நவம்பர் மாத ராசி பலன் 2023 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

nov rasipalan
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கம் நிறைந்த மாதமாக திகழப்போகிறது. பணவரவு தாராளமாக இருக்கும். அதனால் சொத்துக்கள் வாங்கும் எண்ணம் ஏற்படும். வீடு, வண்டி, வாகனம், நகைகள் போன்ற சொத்துக்களை வாங்கி சேர்க்கும் யோகம் உண்டாகும். அதே சமயம் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி சுகமான வாழ்க்கை அமையும். மன நிம்மதி ஏற்படும். ஆனால் பிறரிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். பேச்சுவார்த்தையால் பிரச்சினைகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. உடல் நலனில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

வேலையை பொருத்தவரை வேலை பளு குறைவாகவே இருக்கும். சிலருக்கு வேலை தொடர்பாக வெளியூர் செல்வதற்குரிய வாய்ப்புகளும் ஏற்படும். எதிர்பார்த்து இருந்த சலுகைகள் பதவி உயர்வு இடமாற்றம் ஊதிய உயர்வு போன்றவை ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை லாபம் திருப்திகரமாக இருக்கும். தொழில் நல்ல முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும். அதேசமயம் புதிதாக எந்தவித முதலீடுகளையும் செய்வதை தவிர்த்து விட வேண்டும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பாராட்டை பெரும் மாதமாக திகழப் போகிறது. பணவரவு அதிகமாகவே இருக்கும். பிள்ளைகள் ரீதியாக சுப செலவுகள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே இருந்து வந்த உடல் உபாதைகள் சற்று தலை தூக்க ஆரம்பிக்கும். கவனம் தேவை. திருமண பேச்சுக்கள் கைகூடி வரும். பிரச்சினைகளை சமாளித்து அதில் வெற்றியும் காண்பீர்கள்.

வேலையை பொருத்தவரை வேலை பளு சற்று அதிகமாகவே இருக்கும். எதிர்பார்த்து வந்த இடமாற்றம் நடைபெறுவது தாமதமாகும். உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவதற்குரிய வாய்ப்புகளும் சிலருக்கு இருக்கிறது. தொழிலை பொருத்தவரை லாபம் திருப்திகரமாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஆனால் அவை நடைபெறுவதற்கு சில காலம் எடுத்துக் கொள்ளும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நவம்பர் மாதம் வெற்றி நிறைந்த மாதமாக திகழப்போகிறது. பண வரவு திருப்திகரமாக இருக்கும். புதிதாக சொத்து, நகை, வண்டி, வாகனம் போன்றவற்றை வாங்குவதற்குரிய யோகம் சிலருக்கு இருக்கிறது. பழைய வீட்டை அல்லது வண்டியை பழுது பார்த்து புதிதாக மாற்றக்கூடிய சூழலும் சிலருக்கு இருக்கிறது. கணவன் மனைவிக்குள் நல்ல அன்யோன்யம் இருக்கும். திருமணத்தை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் நலனை பொருத்தவரை சிறிது கவனமாகவே இருக்க வேண்டும். திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. இதுவரை தடைபட்டிருந்த வேலை மாற்றம் சிறப்பாக நடைபெறும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலை பொருத்தவரை எதிர்பாராத லாபம் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. கடந்த காலத்தில் செய்த முதலீட்டிற்கு நல்ல பலன் கிடைக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு மகாலட்சுமி தாயாரை வழிபட வேண்டும்.

- Advertisement -

கடகம்

கடக ராசி காரர்களுக்கு இந்த மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பணவரவு ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். செலவுகள் அதிகம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும் அனுசரித்தும் செல்ல வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பல் மற்றும் கண் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். வண்டி வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு விபத்துகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது.

