நவம்பர் மாத ராசிபலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

November matha rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சிறப்பானதொரு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் போகும் மாதமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் படிப்படியாக உயரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் நினைப்பதை சாதித்து காட்ட கூடிய வல்லமை பிறக்கும். உங்கள் குடும்பத்தினரின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். பெண்களுக்கு புதிய தன்னம்பிக்கை பிறக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. திங்கட் கிழமையில் சிவ வழிபாடு செய்து வர நன்மைகள் நடக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் எதிர்பாராத திடீர் நன்மைகள் நடக்கும் அற்புதமான மாதமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு புதிய நவீன உபகரணங்களை வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிக் கொணர்வதற்கு உரிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். புதிய நட்பு வட்டம் விரியும். பெண்களுக்கு இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் குறையும். செவ்வாய் கிழமையில் முருக வழிபாடு செய்து வர நன்மைகள் நடக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சிறப்பானதொரு மாதமாக அமையப் போகின்றது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டும் அற்புதமான வாய்ப்புகளை பெறுவீர்கள். கூட்டாளிகளுடன் இருந்து வந்த மனக் கசப்புகள் மறையும். புதிய தொழில் துவங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு அனுகூல [பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற வார்த்தைகளை பிரயோகிப்பது பின்பு தேவையற்ற மன சங்கடங்களை சந்திக்க நேரும் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள். வியாழக்கிழமையில் குரு வழிபாடு செய்துவர நல்லதே நடக்கும்.

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சில விஷயங்களை ஈடுபடும் முன்பு ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்துவிட்டு செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் பங்கிற்கு கூடுதல் உழைப்பைக் கொடுத்து மற்றவர்களிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பொருளாதார ஏற்றம் பெற விடா முயற்சி செய்வது நல்லது. ஆரோக்கியம் சீராவதில் இருந்து வந்த தடைகள் விலகும். குறை தீர்க்கும் விநாயகரை வழிபடுங்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் பெருகும். எவ்வளவு தடைகள் வந்தாலும் போட்டிகள் பொறாமைகள் தாண்டிய முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் மதிப்பு கொடுத்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் இருந்து வந்த சுப காரிய தடைகள் விலகி சிறப்பான பலன்களைக் கொடுக்க போகிறது. பெண்களுக்கு குழப்பங்கள் நீங்கி உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியம் சீராகி வரும். சக்கரத்தாழ்வாரை வழிபட சங்கடங்கள் தீரும்.

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அமோகமான மாதமாக இருக்க போகிறது. இதுவரை உங்களை விட்டு புரிந்து கொள்ளாமல் சென்ற உறவினர்கள் கூட மீண்டும் உங்களை வந்தடையும் வாய்ப்புகள் அமையும். சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். புதிதாக தொழில் துவங்குபவர்கள் நல்ல பலன்கள் உண்டாகும். பெரியவர்களின் பேச்சுக்கு மரியாதை கொடுத்து நடந்து கொண்டால் முன்னேற்றம் நிச்சயம். பொருளாதார ரீதியான தடைகள் விலகி சுபிட்சம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் உடைய ஆதரவு கிடைத்து வேலை நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகளும் உண்டாகும். பெண்களுக்கு குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். ராகு கால வேளையில் துர்க்கை பூஜை செய்து வர நன்மைகள் நடக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நல்ல மாதமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை அடையும் வாய்ப்புகளை பெறுவீர்கள். தேவையற்ற பிரச்சனைகளை தவிர்த்து உங்கள் வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் பாக்கியம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் அக்கறையுடன் செயல்படுவீர்கள். உங்கள் திறமைக்கு உரிய பாராட்டுகளைப் பெறுவீர்கள். கணவன் மனைவி பிரச்சனைகள் தீர்ந்து குடும்பத்தில் அமைதி நிலவும். பெண்களுக்கு மகிழ்ச்சியான மாதமாக அமையும். வெள்ளிக்கிழமையில் சுக்கிர வழிபாடு செய்துவர நன்மைகள் நடக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டும் மாதமாக இருக்கிறது. உங்கள் சிந்தனைகள் நேர்மறையாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அனுகூல பலன் உண்டாகும். பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். வசூலாகாத பழைய தொகைகள் வசூலாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை அடைவதில் இருந்து வந்த இடையூறுகள் நீங்கும். பெண்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். செவ்வாய் கிழமையில் துர்க்கை வழிபாடு செய்து வர நன்மைகள் நடக்கும்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் எதிர்பார்க்கும் தனலாபம் கிடைக்கும் அற்புதமான மாதமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் சில சமயங்களில் நேர்மறையாக நடப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு என்பதால் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளால் உடைய பாராட்டுகள் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறையாக இருப்பது நல்லது. விக்னங்களை தீர்க்கும் விநாயகரை வழிபடுதல் நன்மைகள் கொடுக்கும்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் மனமகிழும் சில நிகழ்வுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொலை தூர இடங்களில் இருந்து சுப செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த நல்ல செய்தி ஒன்று கிடைக்க இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இட மாற்றம் குறித்த விஷயங்கள் சாதகப்பலன் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே நடந்து வந்த பனிப்போர் தீர்ந்து ஒற்றுமை பலப்படும். பெண்களுக்கு புதிதாக செய்யும் விஷயங்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்க போகிறது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. புதன்கிழமையில் புத பகவான் வழிபாடு செய்து வாருங்கள் நன்மைகள் நடக்கும்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நல்ல மாதமாக அமைய இருக்கிறது. உங்கள் மனதில் இருந்து வந்த சில கேள்விகளுக்கான விடை கிடைக்கப் போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் தனலாபம் பெருகும். பழைய சரக்குகள் விற்பனை ஆகும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதகப் பலனை பெறுவீர்கள். நீண்ட நாள் நண்பர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி சுமை அதிகரித்து காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைப்பதற்கு கால தாமதம் உண்டாகலாம். ஆரோக்யம் சிறப்பாக அமைய இருக்கிறது. சனிக்கிழமையில் பெருமாள் வழிபாடு செய்து வர நன்மை நடக்கும்.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும் மாதமாக அமைய இருக்கிறது. நீங்கள் என்றோ செய்த புண்ணிய காரியங்களுக்கான பலன்களை பெறக்கூடிய சந்தர்ப்பங்களை பெறுவீர்கள். வியாபார ரீதியான உங்கள் முன்னேற்றம் சிறப்பாக அமையும். வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பு பெறுவீர்கள். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படாமல் சிந்தித்து செயல்பட்டால் உங்கள் திறமைகள் வெளி வரும். பெண்கள் சுயமாக சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் படிப்படியாக குறையும். ஞாயிற்றுக் கிழமையில் சூரிய வழிபாடு, சூரிய நமஸ்காரம் செய்யுங்கள் நன்மைகள் நடக்கும்.

- Advertisement -