூளும் என்றும், உலக அமைதியை நிலைநாட்ட ஒருவன் இந்தியாவிலும், ரஷ்யாவிலும் தோன்றுவான் என்றும் குறிப்புகள் உள்ளது. அது மட்டுமல்லாமல் நம் இந்தியாவில் தோன்ற இருக்கும் அவனால் மூன்றாம் உலகப் போர் முடிவுக்கு வரும் என்றும், ரஷ்ய, இந்திய தலைவர்கள் ஒன்று சேர்ந்து உலகத்தை ஆள்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 2020ஐ தாண்டி நடக்கும். அப்படி பார்த்தால் இனி வரும் காலங்களில் தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 2020ஐ கடந்து மனிதன் நிலவில் வாழ்வான், இயற்கை பேரிடர்கள் அதிகம் நடக்கும், விலங்குகளுடன் மனிதன் பேசுவான், காட்டுத்தீ மற்றும் காற்று மாசு வேகமாக பரவும் என்றும் குறிப்புகள் உள்ளது.

nostradamus2

இது போன்ற குறிப்புகள் அனைத்தும் நாஸ்ட்ரோடாமஸ் குறியீடுகளாக உலகத்தின் நிலப்பரப்பின் அடிப்படையில் தன்னுடைய புத்தகத்தில் எழுதியிருப்பார். அனைத்து துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களால் மட்டுமே உணரும் வண்ணம் இவருடைய குறிப்புகள் இருக்கும். இதுவரை பலித்து வந்த இவருடைய தீர்க்க தரிசனம் இனியும் தொடருமா? என்று உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றது. இப்பதிவில் இருப்பது கொஞ்சம் தான். அவருடைய எதிர்கால குறிப்புகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன. அவையெல்லாம் நடக்குமா? என்று நாமும் பொறுத்திருந்து காணலாம்.

இதையும் படிக்கலாமே
வாழ்க்கையில் சாதிப்பதற்கு வயது முட்டுக்கட்டையாக இருக்கிறதா? இந்த ஐந்து நபரை பார்த்தால் உங்கள் எண்ணம் மாறிவிடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான கட்டுரைகளை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Nostradamus predictions 2020 in Tamil. Nostradamus predictions Tamil. Nostradamus Tamil 2020. Nostradamus in Tamil. Nostradamus tamil predictions.