வேலையை பொருத்தவரை வேலை பளு சற்று அதிகமாக இருக்கும். வேலையை விட்டுவிட்டு புதிதாக வேலை தேட முயற்சி செய்பவர்கள் இந்த மாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். உயர் அதிகாரிகளுடன் பேசும் பொழுது கவனத்தை கையாள வேண்டும். தொழிலைப் பொருத்தவரை உழைப்பிற்கு ஏற்ற ஆதாயமே கிடைக்கும். முதலீடுகள் செய்யும் பொழுது எச்சரிக்கையுடன் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய வேண்டும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நவம்பர் மாதம் தைரியம் நிறைந்த மாதமாக திகழப்போகிறது. தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். சிலருக்கு பல நாள் ஆசைகள் நிறைவேறும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் அந்த பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். திருமணத்தடை விலகும். குழந்தை பாக்கியம் ஏற்படும். செல்வ செழிப்பு அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. உடல் நலனில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். உடனே மருத்துவரை அணுகினால் பெரிய பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையை ஏற்படும். என்றாலும் யாரையும் நம்பி எந்த பொறுப்பையும் தராமல் இருப்பது நன்மை தரும். தொழிலை பொருத்தவரை லாபகரமாக இருக்கும். தொழிலை முன்னேற்ற பாதை நோக்கி நகர்த்த முயற்சி செய்வீர்கள். அந்த முயற்சியில் வெற்றியும் அடைவீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சமயோகித புத்தியுடன் செயலாற்றக்கூடிய மாதமாக திகழப்போகிறது. பணவரவு ஓரளவிற்கு சீராக இருக்கும். செலவுக்கு ஏற்ற வரவு ஏற்படும். மனதில் புதுவித தைரியம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமணம் பேச்சு வார்த்தைகளில் சாதகமான நிலை ஏற்படும். உடல் நலனில் சிறிது கவனம் தேவை. சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. பிரச்சனைகள் ஏற்படும் பொழுது சமயோகித புத்தியுடன் செயலாற்றி அந்த பிரச்சனைகளில் இருந்து சாமர்த்தியமாக வெளியில் வருவீர்கள்.

வேலையை பொருத்தவரை வேலை பளு சற்று அதிகமாகவே இருக்கும். வேலை மாற்றம் செய்ய விரும்புவோர் இந்த மாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். உயர் அதிகாரிகளிடமும் உடன் பணிபுரிபவர்களிடமும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இருக்காது. கடினமாக உழைத்தால்தான் நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சுயநலமற்று செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பணவரவு தாராளமாக இருக்கும். செலவுகளும் தாராளமாக இருக்கும். செலவை குறைத்துக் கொண்டு சேமிப்பு செய்யும் எண்ணத்தை கொண்டு வர வேண்டும். அதனால் நகை, வண்டி, வாகனம், வீடு, மனை போன்றவற்றில் முதலீடு செய்வது போல் பார்த்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும் என்றாலும் அவ்வப்பொழுது சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படும். இதுவரை இருந்து வந்த உடல்நல பாதிப்புகள் நீங்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே தென்படுகிறது. தொழிலைப் பொருத்தவரை லாபம் திருப்திகரமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களுக்கு ஆதாயம் சேர்ப்பது போல் செயலாற்றினால் நன்மை உண்டாகும். முதலீடுகள் செய்யும் பொழுது எதிர்காலத்தை யோசித்து செய்தால் வெற்றி நிச்சயம். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப் போகிறது. பணவரவு ஓரளவுக்கு சாதகமாக இருந்தாலும் அதைவிட அதிகமாக செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு ஆளவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் பெரிதாக தோன்ற வாய்ப்புகள் இருப்பதால் அமைதியை கையாளுவது மிகவும் நன்மை தரும். உடன் இருப்பவர்களால் பிரச்சனைகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. வீண் வாக்குவாதங்களை தவிர்த்துக் கொள்வதன் மூலம் பிரச்சனைகளை குறைக்க முடியும்.

வேலையை பொருத்தவரை வேலை பளு அதிகமாக இருக்கும். வேலையில் கவனம் செலுத்தினால்தான் பிரச்சனைகள் வருவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். உயர் அதிகாரிகளிடம் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் பேச வேண்டும். தொழிலைப் பொருத்தவரை லாபம் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கிறது. எந்தவித முதலீட்டையும் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக திகழப்போகிறது. பணவரவு தாராளமாக இருக்கும். அதனால் சொத்துக்கள் வாங்குவதில் முதலீடு செய்வீர்கள். நினைத்த காரியங்களை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. திருமண தடை விலகி விரைவிலேயே திருமண சம்பந்தப்பட்ட நல்ல செய்திகள் வந்து சேரும். உடல் நலம் சீராக இருக்கும். எனினும் தியானம் செய்வதை முறையாக பின்பற்ற வேண்டும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையை தென்படுகிறது. இதுவரை தடைப்பட்டு இருந்த அனைத்து சலுகைகளும் கிடைக்கப்பெறும். நல்ல வேலை கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர்ப்பாராத லாபம் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதனால் தொழில் முன்னேற்ற அடையும். தொழிலை விரிவு படுத்த நினைப்பவர்களுக்கும் புதிய தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கும் இந்த மாதம் சாதகமான மாதமாகவே திகழப்போகிறது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் புதிய முயற்சிகள் வெற்றி அடையும் மாதம் திகழப்போகிறது. பணவரவு சீராக இருக்கும். வரவிற்கு ஏற்ற செலவு ஏற்படும். சேமிக்க முயற்சி செய்தால் மட்டுமே சேமிக்க முடியும். கணவன் மனைவிக்குள் மூன்றாவது நபரால் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் குடும்ப விஷயத்தை பிறரிடம் கூறுவதை தவிர்ப்பது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறு உடல் உபாதைகள் கூட பெரிய அளவில் பிரச்சினைகளை உண்டு பண்ணலாம். எந்த காரியத்தை செய்வதாக இருந்தாலும் தைரியத்துடன் செய்வதன் மூலம் கண்டிப்பான முறையில் வெற்றி கிடைக்கும். நல்ல மாற்றங்களை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சாதகமான முடிவுகள் வந்து சேரும். சிலருக்கு திருமண யோகம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது.

வேலையை பொருத்தவரை புதிதாக வேலை தேடுபவர்களுக்கும் வேறு வேலைக்கு மாற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் சாதகமான காலமாக இந்த காலம் அமையும். மேலும் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை லாபம் திருப்திகரமாக இருக்கும். தொழிலில் புதிய முயற்சிகள் வெற்றி அடையும். பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நவம்பர் மாதம் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பணவரவு திருப்திகரமாக இருக்காது. அதனால் குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் அமைதியை கடைபிடித்து பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும். உடல் நலனில் இருந்து வந்த கோளாறுகள் படிப்படியாக நீங்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்தவித வாக்குறுதியும் அளிக்கக்கூடாது. ஒரு செயலை செய்வதற்கு முன்பாக ஒரு முறைக்கு பலமுறை யோசித்து பிறகு தான் செயல்பட வேண்டும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் அமைதியாக செல்வதே சாலச் சிறந்தது.

வேலையை பொருத்தவரை வேலை பளு அதிகமாக இருக்கும். எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் நல்ல பெயர் கிடைப்பது சிரமமே. புதிய வேலைக்கு எந்தவித முயற்சியும் செய்யாமல் இருப்பது நன்மை தரும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. புதிய முதலீடுகள் எதையும் செய்யாமல் இருப்பது நன்மை தரும். பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். உடன் இருப்பவர்களுடன் சகிப்புத்தன்மையுடன் இருந்தால் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு கால பைரவரை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த நவம்பர் மாதம் பிரச்சனைகளை சமாளிக்கும் மாதமாக திகழப் போகிறது. பண வரவு ஓரளவிற்கு சாதகமாக இருக்கும். எனினும் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் சேமிப்புகள் கரையும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து புரிந்து கொண்டு சென்றால் பிரச்சனைகள் பெரிதாவதை தவிர்க்க முடியும். உடல் நலனில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் மருத்துவ செலவு செய்வதற்குரிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். திருமண காரியங்களில் தடைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இக்கட்டான சூழ்நிலையில் நண்பர்களும் உறவினர்களும் உதவிக்கரம் நீட்டுவார்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

வேலையை பொருத்தவரை வேலை பளு அதிகமாகவே இருக்கும். இருப்பினும் வேலையை கவனமாக செய்தால் பிரச்சினைகள் எதுவும் வராமல் பார்த்துக் கொள்ள முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது. புதிய முயற்சிகள் செய்வதை தவிர்க்க வேண்டும். ஆனால் திட்டமிடுதல் என்பது சிறப்பாக இருந்தால் பிற்கால தொழில் முன்னேற்றம் நன்றாக இருக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.

- Advertisement -